ஆதிரேலியாவில் பயன்படுத்தப்பட்ட ஆணுறைகளை பெண்களுக்கு அனுப்பிய விவகாரம் சூடுபிடித்துள்ளது. 65 பெண்களுக்கு அனுப்பப்பட்ட கையால் எழுதப்பட்ட செய்திகளுடன் பெற்ற வழக்கு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மெல்போர்னின் கிழக்கு மற்றும் தென்கிழக்கில் உள்ள முகவரிகளுக்கு அநாமதேய அனுப்புநரால் கடிதங்கள் அனுப்பப்பட்டன.
இந்த சம்பவங்கள் அனைத்தும் கடந்த மூன்று மாதங்களில் நடந்தவை. பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் தொடர்புடையவர்கள் என்றும் இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல் இது என்று போலீசார் நம்புகின்றனர். 65 பெண்களை குறி வைத்து ஏன் இந்த கடிதம் அனுப்பப்பட்டது? என்ற கேள்விகள் எழுகின்றன.
இந்த 65 பெண்களுக்கும் இடையில் என்ன தொடர்பு?
தற்போது பயன்படுத்திய ஆணுறைகளை அஞ்சலில் பெற்ற அனைத்து பெண்களும் 1999 இல், ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரின் கில்பிரேடா கல்லூரி தனியார் பெண்கள் பள்ளியில் படித்தனர். எனவே, அவர்களின் முகவரிகள் பள்ளியின் பழைய ஆண்டு புத்தகத்திலிருந்து பெறப்பட்டிருக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
மேலும் படிக்க | முட்டையை ‘இப்படி’ சாப்பிட்டால் போதும்... ரத்த நாளங்களில் உள்ள அடைப்பு நீங்கும்!
இந்த விவகாரத்தின் முக்கியமான விஷயங்கள்
ஆஸ்திரேலியாவில் 65 பெண்கள் பயன்படுத்திய ஆணுறைகளுடன் கடிதங்களைப் பெற்றுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் "இலக்கு வைக்கு தாக்கப்பட்டுள்ளனர்" என்று போலீசார் கூறுகின்றனர்.
கடிதம் பெறப்பட்ட அனைத்துப் பெண்களும் 1999 இல் மெல்போர்னின் கில்பிரேடா கல்லூரி தனியார் பெண்கள் பள்ளியில் பயின்றார்கள்.
பேசைட் பாலியல் குற்றங்கள் மற்றும் குழந்தை வன்கொடுமை விசாரணை குழு இந்த வழக்கை விசாரித்து வருகிறது.
இன்று (மே 17, புதன்கிழமை) இந்த விவகாரம் தொடர்பாக ஆஸ்திரேலிய போலீசார் செய்தியாளர்களை சந்திக்க உள்ளனர்.
65 பெண்களில் சில பெண்களுக்கு ஒன்று அல்ல, பல கடிதங்கள் வந்தன
"பயன்படுத்தப்பட்ட ஆணுறைகளை பெற்ற பெண்களில் பெரும்பாலனவர்களுக்கு பல கடிதங்கள் வந்துள்ளன. அவை அனைத்தும் சந்தேகத்திற்குரிய பயன்படுத்தப்பட்ட பொருளும் உள்ளது" என்று போலீசார் ஒரு அறிக்கையில் தெரிவித்தனர்.
"பாதிக்கப்பட்டவர்கள் ஒருவருடன் மற்றொருவர் தொடர்புடையவர்கள் என்றும் அவர்கள் இலக்கு வைக்கப்பட்ட தாக்குதலின் ஒரு பகுதி என்றும் அதிகாரிகள் நம்புகிறார்கள்" என்று போலீசார் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | Digital Currency: அங்கீகரிக்கப்பட்ட டிஜிட்டல் நாணயங்களின் சில வடிவங்கள்
இவ்வாறு கடிதம் பெற்ற முதல் பெண் மார்ச் மாதம் போலீசில் புகாரளித்தார். மார்ச் மாதம் தொடங்கி, இரண்டு நாட்கள் முன்பு வரை மொத்தம் 65 பெண்கள் பயன்படுத்தப்பட்ட ஆணுறை தொடர்பாக புகாரளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
பெண்கள் தங்கள் முகவரிகள், தாங்கள் படித்த பள்ளியின் ஆண்டுமலர் புத்தகத்தில் இருந்து பெறப்பட்டதாக சந்தேகிக்ப்பதாக மெல்போர்னின் ஹெரால்ட் சன் செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தக் கடிதங்களை பெற்ற பெண்களில் சிலர், முதலில் அசூசை அடைந்ததாகவும், இரவில் தூங்கவில்லை என்றும் சொல்கின்றனர். பிறகு, அதில் சிலர், தங்கள் தோழிகளிடம் பேசியபோது, அவர்களில் சிலரும், இதுபோன்ற அநோமதேய கடிதங்கள் மற்றும் பயன்படுத்தப்பட்ட ஆணுறைகளை பெற்றதாக தெரிவித்தனர்.
பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில், போலீஸ் விசாரணையை மேற்கொண்டுள்ளது, தகவல் தெரிந்தவர்கள், மற்றும் வேறு யாராவது இதுபோன்ற கடிதங்களை பெற்றிருந்தால், தகவல் தெரிவிக்க முன்வருமாறு போலீசார் வலியுறுத்தியுள்ளனர்.
கில்பிரேடா கல்லூரி, ஒரு சுயாதீன கத்தோலிக்க பெண்கள் பள்ளி, 1904 இல் பிரிஜிடின் சகோதரிகளால் நிறுவப்பட்டது என்பது குறிப்பிடத்தகக்து.
மேலும் படிக்க | ராணுவ செயற்கைக்கோள் வசதியை ஆய்வு செய்த ‘மரியாதைக்குரிய அப்பா’ கிம் ஜாங் உன்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ