2000 Rupees Note Update: இந்திய ரிசர்வ் வங்கி ரூ. 2000 நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்ப பெற்றுக்கொள்வதாக முடிவு செய்த பிறகு, நாட்டில் பலரும் தற்போது தங்களின் கைவசம் உள்ள ரூ. 2000 நோட்டுகளை மாற்ற தயாராகி வருகின்றனர்.
மே 23ஆம் தேதியான நாளை முதல் வங்கிகளில் ரூ. 2,000 நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், பெட்ரோல் பங்குகள், வணிக வளாகங்கள், நட்சத்திர உணவகங்கள் என பணப்புழக்கம் அதிகமுள்ள இடங்களில் மக்கள் தற்போது ரூ. 2000 நோட்டுகளை அதிகம் பயன்படுத்துவதாக தெரிகிறது.
தங்கத்தை வாங்க துடிக்கும் மக்கள்
குறிப்பாக, மக்கள் அந்த ரூ. 2000 நோட்டுகளை பயன்படுத்தி அதிகமானோர் தங்கம் வாங்கிவருவதாகவும், நகைக்கடைகளில் 2000 ரூபாய் நோட்டுகளில் புழக்கம் அதிகரித்திருப்பதாகவும் கூறப்படுகிரது. ஏனெனில், ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பால், மக்கள் தங்களிடம் இருக்கும் ரூ. 2000 நோட்டுகளை கடைகளில் மடைமாற்றம் செய்ய முயல்கின்றனர்.
இந்தியாவில் கடந்த 11 வாரங்களில் முதல் முறையாக தங்கம் பிரீமியத்தில் இன்று வர்த்தகம் செய்யப்பட்டது. சில குடிமக்கள் 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் வைப்பதை விட தங்கமாக வாங்குவதை விரும்பினர். நகைக்கடைக்காரர்கள் மட்டுமின்றி, ரூ. 2000 நோட்டை மாற்ற பல புதிய வழிகளை குடிமக்கள் முயற்சித்து வருகின்றனர்.
சோமாட்டோ ட்வீட்
ரிசர்வ் வங்கி நோட்டு வாபஸ் பெறுவதாக அறிவித்த வெள்ளிக்கிழமை முதல் 'கேஷ் ஆன் டெலிவரி' ஆர்டர்களில் 72 விழுக்காடு, 2000 ரூபாய் நோட்டுகள் தங்களிடம் வந்துள்ளதாக உணவு விநியோக நிறுவனமான சோமாட்டோ தெரிவித்துள்ளது. இதுகுறித்து சோமாட்டோ வெளியிட்ட அந்த ட்வீட்டில், 2000 ரூபாய் தாள்களில் ஒருவர் படுத்திருப்பது போன்ற மீம் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது.
since friday, 72% of our cash on delivery orders were paid in ₹2000 notes pic.twitter.com/jO6a4F2iI7
— zomato (@zomato) May 22, 2023
அதாவது, 'Breaking Bad' என்ற ஆங்கில தொடரில் வரும் கதாபாத்திரம் ஒன்று, கட்டுக்கட்டாக மெத்தை போல் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் அமெரிக்க டாலர்களின் மேல் படுத்து, தனது சந்தோஷத்தை அனுபவிக்கும். அதை உதாரணமாக வைத்து, சோமாட்டோ இந்த தகவலை நகைச்சுவையான புகைப்படத்தின் மூலம் வெளிப்படுத்தியுள்ளது.
ஆர்பிஐ கவர்னர் கூறியது என்ன?
ரூ. 2000 நோட்டுகளை புழக்கத்தில் இருந்து வாபஸ் பெறுவது குறித்து ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று கூறுகையில்,"செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் பெரும்பாலான ரூபாய் 2,000 நோட்டுகள் திரும்ப வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உடனடியாக அமலுக்கு வரும் வகையில் 2000 மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை வழங்குவதை நிறுத்துமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது" என்றார்.
அதிக மதிப்புள்ள கரன்சி நோட்டை வாபஸ் பெறும் திடீர் முடிவு அறிவிக்கப்பட்ட பிறகு முதல்முறையாக செய்தியாளர்களிடம் பேசிய தாஸ், இந்த முடிவு நாணய நிர்வாகத்தின் ஒரு பகுதியாகும் என்றார். 2,000 ரூபாய் நோட்டுகள் செப். 30ஆம் தேதிக்கு பின் செல்லாது என்றும் அவர் கூறினார்.
2016இல் அறிமுகப்படுத்தப்பட்டது
2016ஆம் ஆண்டில் ரூ. 500 மற்றும் ரூ. 1,000 நோட்டுகள் செல்லாது என அறிவித்தபோது 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகமாகின. பின்னர், 2018-19 ஆம் ஆண்டில் ரிசர்வ் வங்கி அவற்றை அச்சிடுவதை நிறுத்தியதால் ரூ. 2,000 நோட்டுகளை வைத்திருப்பவர்கள் தற்போது குறைவாக உள்ளனர் என கூறப்படுகிறது.
அந்த நேரத்தில் புழக்கத்தில் இருந்த ரூ. 500 மற்றும் ரூ.1000 நோட்டுகளின் சட்டப்பூர்வ டெண்டர் நிலை திரும்பப் பெற்ற பிறகு, பொருளாதாரத்தின் நாணயத் தேவையை விரைவாகப் பூர்த்தி செய்வதற்காக, நவம்பர் 2016இல் ரூ. 2000 மதிப்புள்ள ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு 2018ஆம் ஆண்டு மார்ச் 31, 2018 2000 ரூபாய் நோட்டுகள் 37.3 விழுக்காடாகும். அதன் மதிப்பு ரூ. 6.73 லட்சம் கோடி. 2023ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதியில், புழக்கத்தில் உள்ள நோட்டுகளின் மதிப்பு ₹3.62 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | 2000 Rupees Note: எச்சரிக்கை! போலி 2000 ரூபாய் நோட்டுகளை கண்டுபிடிப்பது எப்படி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ