இலங்கையில் தேவாலயங்களில் ஞாயிறு வழிபாடுகள் ரத்து

இலங்கை முழுவதும் தேவாலயங்களில் ஞாயிறு வழிபாடுகள் ரத்து செய்யப்படுவதாக கத்தோலிக்க திருச்சபை அறிவித்துள்ளது. 

Last Updated : May 3, 2019, 08:37 AM IST
இலங்கையில் தேவாலயங்களில் ஞாயிறு வழிபாடுகள் ரத்து title=

இலங்கை முழுவதும் தேவாலயங்களில் ஞாயிறு வழிபாடுகள் ரத்து செய்யப்படுவதாக கத்தோலிக்க திருச்சபை அறிவித்துள்ளது. 

இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை நாளன்று பிரார்த்தனை நடைபெற்ற தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளை குறிவைத்து பயங்கரவாதிகள் தற்கொலைத் தாக்குதல்களை நடத்தினர். இதில் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. 

இதனையடுத்து தேசிய தவ்ஹீத் ஜமாத் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.  எனினும், மீண்டும் தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளதாக உளவுத்துறையும் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இந்நிலையில், இலங்கையில் உள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் ஞாயிறுதோறும் நடைபெறும் வழிபாடுகள் ரத்து செய்யப்படுவதாக இலங்கை கத்தோலிக்க திருச்சபை அறிவித்துள்ளது. 

Trending News