ரஷ்ய தாக்குதலில் ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தில் தீ: உக்ரைன்

ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான, உக்ரைனில் உள்ள சபோரிசியா Zaporizhzhia மீது,  ரஷ்ய துருப்புக்களின் தாக்குதலில் தீப் பிடித்துள்ளதாக உக்ரைன் கூறுகிறது.

Last Updated : Mar 4, 2022, 07:24 AM IST
  • ரஷ்யா - உக்ரைன் போர் ஒன்பதாவது நாளை எட்டியுள்ளது
  • அணுமின் நிலையத்தின் அனைத்துப் பக்கங்களிலிருந்தும் ரஷ்யா தாக்குதல்
  • உக்ரைன் வெளியுறவு அமைச்சர் வெளியிட்ட தகவல்
ரஷ்ய தாக்குதலில் ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தில் தீ: உக்ரைன்  title=

ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான உக்ரைனில் உள்ள போரிசியா Zaporizhzhia மீது, வெள்ளிக்கிழமை அதிகாலையில் ரஷ்ய துருப்புக்கள் நடத்திய தாக்குதலில்  தீப்பிடித்தது என்றும், அங்கிருந்து புகை வெளியேறுவதை அதிகாரிகள் கவனித்ததாக அணுமின் நிலையம் உள்ள  எனர்கோடர் நகரின் மேயர் கூறினார்.

உள்ளூர் படைகளுக்கும் ரஷ்ய துருப்புக்களுக்கும் இடையே கடுமையான சண்டை நடந்ததாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, டிமிட்ரோ ஓர்லோவ் இவ்வாறு கூறினார்.

இதற்கிடையில், உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா கூறுகையில், அணுமின் நிலையத்தின் அனைத்து பக்கங்களிலிருந்தும் ரஷ்யா தாக்குதல்களை நடத்திய நிலையில், அணுமின் நிலையம் வெடித்தால், பெரும் அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்றார்.

மேலும் படிக்க | அகண்ட ரஷ்யாவை ஏற்படுத்துவதற்கான புடினின் திட்டம்

"ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான Zaporizhzhia NPP மீது ரஷ்ய இராணுவம் எல்லாப் பக்கங்களிலிருந்தும் துப்பாக்கிச் சூடு நடத்துகிறது.தீ பிடித்துள்ள நிலையில், அணு மின் நிலையம்  வெடித்தால், அது செர்னோபிலை விட 10 மடங்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்த கூடியதாக இருக்கும்!" என்றார் குலேபா.

முன்னதாக, ரஷ்ய துருப்புக்கள் ஆலையைக் கைப்பற்றுவதற்கான முயற்சிகளை முடுக்கிவிட்டதாகவும், டாங்கிகளுடன் நகரத்திற்குள் நுழைந்ததாகவும் உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

"ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தின் கட்டிடங்கள் மீது தொடர்ச்சியான ரஷ்யா ஷெல் தாக்குதல் நடத்தி வருவதன் விளைவாக, ஜபோரிஜியா அணுமின் நிலையம் தீப்பற்றி எரிகிறது" என்று ஓர்லோவ் தனது டெலிகிராம் சேனலில் தகவல் வெளியிட்டு, உலகப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று குறிப்பிட்டார்.  எனினும் அவர் முழுமையான விவரம் தெரிவிக்கவில்லை.

மேலும் படிக்க | ரஷ்யா-உக்ரைன் மோதல்: மூன்றாம் உலகப் போரை நோக்கி உலகம் செல்கிறதா..!!

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், உக்ரைனில் உள்ள ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களை வெளியேற நிர்ப்பந்தித்துள்ள இந்த உக்ரைன் ரஷ்யா போர்,  21 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய இராணுவ தாக்குதலாக என்னும் நிலையை நோக்கி உலகம் சென்று கொண்டிருக்கிறது

ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் ஒன்பதாவது நாளை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | Russia Ukraine Crisis: அதிகரிக்கும் பதட்டத்தால் நிலைதடுமாறும் உலக சந்தைகள் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News