)
Weight Loss Tips: உடல் பருமன் என்பது இன்று பலரிடம் சர்வசாதாரணமாக காணப்படும் பிரச்சனையாக உள்ளது. உடல் எடையை குறைக்க நாம் பல வித முயற்சிகளை எடுக்கிறோம். நம் வாழ்க்கை முறை மற்றும் உணவு முறையில் சில மாற்றங்களை செய்தால் உடல் எடை அதிகரிக்காமல் தவிர்க்கலாம். உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் அதனை குறைக்க பலவித முயற்சிகளை எடுக்கிறார்கள். சிலர் ஜிம் செல்கிறார்கள், சிலர் கடுமையான உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள். எனினும், சில குறிப்புகளை பின்பற்றினால் நாம் எளிதாக நம் உடல் எடையை குறைக்கலாம். இதற்கான சில எளிய வீட்டு வைத்தியங்களும் உள்ளன.
தொப்பை கொழுப்பை (Belly Fat) குறைப்பது எளிதான காரியம் அல்ல. வயிற்று கொழுப்பை குறைக்க, உணவுடன், சில உடற்பயிற்சிகளும் தேவை. உடல் எடையை குறைக்க, மிக கடினமான, நம்மால் முடியாத பலவற்றை செய்து பார்க்கும் நாம், சில சமயங்களில் மிக எளிய வழிகளை மறந்து விடுகிறோம். தொப்பை கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைத்து உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் சில எளிய வழிகளை பற்றி இந்த பற்றி இந்த பதிவில் காணலாம்.
காய்கறிகள் மற்றும் பழங்கள்
தொப்பையை குறைப்பதில் காய்கறிகள் மற்றும் பழங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. இந்த உணவுகளில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளன. இவை வயிற்றுக்கு முழுமையான உணர்வை அளித்து, பசியைக் குறைத்து, தொப்பையை குறைக்கவும் உதவுகின்றன.
கிரீன் டீ
ஆண்டி-ஆக்சிடெண்ட் பண்புகள் நிறைந்த கிரீன் டீயை உட்கொள்வதால், உடல் பருமனை விரைவாகக் குறைக்கலாம். இது உடலுக்கு உடனடி ஆற்றலை அளித்து உடலை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும். இதை தொடர்ந்து குடித்து வந்தால், அது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி, உடல் பருமனை கட்டுக்குள் வைத்திருக்கும். கிரீன் டீயில் உள்ள கலவைகள் கொழுப்பை எரிக்கும் ஹார்மோன்களை செயல்படுத்துகின்றன.
ஓட்ஸ்
தொப்பையை குறைப்பதில் ஓட்ஸ் சிறந்ததாக கருதப்படுகிறது. ஓட்சில் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து உள்ளது. இது நீண்ட நேரத்திற்கு நிரம்பிய உணர்வை அளித்து பசியைக் குறைக்க உதவுகிறது. ஓட்ஸ் சாப்பிடுவது தொப்பை கொழுப்பை குறைக்கவும் உதவும்.
இளநீர்
இளநீர் தொப்பையை குறைக்க பெரிதும் உதவுகிறது. இது நமது உடலுக்கு தேவையான புத்துணர்ச்சியையும் ஆற்றலையும் வழங்குகிறது. இதனால் உடற்பயிற்சி செய்வதனால் ஏற்படும் சோர்வும் உடனடியாக சரியாகிறது. இதை குடிப்பது நீண்ட நேரத்திற்கு உடலை நிரம்பிய உணர்வுடன் வைத்திருக்கிறது.
தயிர்
தயிரில் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் புரோபயாடிக்குகள் உள்ளன. இவை தொப்பை கொழுப்பை வேகமாக கரைக்க உதவுகின்றன. வெயிலில் தயிரை சிலுப்பி மோராக குடிப்பது உடலுக்கு தேவையாக குளிர்ச்சியையும் புத்துணர்ச்சியையும் அளிக்கின்றது.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ