வடகொரியா, தென் கொரியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் தங்களுக்குள் இருக்கும் பதற்றத்தை தீர்த்துக் கொள்ளும் எண்ணத்தில் இல்லை என்பது தெளிவாகிறது. இந்த நாடுகளின் செயல்பாடுகள் இப்பகுதிகளில் பதற்றத்தை அதிகரிக்கும் விதத்திலேயே இருப்பதாக ஒரு தொழிலாளர் கட்சி உயர் அதிகாரி கூறியதாக வட கொரிய ஊடகங்கள் புதன்கிழமை செய்தி வெளியிட்டன.
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் (Kim Jong Un) மற்றும் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இடையே நடந்த வரலாற்று சிறப்புமிக்க உச்சிமாநாட்டின் போது முக்கிய பங்கு வகித்த கொரிய அரசியல்வாதி கிம் யோங் சோல், பியோங்யாங்கின் நல்லெண்ணத்திற்கு பதிலாக விரோத செயல்களை செய்து வருவதாக தென் கொரியா மற்றும் அமெரிக்காவை விமர்சித்தார்.
வட கொரிய (North Korea) அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரியான கிம் யோ ஜாங், சியோல் மற்றும் வாஷிங்டனை எச்சரித்து ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். வட கொரியா மற்றும் அமெரிக்கா இடையில் இந்த வாரம் தொடங்கவிருக்கும் வருடாந்திர கூட்டு இராணுவ பயிற்சிகள் குறித்து விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கைக்கு ஒரு நாள் கழித்து கிம் யோங் சோல்லின் அறிக்கை வந்துள்ளது.
ALSO READ: காயமடைந்தாரா கிம்? வட கொரிய அதிபர் தலையில் கட்டு, காரணம் என்ன?
வட கொரியா தென் கொரியா இடையில் தொடர்புக்காக அமைக்கப்பட்டுள்ள ஹாட் லைனில் விடுக்கப்பட்ட வழக்கமான அழைப்புகளுக்கு வடகொரியா செவ்வாய்க்கிழமை பதிலளிக்கவில்லை என்று தென் கொரியா தெரிவித்தது.
புதன்கிழமை, கிம் யோங் சோல் அமெரிக்காவுடன் (America) ராணுவ பயிற்சிகளை மேற்கொள்வதற்காக தென் கொரியாவை குற்றம் சாட்டினார். வட கொரியா தென் கொரியா இடையிலான அமைதி செயல்முறைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், அமெரிக்காவுடனான நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்தமைக்கு தென் கொரியா சரியான பதிலை அளிக்க வேண்டி இருக்கும் என கிம் யாங் சோல் கூறினார்.
"அவர்கள் எப்படிப்பட்ட ஆபத்தான தேர்வை செய்துள்ளார்கள் என்பதை நாங்கள் அவர்களுக்கு புரிய வைப்போம். தவறான தேர்வை செய்து, தென் கொரியா ஒரு பெரிய பாதுகாப்பு நெருக்கடியில் சிக்கியுள்ளது” என்று அவர் கூறியதாக செய்தி நிறுவனமான கேசிஎன்ஏ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ALSO READ: நண்பேன்டா? வட கொரியா தென் கொரியா நட்பு: நாடகமா? நடைமுறையில் சாத்தியமா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR