Oldest Man in the World: 113வது பிறந்தநாளை கொண்டாடிய உலகின் மிக வயதான நபர்

Oldest Man in the world: உலகில் மனிதர்களின் சராசரி வயது 72 ஆண்டுகள் என்றாலும், மாறி வரும் வாழ்க்கை முறை, தொடர்ந்து உருவாகி வரும் புதிய நோய்கள் ஆகியவற்றின் காரணமாக அது மேலும் குறைந்து வருகிறது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 29, 2022, 10:10 AM IST
  • பெரெஸ் மோரா Saturnino de la Fuente Garca என்பவரின் சாதனையை முறியடித்தார்.
  • காபி மற்றும் மதுவுடன் நாளைத் தொடங்கும் மோரா
  • பெரெஸ் மோராவுக்கு முன் கார்சியா தான் வயதானவர் என அறியப்பட்டது.
Oldest Man in the World: 113வது பிறந்தநாளை கொண்டாடிய உலகின் மிக வயதான நபர் title=

Oldest Man in the world: உலகில் மனிதர்களின் சராசரி வயது 72 ஆண்டுகள் என்றாலும், மாறி வரும் வாழ்க்கை முறை, தொடர்ந்து உருவாகி வரும் புதிய நோய்கள் ஆகியவற்றின் காரணமாக அது மேலும் குறைந்து வருகிறது. 

உலகின் வயதான மனிதர்: உள்ள பல்வேறு காரணங்களால் மனிதர்களின் சராசரி ஆயுள் காலம் படிப்படியாக குறைந்து வருகிறது. தற்போது மனிதர்களின் சராசரி ஆயுள் 72 ஆண்டுகள் என்றாலும், மாறி வரும் வாழ்க்கை முறை, தொடர்ந்து உருவாகி வரும் புதிய நோய்கள் ஆகியவற்றின் காரணமாக, அது மேலும் குறைந்து வருகிறது. 

ஆனால், இன்னும் சிலர் ஆரோக்கியமாக நீண்ட காலம் வாழ்ந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறார்கள்.  நீண்ட ஆயுள் காலம்  என்பதோடு, அவர்கள் இன்னும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்பது இங்கே முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம். அப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான் ஜுவான் விசென்டே பெரெஸ் மோரா. 

வெனிசுலாவில் வசிக்கும் பெரெஸ் மோரா, உலகில் வாழும் மிகவும் வயதான நபர். அவர் தனது 113வது பிறந்தநாளை மே 27 அன்று கொண்டாடினார். இந்த சிறப்பு நிகழ்ச்சியில், தனது நீண்ட ஆயுளின் ரகசியத்தை மக்களிடம் பகிர்ந்து கொண்டார். அவரது ஆரோக்கியமான வாழ்க்கையின் ரகசியம் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

மேலும் படிக்க | கொஞ்சிக் கொஞ்சி பேசி மதிமயக்கும் கிளி; வியப்பில் ஆழ்ந்த நெட்டிசன்கள்

காபி மற்றும் மதுவுடன் நாளைத் தொடங்கும் மோரா

ஜுவான் விசென்டே பெரெஸ் மோராவின் பிறந்தநாளில் அவரது நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் சிலர் கலந்து கொண்டனர். கேக் வெட்டப்பட்ட பிறகு, தேவாலயத்திற்கு வெளியே விருந்து நடந்தது. இதற்குப் பிறகு, பெரெஸ் மோரா தினமும் ஒரு கிளாஸ் கரும்பு சாறு குடிப்பதாக கூறினார். 1 கப் காபியுடன் அவர் நாளைத் தொடங்குகிறார். காபிக்குப் பிறகு சிறிது நேரம் கழித்து, கரும்புச் சாற்றில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு கிளாஸ் அகுர்டியன்ட் மதுபானத்தைக் குடிப்பார்.

பெரேஸ் மோரா, கின்னஸ் உலக சாதனை புத்தகத்தால், உலகில் வாழும் மிகவும் வயதான நபராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். 2022 பிப்ரவரி 4ம் தேதி நிலவரப்படி, அவரது வயது 112 ஆண்டுகள் மற்றும் 253 நாட்கள். பெரெஸ் மோரா Saturnino de la Fuente García  என்பவரின் சாதனையை முறியடித்தார். பெரெஸ் மோராவுக்கு முன் கார்சியா தான் வயதானவர் என அறியப்பட்டது. 1909 ஆம் ஆண்டு பிப்ரவரி 11ம் தேதி,  ஸ்பெயினில் பிறந்த கார்சியா ஜனவரி மாதம், 112 வயது 341 நாட்களில் இறந்தார்.

மேலும் படிக்க | Bilateral Microstomia: அரிய நோயால் நிரந்திர புன்னகையுடன் பிறந்த குழந்தை

ஆரோக்கியமான வாழ்க்கை

உள்ளூர் மருத்துவர் அவரை பல முறை பரிசோதித்துள்ளார். பெரெஸ் மோராவின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவர் எந்த மருந்தும் சாப்பிடுவதில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவருக்கு அதிக பிபி மற்றும் காது கேளாமை இருந்தாலும், அதற்கு வயது தான் காரணம் என்கின்றனர் மருத்துவர்கள். அவரது மகள் நெலிடா பெரெஸ் கூறுகையில், அவருக்கு எந்த வித நோயும் இல்லை என்பது எங்களுக்கு நிம்மதி அளிக்கிறது. அவர்களுக்கு மருந்து கூட கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்கிறார்.

மேலும் படிக்க | Viral News: 11 லட்சம் ரூபாய் செலவழித்து நாயாக மாறிய நபர்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News