மர்மமான வுஹான் ஆய்வகம்: சீனா மறைத்த மற்றொரு தகவல் வெளிவந்தது

சீனா தனது முதல் கோவிட் நோயாளியைப் பற்றி முதன் முதலாக அறிவிப்பதற்கு சுமார் ஒரு மாதம் முன்னர், சீனாவில் உள்ள வுஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி நிறுவனத்தின் 3 ஆராய்ச்சியாளர்கள் 2019 நவம்பரில் நோய்வாய்ப்பட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற முயன்றதாக தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

Written by - ZEE Bureau | Last Updated : May 24, 2021, 03:26 PM IST
  • சீனா வைரஸ் குறித்த பல தகவல்களை மறைத்தது: சமீபத்திய அறிக்கை.
  • சீனா ஆராய்ச்சியாளர்கள் பலர் துவக்கத்திலேயே பாதிக்கப்பட்டனர்-அறிக்கை.
  • இந்த கொடிய வைரஸ் இயற்கையான முறையில் உருவானது என தோன்றவில்லை: டாக்டர் ஃபவுசி
மர்மமான வுஹான் ஆய்வகம்: சீனா மறைத்த மற்றொரு தகவல் வெளிவந்தது

பீஜிங்: புதுடெல்லி: சீனாவின் வுஹான் ஆய்வகம் பற்றியும், சீனா மூடி மறைத்த சில விஷயங்கள் பற்றியும் ஒரு சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா தனது முதல் கோவிட் நோயாளியைப் பற்றி முதன் முதலாக அறிவிப்பதற்கு சுமார் ஒரு மாதம் முன்னர், சீனாவில் உள்ள வுஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி நிறுவனத்தின் 3 ஆராய்ச்சியாளர்கள் 2019 நவம்பரில் நோய்வாய்ப்பட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற முயன்றதாக தற்போது கண்டறியப்பட்டுள்ளது. ஒரு சீன ஆய்வகத்திலிருந்துதான் கொரோனா வைரஸ் உலகில் பரவியுள்ளது என்ற ஊகம் இதன் மூலம் மேலும் வலுப்பெற்றுள்ளது. கோவிட்-19 எவ்வாறு தோன்றியது என்பது குறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ள உலக சுகாதார அமைப்பின் முடிவெடுக்கும் குழுவின் சந்திப்புக்கு முன்னதாக இந்த வெளிப்பாடுகள் வந்துள்ளன. 

முன்னர் வெளியிடப்படாத அமெரிக்க (America) உளவுத்துறை தரவைப் பற்றி குறிப்பிட்ட வால் ஸ்ட்ரீட் ஜேர்னலின் அறிக்கை, பாதிக்கப்பட்ட ஆராய்ச்சியாளர்களின் எண்ணிக்கை, அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்த கால அளவு, அவர்கள் மருத்துவமனைகளுக்கு சென்றுவந்த தகவல்கள் ஆகியவை குறித்த புதிய விவரங்களை வெளியிட்டுள்ளது. ஜனவரி மாதம் டிரம்ப் நிர்வாகத்தால் வெளியிடப்பட்ட ஒரு அமெரிக்க வெளியுறவுத்துறை ஃபாக்ட் ஷீட்டில், 2019 இலையுதிர்காலத்தில் சீன ஆராய்ச்சியாளர்கள் நோய்வாய்ப்பட்டிருப்பதாகவும், கோவிட் -19 மற்றும் பொதுவான பருவகால நோய் ஆகிய இரண்டிற்கும் ஒத்த அறிகுறிகள் அவர்களுக்கு காணப்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ALSO READ: COVID-19 தொடர்பான போலிச் செய்திகளை பரப்புகிறது சீனா: குற்றம் சாட்டும் தைவான்

WIV இன் ஆராய்ச்சியாளர்கள் 2019 இலையுதிர்காலத்தில் நோய்வாய்ப்பட்டனர்
கோவிட் போன்ற அறிகுறிகளைக் கொண்ட முதல் நோயாளி வுஹானில் டிசம்பர் 8, 2019 அன்று பதிவு செய்யப்பட்டதாக சீனா உலக சுகாதார நிறுவனத்திற்கு (WHO) அறிக்கை மூலம் அறிவித்தது. 

"WIV க்குள் பல ஆராய்ச்சியாளர்கள் 2019 இலையுதிர்காலத்தில் நோய்வாய்ப்பட்டார்கள் என்று சந்தேகிக்க அமெரிக்க அரசாங்கத்திடம் பல காரணங்கள் உள்ளன. முதல் கோவிட்-19 நோயாளி பற்றி சீனா அறிவித்தற்கு முன்னரே சீன ஆராய்ச்சியாளர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இவர்களுக்கு தென்பட்ட அறிகுறிகள் கோவிட் -19 (COVID-19) மற்றும் பொதுவான பருவகால நோய்களின் அறிகுறிகளுடன் ஒத்திருந்தன" என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், ஆய்வக ஆராய்ச்சியாளர்களைப் பற்றிய உளவுத்துறை விவரங்களைப் பற்றி நன்கு அறிந்த தற்போதைய மற்றும் முன்னாள் அதிகாரிகள் மதிப்பீட்டிற்கான துணை ஆதாரங்களின் வலிமை குறித்து மாறுபட்ட கருத்துக்களை வெளிப்படுத்தியதாக 'டெய்லி' செய்தி வெளியிட்டுள்ளது. ஒரு சர்வதேச கூட்டாளரால் இந்த தகவல் அளிக்கப்பட்டதாகவும், இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், எனினும், இதில் இன்னும் அதிக விசாரணையும் தெளிவும் தேவைப்படுகிறது என்றும் ஆய்வக வட்டாரம் தெரிவித்தது.

"பல்வேறு ஆதாரங்களில் இருந்து எங்களுக்கு வந்த தகவல்கள் நேர்த்தியான தரம் வாய்ந்தவை. இவை மிகவும் துல்லியமான தகவல்கள். சீன ஆய்வக ஆராய்ச்சியாளர்கள் ஏன் நோய்வாய்ப்பட்டார்கள் என்பதுதான் இவற்றில் கூறப்படவில்லை" என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த கொடிய வைரஸ் இயற்கையான முறையில் உருவானது என தோன்றவில்லை: டாக்டர் ஃபவுசி 
ஒரு நிகழ்வின் போது, ​​கொரோனா வைரஸ் தொற்றுநோய் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் உயர் ஆலோசகரான டாக்டர் ஃபவுசி, “இது இயற்கையில் உருவான வைரஸ் என நான் நம்பவில்லை. சீனாவில் (China) என்ன நடந்தது என்பதை தெளிவாக தெரிந்துகொள்ளும் வகையில், விசாரணை தொடர வேண்டும் என என்று நான் நினைக்கிறேன்." என்று அவர் கூறினார்.

"இதை விசாரித்தவர்கள் கூறுகையில், அது ஒரு விலங்கு நீர்த்தேக்கத்திலிருந்து தோன்றியிருக்கலாம், பின்னர் அது தனிநபர்களை பாதித்திருக்கலாம் என தெரிவித்தனர். இதற்கு வேறு காரணங்களும் இருக்கலாம். எனவே, வைரஸின் தோற்றம் குறித்து ஆராயும் எந்தவொரு விசாரணைக்கும் நான் முழுமையான அதரவை அளிப்பேன்" என்று அவர் மேலும் கூறினார்.

ALSO READ: தைவானை சீண்டுவதை நிறுத்தவும்.. இல்லை என்றால்; சீனாவிற்கு அமெரிக்கா எச்சரிக்கை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News