ஆந்திர பிரதேஷ் விரைவு ரயிலில் தீ விபத்து!

மத்திய பிரதேச மாநிலம், குவாலியரில் உள்ள பிர்லாநகர் ரயில் நிலையத்திலிருந்து ஆந்திர நோக்கி வந்து கொண்டிருந்த ரயிலில் திடீரென தீ பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Last Updated : May 21, 2018, 01:46 PM IST
ஆந்திர பிரதேஷ் விரைவு ரயிலில் தீ விபத்து!

மத்திய பிரதேச மாநிலம், குவாலியரில் உள்ள பிர்லாநகர் ரயில் நிலையத்திலிருந்து ஆந்திர நோக்கி வந்து கொண்டிருந்த ரயிலில் திடீரென தீ பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டெல்லியிலிருந்து விசாகப்பட்டினம் நோக்கி சென்ற ஆந்திர பிரதேஷ் விரைவு ரயிலின் ஏசி பெட்டிகளில் இந்த தீ பற்றியது. ரயிலின் 4 பெட்டிகளில் பற்றிய தீ மளமளவென கொழுந்துவிட்டு எரிந்தது. தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து ரயிலிருந்து உடனடியாக மக்களை இறக்கிவிட்டதால் உயிரிழப்பு தவிர்க்கப் பட்டுள்ளது.

தற்போது தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

More Stories

Trending News