அரியணை ஏறும் அரசரைப் பார்க்க வந்த பேய்! மர்ம உருவத்தைப் பார்த்த பார்வையாளர்கள்

Grim Reaper At coronation: மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் பயங்கரமான 'பேய் போன்ற' உருவத்தைக் கண்ட  பார்வையாளர்கள் 

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 7, 2023, 09:19 PM IST
  • மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா
  • மன்னரின் அரியணை ஏறும் விழாவில் மர்ம உருவம்
  • இணையத்தில் சலசலப்பு
அரியணை ஏறும் அரசரைப் பார்க்க வந்த பேய்! மர்ம உருவத்தைப் பார்த்த பார்வையாளர்கள் title=

லண்டன்: மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் கழுகுப் பார்வை கொண்ட பார்வையாளர்கள் பயங்கரமான 'பேய் போன்ற' உருவத்தைக் கண்டனர். மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற வரலாற்றில் முக்கிய நிகழ்வு நவீன யுகத்தின் புதிய ராஜா அல்லது ராணியைக் காணவும், முடிசூட்டு விழாவைக் காணவும் மக்கள் ஆர்வத்துடன் கலந்துக் கொண்டனர்.

இருப்பினும், முடிசூட்டு விழாவின் போது ஒரு மர்ம உருவம் அரங்குகளில் பதுங்கியிருந்ததால், மகிழ்ச்சியான நிகழ்வாகத் தொடங்கியது இப்போது இருண்ட திருப்பத்தை எடுத்துள்ளது.

இந்த வினோதமான உருவத்தின் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன, மேலும் இந்த முடிசூட்டு விழாவைக் காண வந்தது யார் என்ர கேள்வியை அனைவரும் கேட்கிறேன்.

சனிக்கிழமையன்று, 70 ஆண்டுகளுக்குப் பிறகு, நாட்டின் முதல் முடிசூட்டு விழாவில், மூன்றாம் சார்லஸ் ஐக்கிய இராச்சியத்தின் மன்னராக சிம்மாசனம் ஏறினார். 1953 க்குப் பிறகு ஒரு பிரிட்டிஷ் மன்னரின் முதல் முடிசூட்டு விழாவைக் காண, லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் மக்கள் கூடியிருந்தனர்.

இந்த நிகழ்வு உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்காக நேரலையில் ஒளிபரப்பப்பட்டது. அப்போது, கழுகு கண்கள் கொண்ட இணைய பயனர்கள் நிகழ்வின் போது ஒரு பயங்கரமான உருவத்தைக் கண்டுள்ளனர், மேலும் அதன் பதிவுகள் வைரலாகி வருகின்றன.

மேலும் படிக்க | Coronation: மனைவி! ராணி! மகாராணி! ஒரு காதலியின் இங்கிலாந்து சிம்மாசனப் பயணம்

அபேயில் உள்ள முடிசூட்டு விழாவை வீடியோக்கள் காட்டுகின்றன. இருப்பினும், சம்பிரதாய அணிவகுப்பைத் தொடர்ந்து, மண்டபத்திற்கு வெளியே உள்ள பத்தியில் ஒரு அரிவாளைப் போன்ற ஒன்றைச் சுமந்து கொண்டு ஒரு முகமூடி அணிந்த, ஆடை அணிந்த உருவம் சுற்றித் திரிவதை இணையத்தில் கண்டனர்.

இது மதகுருக்களின் உறுப்பினராக இருப்பதற்கான வாய்ப்பு அதிகம் என்றாலும், இது சதியாக இருக்குமா என்ற கேள்விகளை எழுப்பியது. இந்த தோற்றம் மரணத்தின் முன்னோடியான கிரிம் ரீப்பர் என்று பலரும் கூறுகின்றனர்..

ஞாயிற்றுக்கிழமை மாலை மேற்கு லண்டனில் உள்ள வின்ட்சர் கோட்டையில் ஒரு இசை நிகழ்ச்சியை உள்ளடக்கிய மூன்று நாட்கள் கொண்டாட்டங்களின் சிறப்பம்சமாக முடிசூட்டு விழா அமைந்தது.

மேலும் படிக்க | Coronation: இன்று பிரிட்டன் சரித்திரத்தில் மிக முக்கிய நாள்! 21ம் நூற்றாண்டு முடிசூட்டு விழா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News