Coronation: மனைவி! ராணி! மகாராணி! ஒரு காதலியின் இங்கிலாந்து சிம்மாசனப் பயணம்

Mistress to Queen Consort: மக்கள் இளவரசி டயானா மீது கொண்டிருந்த அன்பும், அவரை மன்னர் சார்லஸ் பிரிவதற்கு காரணம் என்பதும் இன்று மகுடம் சூடும் மகாராணிக்கு மிகப் பெரிய சவாலாக இருந்தாலும் இன்று அவரது காதல், அவரை நாட்டின் ராணியாக மாற்றியிருக்கிறது

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 6, 2023, 08:21 AM IST
  • அன்று காதல் ராணி இன்று பிரிட்டனின் மகாராணி
  • காதலி முதல் இங்கிலாந்து சிம்மாசனம் வரை
  • கமிலா பார்க்கர் பவுல்ஸின் காதல் போராட்டம்
Coronation: மனைவி! ராணி! மகாராணி! ஒரு காதலியின் இங்கிலாந்து சிம்மாசனப் பயணம் title=

காதலுக்கான போராட்டத்தில் மட்டுமல்ல, நாட்டின் மகாராணி என்ற போட்டியிலும் வெற்றி பெற்று மகுடம் சூடும் ‘பிரிட்டன் மகாராணி’ கமீலா பார்க்கரின் சிம்மாசனத்திற்கான பயணம் சாதாரணமானது. கிரேட் பிரிட்டனின் ராணி கமிலா பார்க்கர் பவுல்ஸ், இந்தப் பயணத்தை சிவப்பு கம்பளத்தில் நடந்து எட்டவில்லை. இளவரசி டயானா மீது மக்கள் கொண்டிருந்த அன்பும், அவரை மன்னர் சார்லஸ் பிரிவதற்கு காரணம் கமிலா என்பதும் இன்று மகுடம் சூடும் மகாராணிக்கு மிகப் பெரிய சவாலாக இருந்தது.

இளவரசி டயானாவின் கணவர்

சார்லஸை திருமணம் செய்து கொண்ட மறைந்த இளவரசி டயானாவுக்கு கணவரின் காதல் விவகாரம் பெரும் மனவேதனையை ஏற்படுத்தியதால், பொதுமக்களால் எப்போதும் "மற்ற பெண்" என்று ஒதுக்கப்பட்ட பெண்ணாக இருந்த கமிலா, தற்போது நாட்டின் ராணியாக முடி சூடுகிறார்.

இளவரசரின் காதலி கமிலா பார்க்கர் பவுல்ஸ்

மக்களின் மனதில் இடமே பெறாத கமீலா, பல பொது நிகழ்ச்சிகளில் அவமானங்களை எதிர்கொண்டிருக்கிறார். ஆனால், இப்போது இறுதியாக சார்லஸுடனான தனது உறவுக்கு சட்டப்பூர்வ அந்தஸ்தாக மகாராணியாக மகுடம் சூட்டப்படுகிறார் திருமதி கமிலா சார்லஸ் ஆன காதலி கமிலா பார்க்கர் பவுல்ஸ்.

பிரிட்டன் மகாராணி கமிலாவின் பின்னணி
கமிலா ரோஸ்மேரி ஷாண்ட் ஜூலை 17, 1947 இல் லண்டனில் பிறந்தார். கமிலா மிகவும் செல்வ செழிப்புள்ள பணக்காரக் குழும்பத்தில் பிறந்தவர். அவரது குழந்தைப் பருவம் வேடிக்கையாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. கமிலா வேடிக்கையாக பேசுபவர், வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவிக்கும் குணம் கொண்டவர்.

மேலும் படிக்க | ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரம்... டொனால்டு டிரம்ப் மீது கிரிமினல் வழக்கு!

செல்வந்தர்களின் குடும்பத்தை சேர்ந்த கமிலாவால், சார்லஸுடன் நெருக்கமாக பழக முடிந்தது. இருவருக்கும் இடையில் அன்பு இருந்தது. ஆனால், இராணுவ குதிரைப்படை அதிகாரி ஆண்ட்ரூ பார்க்கர் பவுல்ஸை கமிலா காதலித்தவர் என்பதும், அரச குடும்பத்துடன் சம்பந்தம் வைத்துக் கொள்ளும் அந்தஸ்து கமிலாவின் குடும்பத்திற்கு இல்லை என, சார்லஸின் பெரிய மாமா லார்ட் மவுண்ட்பேட்டன் மற்றும் குடும்பத்தைச் சேர்ந்த மற்றவர்கள் கமிலாவை திருமணம் செய்துக் கொள்ள சார்லஸை அனுமதிக்கவில்லை.

அரச பரம்பரையின் வாரிசு என்ற முறையில், சார்லஸ், தனது மனதுக்கு பிடித்த கமிலாவை திருமணம் செய்ய முடியாமல் போனது, குடும்பத்தினர் தேர்ந்தெடுத்த இளவரசி டயானாவை திருமணம் செய்ய வேண்டிய கட்டாயம் இளவரசர் சார்லஸுக்கு ஏற்பட்டது.

அதேபோல, தான் விரும்பிய இராணுவ குதிரைப்படை அதிகாரி ஆண்ட்ரூ பார்க்கர் பவுல்ஸை கமிலா மணந்துக் கொண்டு, குழந்தைகளையும் பெற்றார். ஆனால் வேலை நிமித்தமாக ஆண்ட்ரூ பார்க்கர் பவுல்ஸ் வெளியிலேயே இருக்க வேண்டியிருந்த நிலையில், திருமணமான கமிலா, கணவரை விட்டு பிரிந்தார். 

கமிலா மற்றும் சார்லஸ்

அதேபோல, இளவரசி டயானாவை பிரிந்த பிறகு, பல போராட்டங்கள், நிராகரிப்புகள், அரசக் குடும்பத்தின் எதிர்ப்பு என பல்வேறு தடைகளையும் தாண்டி, இளவரசர் சார்லஸ், கமிலாவை திருமணம் செய்துக் கொண்டார். இளவரசர் சார்லஸ் மன்னராக அரியணை ஏறியபோது, கமிலா ராணி ஆனார். ​​ராணி எலிசபெத் II பிளாட்டினம் ஜூபிலியின் போது, தனக்குப் பிறகு பட்டத்து ராணி என்ற அந்தஸ்தை கமீலா பெறுவார் என்று அறிவித்தார்.

மக்களின் எதிர்ப்பு

2005 ஆம் ஆண்டில் சார்லஸை மணந்தபோது, ​​பொது மக்கள் கருத்து கமிலாவுக்கு சாதகமாக இல்லை, டயானா மற்றும் சார்லஸ் இடையேயான திருமண முறிவுக்கு காரணம் கமிலா என்ற எண்ணம் அந்த எதிர்ப்புக்கு காரணம் என்றாலும், காலப்போக்கில், நிதர்சனத்தை பிரிட்டன் மக்கள் ஏற்றுக் கொண்டனர். இப்போது இளவரசரின் திருமணத்தை மக்கள் ஏற்றுக் கொண்டனர்.

வேல்ஸ் இளவரசி டயானா
இளவரசர் சார்லஸின் அப்போதைய மனைவி டயானா பிபிசிக்கு அளித்த பேட்டி ஒன்றில், "இந்தத் திருமணத்தில் நாங்கள் இருவர் இல்லை, மூன்று பேர் இருந்தோம், அதனால் கொஞ்சம் கூட்டமாக இருந்தது" என்று  தெரிவித்திருந்தார். அதில் மூன்றாவது நபர் என அவர் குறிப்பிட்டட்து கமிலா பபர்க்கர் என்பதால், உலகம் அறிந்த உண்மை.

அரச தம்பதிகளின் டைவர்ஸ்

அரச தம்பதிகள் 1992 இல் பிரிந்தனர், பின்னர் 1996 இல் விவாகரத்து செய்தனர். கமிலா மற்றும் சார்லஸ் மீதான அவரது செல்வாக்கு மற்றும் திருமணத்தில் முறிந்த அவர்களது விவகாரம் பற்றி டயானா பல இடங்களில் பேசியிருக்கிறார். இது பொதுமக்களுக்கு டயானா மீது அனுதாபத்தையும் கமிலா மீது வெறுப்பையும் ஏற்படுத்தியது.

கமிலா மற்றும் டயானா
அரச வாரிசுகளான வில்லியம் மற்றும் ஹாரியின் தாயாகவும், சார்லஸின் மனைவியாகவும் டயானா இருந்ததால், பொதுமக்கள் மற்றும் அரச குடும்பத்தின் அனுதாபம் எப்போதும் டயானாவுக்கு இருந்தது. கமிலா எப்பொழுதும் "வேறொரு பெண்ணாகவே" பார்க்கப்பட்டார், இது, டயானா மற்றும் கமிலாவை ஒப்பிடுவதற்கு முக்கியமான காரணமாக இருந்தது.

டயானா உண்மையில் கமிலாவை பொதுவெளியில் அவமானப்படுத்தவில்லை என்றாலும், தன்னுடைய கணவருக்கு கமிலாவுடன் இருந்த தொடர்பு, தங்களது திருமணத்தை பாதித்ததாகவும் அதன் விளைவு அவளது மனநலத்தை பாதித்ததாகவும் கூறினார். ஒரு கார் விபத்தில் டயானா இறந்தபோது, அவர் மீதான அனுதாபம் மக்களுக்கும் மேலும் அதிகரித்தது.  

மேலும் படிக்க | திருமணத்தில் இப்படியும் செய்வாங்களா? மணமகளின் மீது சேற்றை வாரி இறைக்கும் சடங்கு

பிரிட்டனில் மிகவும் வெறுக்கப்படும் பெண் கமிலா
"பிரிட்டனில் மிகவும் வெறுக்கப்படும் பெண்" கமிலா ஒரு காலத்தில் கண்டிப்பாக மாறும் என்று சார்லஸின் அதிகாரப்பூர்வ வாழ்க்கை வரலாற்றாசிரியர் ஜொனாதன் டிம்பிள்பி, பிபிசியின் பனோரமா நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார்.

"பொதுக் கருத்தில் பெரிய அளவிலான மாற்றங்களை பார்க்கிறோம், முதலில், வேறொரு பெண்ணாக பார்க்கப்பட்ட அவர், இளவரசரை மகிழ்ச்சியடையச் செய்கிறார், பொதுவெளியில் தோன்றுகிறார், அவர் கருணையுள்ளவர், கூட்டத்தில் இயல்பாக கலந்துவிடக் கூடியவர், மிகவும் திறம்பட தொடர்புகொள்பவர்" என்று ஜொனாதன் டிம்பிள்பி தெரிவித்திருந்தார்.

மனைவியாக மாறிய காதலியின் அந்தஸ்தும் மாறியது

இளவரசர் சார்லஸ் மற்றும் கமிலா இருவரும் 2005 இல் திருமணம் செய்து கொண்ட பிறகு அவர்களின் உறவு முறையானது. சார்லஸ் டயானாவை சந்திப்பதற்கு முன்பே, 30 ஆண்டுகளுக்கு முன்பு அவர்களது உறவு தொடங்கியது. அவர்களின் திருமணத்திலிருந்து, கமிலா பல ஆண்டுகளாக அரச குடும்பத்தில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்தார்.

மேலும் படிக்க | Stone of Destiny: மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் ’விதியின் கல்’

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News