வைரல் வீடியோ: வீதி சண்டையாய் மாறிய விவாதம்; ஜோர்டான் நாடாளுமன்றத்தில் ஒரு WWF!

ஜோர்டான் நாட்டையே உலுக்கிய ஒரு சம்பவம் முழுவதும் கேமராவில் பதிவாகி, தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 30, 2021, 12:03 PM IST
  • வாக்குவாதத்த்தில் எம்.பி.க்கள் திடீரென கை கலப்பில் இறங்கினர்.
  • சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ.
  • அரசியலமைப்பு இதுவரை 29 முறை திருத்தப்பட்டுள்ளது.
வைரல் வீடியோ: வீதி சண்டையாய் மாறிய விவாதம்; ஜோர்டான் நாடாளுமன்றத்தில் ஒரு  WWF!  title=

பொதுவாக தெருக்களில்  பார்க்கும் அடி தடி சண்டை காட்சிகள், தற்போது நாடாளுமன்றத்திலும் காண முடிகிறது. ஜோர்டான்  நாடாளுமன்றத்திற்குள் மக்கள் பிரதிநிதிகளின் இந்த அநாகரீக நடத்தையை காட்டும் வீடியோ, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஜோர்டான் நாடாளுமன்றத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட எம்.பி.க்கள், பொறுமை இழந்து ஒருவரையொருவர் கை கலப்பில் ஈடுபட்டு , அடி, உதை, குத்து என களத்தில் இறன்கினர். நாடாளுமன்றத்திற்குள் நடந்த இந்த சண்டையின் வீடியோ வைரலாகி வருகிறது.

செவ்வாய்கிழமை ஜோர்டான் பாராளுமன்றத்தில், அவை நடவடிக்கைகளின் போது, ​​சபாநாயகர் ஒரு அமைச்சரை பாராளுமன்றத்தை விட்டு வெளியேறுமாறு கூறியபோது, ​​சலசலப்பு ஏற்பட்டது என செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. எம்.பி.க்களுக்கு இடையே காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டு, அதன்பின் நடந்த சம்பவம் நாட்டிற்கே அவமானத்தை ஏற்படுத்தியது. எம்.பி.க்கள் அவையிலே அடி தடி சண்டையில் இறங்கினர்.

ALSO READ | Viral Video: எலான் மஸ்க்கின் கார்பன் காப்பி; இது சீனாவின் 'Yi Long' Musk..!!

எம்.பி.க்கள் ஒருவருக்கு ஒருவர் திடீரென தாக்கிக் கொள்வதை வைரலான வீடியோவில் காணலாம். சண்டையின்  போது ஏராளமான எம்.பி.க்கள் ஒரு இடத்தில் திரண்டிருப்பதையும், 1 நிமிடத்திற்கும் மேலான இந்த வீடியோவில் காணலாம். 

அரசியலமைப்பு திருத்தம் மீதான விவாதம்

ஜோர்டான் பாராளுமன்றத்தில் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான விவாதம் நடைபெற்று வருவதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. அப்போது பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் சபையில் அவைக்கு புறம்பான கருத்துக்களை கூறி நடவடிக்கைகளை தடுக்க முயன்றார். இதனையடுத்து அவரை வெளியே செல்லுமாறு சபாநாயகர் அறிவுறுத்தியதையடுத்து, நாடாளுமன்றத்தில் அமளி ஏற்பட்டது. இந்த சண்டையில் யாருக்கும் பெரிய காயம் ஏற்படவில்லை என்றாலும் சில எம்பிக்களுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

1952 ஆம் ஆண்டு ஜோர்டானில் அரசியலமைப்பு  சடங்கள் அமலுக்கு வந்ததில் இருந்து, அரசியலமைப்பு இதுவரை 29 முறை திருத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | Viral Video: ‘என்ன கொடுமை சார் இது’; தன்னைத் தானே விழுங்கும் பாம்பு..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

 

Trending News