ரஷ்யா-உக்ரைன் போர்: ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷ்ய ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை நிறுத்த, போப் பிரான்சிஸ் மேற்கொண்ட ராஜீய முயற்சி தோல்வி அடைந்தது. ஈஸ்டர் அன்று போர்நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என்ற அவரது வேண்டுகோள் எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை. ரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சர்ச்சின் தலைவருடனான அவரது திட்டமிடப்பட்ட சந்திப்பு ரத்து செய்யப்பட்டது. எனவே அவர் மாஸ்கோ செல்லவில்லை.
ரஷ்யா-உக்ரைன் இடையே நட்புறவை உண்டாக்கும் முயற்சிகள் தோல்வி
ரஷ்யா-உக்ரைன் நட்புறவை உண்டாக்கும் போப் பிரான்சிஸின் முயற்சி தோல்வியடைந்தது. போப் போப்பை நிறுத்துவது குறித்து அல்லது குறைந்த பட்சம் போர் நிறுத்தத்தை மேற்கொள்ளவது குறித்து மாஸ்கோவுடன் நேரடி உரையாடல் நடத்த முயன்ற நிலையில், அவரது முஅய்ற்சி தோல்வியுற்றது.
மேலும் படிக்க | உக்ரைன் போரின் தாக்கத்தை உணர்த்தும் மனம் பதற வைக்கும் காட்சிகள்
போப் பிரான்சிஸ் நிலை
போப் பிரான்சிஸ் தற்போது ஒரு விசித்திரமான சூழ்நிலையில் சிக்கி இருக்கிறார். ரஷ்யா அல்லது ஜனாதிபதி விளாடிமிர் புடினை பெயரிட மறுத்ததையும், ரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சர்ச்சின் தலைவருடன் நல்லுறவை கொண்டிருப்பதையும் அவர் விளக்க வேண்டும். போப் அவ்வாறு செய்யவில்லை என்கிறார். ரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சர்ச்சின் தலைவர், இந்த போரை நியாயப்படுத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
போப் வழங்கிய அமைதி செய்தி
போப் பிரான்சிஸ் உக்ரைன் மக்களுக்கு அமைதி செய்தியை அனுப்பியுள்ளார். மனிதாபிமான உதவியுடன் மரியுபோலில் இருந்து மக்களை வெளியேற்ற ஒரு கப்பலை அனுப்பவும் முன்வருகிறார். இதனுடன், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்த ரஷ்யாவின் ஆர்த்தடாக்ஸ் சர்ச்சுடன் உறவுகளை மேம்படுத்தவும் அவர் முயற்சிக்கிறார்.
பிப்ரவரியில், ரஷ்யா அதன் அண்டை நாடான உக்ரைனைத் தாக்கி, போரை தொடங்கியதிலிருந்து, உக்ரைனின் பல நகரங்களில் பெரும் அழிவு ஏற்பட்டுள்ளது. ஆனால் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி பின்வாங்க தயாராக இல்லை.
மேலும் படிக்க | ரஷ்யா போரில் டால்பின்களை களம் இறக்கியுள்ளதா; அமெரிக்கா வெளியிட்டுள்ள பகீர் தகவல்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR