ரஷ்யாவிடம் சிக்கிய உக்ரைன் வீரரின் உருக்குலைந்த தோற்றம்.. உலகை உறைய வைத்த புகைப்படம்

ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய உக்ரைன் முடிவு செய்ததை எதிர்த்து, ரஷ்யா கடந்த பிப்ரவரி இறுதியில் போர் தொடுத்தது. தற்போது வரை நீடிக்கும் இந்த போரில், உக்ரைனின் பல பகுதிகள்  ரஷ்யாவின் கட்டுப்பாட்டிற்கு சென்றுள்ளன. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 27, 2022, 06:28 PM IST
  • உக்ரைனின் பல பகுதிகள் ரஷ்யாவின் கட்டுப்பாட்டிற்கு சென்றுள்ளன.
  • மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஏராளமான நவீன ஆயுதங்களை வழங்கிய உக்ரைனுக்கு உதவி செய்து வருகிறது.
  • ரஷ்யா ஜெனிவா உடன்படிக்கைகளை எந்த அளவிற்கு கடைபிடிக்கிறது என்பதை இதை வைத்து அறிந்து கொள்ளலாம்.
ரஷ்யாவிடம் சிக்கிய உக்ரைன் வீரரின் உருக்குலைந்த தோற்றம்.. உலகை உறைய வைத்த புகைப்படம் title=

ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய உக்ரைன் முடிவு செய்ததை எதிர்த்து, ரஷ்யா கடந்த பிப்ரவரி இறுதியில் போர் தொடுத்தது. தற்போது வரை நீடிக்கும் இந்த போரில், உக்ரைனின் பல பகுதிகள்  ரஷ்யாவின் கட்டுப்பாட்டிற்கு சென்றுள்ளன. அதே நேரத்தில், உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஏராளமான நவீன ஆயுதங்களை வழங்கியு உக்ரைனுக்கு உதவி செய்து வரும் நிலையில், உக்ரைன் இழந்த சில பகுதிகளை மீட்டு வருகின்றது.

இந்நிலையில், ரஷ்ய பிடியில் இருந்து தப்பிய உக்ரைன் ராணுவ வீரரின் அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகம், உக்ரைன் ராணுவ வீரர் மைக்கைலோ டியானோவின் புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ளது, அவர் முகம் மற்றும் வலது கையில் காயங்களுடன் உடல் மிகவும் மெலிந்து காணப்பட்ட போதிலும் அவர் தன்னை மிகவும் அதிர்ஷ்டசாலி என்று கூறியுள்ளார். “மிகைலோ டியானோவ் அதிர்ஷ்டசாலிகளில் ஒருவர்; அவரது சக போர்க் கைதிகள் இன்னும் ரஷ்யாவின் பிடியில் உள்ள நிலையில், அவர் ரஷ்ய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்" என்று உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. 

ரஷ்யா ஜெனிவா உடன்படிக்கைகளை எந்த அளவிற்கு கடைபிடிக்கிறது என்பதை இதை வைத்து அறிந்து கொள்ளலாம். நாசிசத்தின் வெட்கக்கேடான பாரம்பரியத்தை ரஷ்யா இப்படித்தான் கடைபிடிக்கிறது என உக்ரைன் சாடியுள்ளது. மரியுபோல் போரைத் தொடர்ந்து மைக்கைலோ டியானோவ் ரஷ்ய சிறை முகாம்களில் நான்கு மாதங்கள் இருந்துள்ளார் ஆனால் இந்த வாரம் ஒரு முக்கிய கைதி பரிமாற்றத்தில் விடுவிக்கப்பட்டார். மைக்கைலோ டியானோவ் கீவ் இராணுவ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார், அங்கு அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 

மே மாதத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில், மைக்கைலோ டியானோவ் களைப்பாகவும், ஷேவ் செய்யப்படாமல் இருந்தாலும், அவர் சிரித்து கொண்டிருப்பதைக் காண முடிந்தது. உக்ரேனிய வெளியுறவு அமைச்சகத்தின் ஆலோசகர் அன்டன் ஜெராஷ்செங்கோ, அவர் ஒரு கையில் நான்கு சென்டிமீட்டர் எலும்பைக் காணவில்லை என்று கூறினார். மேலும் அவர் குணம்டைய வெகு காலம் ஆகும் எனவும் கூறினார். செப்டம்பர் 21 அன்று கைதிகள் பரிமாற்றத்தில் பரிமாறப்பட்ட 215 போர்க் கைதிகளில் உக்ரேனிய அசோவ் படைப்பிரிவின் சிப்பாய்களில் மைக்கைலோ டியானோவ் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவிலிருந்து மரியுபோல் துறைமுக நகரத்தில் உள்ள அசோவ்ஸ்டல் எஃகு ஆலையைக் கைப்பற்ற அனுப்பப்பட்ட 2,000 வீரர்களில் டியானோவும் ஒருவர், ஆனால் மே மாதத்தில் ரஷ்யா படையிடம் சிக்கினர்.

மேலும் படிக்க | ரஷ்யா உக்ரைன் போர்; தொடரும் ரஷ்ய தொழிலதிபர்களின் மர்ம மரணங்கள்!

மேலும் படிக்க | Viral News: தன்னை கடித்த பாம்பை கடித்து குதறிய 2 வயது சிறுமி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News