Top 10 அக்டோபர் 08: உலக அரங்கில் ஆதிக்கம் செலுத்திய தலைப்புச் செய்திகள்

அமெரிக்கா, கோவிட் தடுப்பூசி, நோபல் பரிசு என பலவிதமான செய்திகளின் கதம்பம் இது. இன்றைய உலக நடப்பு தொடர்பான முக்கிய செய்திகளின் தொகுப்பு...

Written by - ZEE Bureau | Last Updated : Oct 8, 2020, 09:50 PM IST
 • 'மிகவும் மதிப்புமிக்க' சுற்றுச்சூழல் பரிசை அறிமுகப்படுத்துகிறார் இளவரசர் வில்லியம்.
 • அமெரிக்க சமகால இலக்கியத்தில் மிக முக்கியமான கவிஞர்களில் ஒருவராக கருதப்படும் கவிதாயினி லூயிஸ் க்ளூக் இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றார்.
 • தைவானை வலுக்கட்டாயமாக கைப்பற்றும் எந்தவொரு முயற்சியையும் எதிர்ப்பதாக கூறிய அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சீனாவிற்கு எச்சரிக்கை விடுத்தார்.
Top 10 அக்டோபர் 08: உலக அரங்கில் ஆதிக்கம் செலுத்திய தலைப்புச் செய்திகள்

புதுடெல்லி: அமெரிக்கா, கோவிட் தடுப்பூசி, ரஷ்யா, நோபல் பரிசு என பலவிதமான செய்திகளின் கதம்பம் இது. இன்றைய உலக நடப்பு தொடர்பான முக்கிய செய்திகளின் தொகுப்பு...

 • அதிபர் டிரம்பிற்கும், ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பிடனுக்கும் இடையில் நடைபெறவிருந்த நேரடி விவாத நிகழ்ச்சியில் 'மெய்நிகர்' (virtual) அமர்வில் பங்கேற்பதாகவும், நேரடியாக 'பங்கேற்க மாட்டேன்' என்று டிரம்ப் கூறுகிறார்
 • சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் ஹவாய் இணக்கமாக செல்வதாக என்று பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் பாதுகாப்புக் குழு தெரிவித்துள்ளது. எனவே, ஐக்கிய ராஜ்ஜியத்திலிருந்து ஹவாயின்  உபகரணங்களையும் அகற்றுவதற்கான காலக்கெடுவை இன்னும் சற்று முன்கூட்டியே உறுதி செய்யுமாறு, பிரதமர் போரிஸ் ஜான்சனை நாடாளுமன்றக் குழு வலியுறுத்தியுள்ளது.
 • அஜர்பைஜான் படைகளுடன் சண்டை நடைபெறும்போது, நாகோர்னோ-கராபாக் பகுதியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க தேவாலயம் (cathedral) தாக்கப்பட்டதாக ஆர்மீனியா தெரிவித்துள்ளது
 • இரு நாடுகளுக்கும் கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ள மோதலைத் தடுத்து நிறுத்துவதற்காக, ரஷ்யா, அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகளை அஜர்பைஜான் மற்றும் ஆர்மீனியாவின் வெளியுறவு அமைச்சர்கள் சந்திக்கவுள்ளனர்.
 • அமெரிக்க சமகால இலக்கியத்தில் மிக முக்கியமான கவிஞர்களில் ஒருவராக கருதப்படும் கவிதாயினி லூயிஸ் க்ளூக் இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றார்.

விரிவான செய்தி | 2020 ஆண்டின் இலக்கியத்திற்கான Nobel பரிசை வென்றார் அமெரிக்க கவிஞர் லூயிஸ் க்ளூக்  

 • தைவானை வலுக்கட்டாயமாக கைப்பற்றும் எந்தவொரு முயற்சியையும் எதிர்ப்பதாக கூறிய அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்   சீனாவிற்கு எச்சரிக்கை விடுத்தார்.
 • போலி செய்திகளைக் கட்டுப்படுத்த அமெரிக்க தேர்தல் வாக்கெடுப்பு முடிந்ததும் அரசியல் விளம்பரங்களை தடை செய்ய பேஸ்புக் முடிவு.
 • இதுபோன்ற அனைத்து பதவிகளையும் தற்காலிகமாக நிறுத்துவதற்கான பேஸ்புக்கின் முடிவு, தேர்தலில் தோல்வியடைந்தால், அதிகார மாற்றத்தின் போது ஒத்துழைக்க வேண்டாம் என்ற அதிபர் டிரம்ப்பின் எச்சரிக்கையைத் தடுக்கும் முயற்சியாக இது படிக்கப்படுகிறது.
 • உய்குர் முஸ்லிம்களுக்கு எதிராக பெய்ஜிங் அதிகாரிகள் செயல்படுவது போலவே,
 • ஜின்பிங்கின் நிர்வாகத்தின் மீது எதிர்ப்பை வெளிப்படுத்தும் ஹான் சீனர் எனப்படும் சீனாவில் வாழுகின்ற இனக்குழுவினர் மீதும் சீன அதிகாரிகள் ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்துவதாக கூறப்படுகிறது. 
 • 'மிகவும் மதிப்புமிக்க' சுற்றுச்சூழல் பரிசை அறிமுகப்படுத்துகிறார் இளவரசர் வில்லியம்.

நம்ப முடியவில்லையா? படித்துப் பாருங்கள் | கொரோனா காலத்தில் குழந்தை பெற்றால் ஊக்கத்தொகையை கொடுக்கும் நாடு எது தெரியுமா?

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News