ரஷ்யாவில் நவால்னி உடல் நிலை கவலைக்கிடம்; புடினை எச்சரிக்கும் உலக நாடுகள்

ரஷ்யாவின் எதிர் கட்சித் தலைவர் அலெக்ஸிக்கு கொடுக்கப்பட்ட தேநீரில் விஷம் இருந்ததாக சந்தேகிக்கப்பட்டது. சிறிது நாட்கள் கோமாவில் இருந்த நிலையில் தீவிர சிகிச்சைக்கு பிறகு, அவர் பிழைத்தார்.

Last Updated : Apr 19, 2021, 05:09 PM IST
  • அலெக்ஸிக்கு கொடுக்கப்பட்ட தேநீரில் விஷம் இருந்ததாக சந்தேகிக்கப்பட்டது.
  • நவால்னியின் சிறுநீரகம் எப்போது வேண்டுமானாலும் செயல் இழக்கலாம் என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
  • அலெக்ஸே நவால்னி சிறையில் உயிரிழந்தால், கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என ரஷ்யாவை அமெரிக்கா எச்சரித்துள்ளது.
ரஷ்யாவில் நவால்னி உடல் நிலை கவலைக்கிடம்; புடினை எச்சரிக்கும் உலக நாடுகள்

ரஷ்யாவின் எதிர் கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி (Alexey Navalny), அதிபர் விளாடிமிர் புடினை (Vladimir Putin) கடுமையாக விமர்சித்து வருபவர்.  அவருக்கு விஷம் கொடுப்பது, சிறையில் அடைப்பது போன்ற பல்வேறு  நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் அரசியல் ரீதியாக பழிவாங்கப்படுவதாக கூறும் ரஷ்ய எதிர்கட்சி உறுப்பினர்கள், போராட்டம் செய்ய உள்ளதாக அச்சுறுத்தியுள்ளனர். 

அலெக்ஸே நவால்னி, கடந்த பிப்ரவரி மாதம், பழைய பணமோசடிக் குற்றச்சாட்டின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த மாரச் 31-ஆம் தேதி முதல் சிறையில் உண்ணாவிரதம் இருந்து வரும் நவால்னி, உடல் நிலை மிக மோசமாக இருப்பதாகவும், அவரது சிறுநீரகம் எப்போது வேண்டுமானாலும் செயல் இழக்கலாம் என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். 

பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகளும் அலெக்ஸே நவால்னி நடத்தப்படும் முறை குறித்தும், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் கவலை வெளியிட்டுள்ளன. அலெக்ஸே நவால்னி சிறையில் உயிரிழந்தால், கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என ரஷ்யாவை அமெரிக்காவும் (America) எச்சரித்துள்ளது. அவரது  ஒரு கால் மரத்து போயுள்ளதோடு, முதுகு வலியினாலும் அவதிப்படுகிறார்.

ALSO READ |  ரஷ்யாவில் "விஷ" அரசியல்... சதியில் Vladimir Putin-க்கு தொடர்பு உள்ளதா ..!!!

ரஷ்யாவின் எதிர் கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி (Alexey Navalny), சுமார் ஒன்பது மாதங்களுக்கு முன்னால், விமானத்தில் மாஸ்கோவிற்கு பயணம் செய்தி கொண்டிருந்த போது அவர்  உடல் நிலை சரியில்லாமல் போய் மயங்கி விழுந்தார். அலெக்ஸிக்கு கொடுக்கப்பட்ட தேநீரில் விஷம் இருந்ததாக சந்தேகிக்கப்பட்டது. சிறிது நாட்கள் கோமாவில் இருந்த நிலையில் தீவிர சிகிச்சைக்கு பிறகு, அவர் பிழைத்துள்ளார்.

ரஷ்ய எதிர் கட்சித் தலைவர் நவால்னி விஷத்தினால் பாதிக்கப்படுவது இது முதல் முறை அல்ல. முன்னதாக போலீஸ் காவலில் இருந்த போது, அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக சந்தேகிக்கப்பட்டது. 

ஆனால், இந்த குற்றசாட்டுகள் அனைத்தையும் ரஷ்யா மறுக்கிறது. கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக, நவால்னி இப்படி நடந்து கொள்வதாக கூறிய,  பிரிட்டனுக்கான ரஷ்ய தூதர், அவரை சிறையில் சாக விடமாட்டோம்  என தெரிவித்தார்.

ALSO READ | ரஷ்ய எதிர்கட்சித் தலைவருக்கு விஷம் கொடுக்கப்பட்டதா... அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News