ரூ.6,000 கோடியை அள்ளி தரும் அரசு! ஊழியர்களுக்கு எவ்வளவு கிடைக்கும்?

7th Pay Commission: ஏழாவது ஊதியக்குழுவை செயல்படுத்துவதற்காக கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை சுமார் ரூ. 6,000 கோடி நிதியை ஒதுக்கியுள்ளதாக கடந்த வெள்ளிக்கிழமையன்று  தெரிவித்துள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Feb 21, 2023, 09:46 AM IST
  • மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது 38% வழங்கப்பட்டு வருகிறது.
  • அகவிலைப்படி 38% லிருந்து 42% சதவீதமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • அகவிலைப்படியை போலவே அகவிலை நிவாரணமும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரூ.6,000 கோடியை அள்ளி தரும் அரசு! ஊழியர்களுக்கு எவ்வளவு கிடைக்கும்? title=

7th Pay Commission: கர்நாடக அரசு ஏழாவது ஊதியக் குழுவை செயல்படுத்துவதை நோக்கமாக கொண்டு அதற்காக பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றது.  ஏழாவது ஊதியக்குழுவை செயல்படுத்துவதற்காக கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை சுமார் ரூ. 6,000 கோடி நிதியை ஒதுக்கியுள்ளதாக கடந்த வெள்ளிக்கிழமையன்று  தெரிவித்துள்ளார்.  மாநில அரசு ஊழியர்களுக்கான சம்பள திருத்தம் குறித்த 7வது ஊதியக் குழு அறிக்கையை முன்னாள் தலைமைச் செயலாளர் சுதாகர் ராவ் தலைமையிலான குழு வழங்கும் என்று முதல்வர் பசவராஜ் தெரிவித்தார்.  மேலும் 2023-24 நிதியாண்டுக்கான மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, ஏழாவது ஊதியக்குழுவை செயல்படுத்துவதற்குத் தேவையான கூடுதல் நிதிகள் துணை பட்ஜெட்டில் சேர்க்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | 7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு ஓர் அதிர்ச்சி செய்தி! ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் புதிய விதி!

போதுமான அளவு மானியங்கள் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளதால் ஏழாவது ஊதியக்குழுவை செயல்படுத்துவதில் அரசுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது என்றும் முதல்வர் கூறியுள்ளார்.  தற்போது மத்திய அரசு அதன் ஊழியர்களுக்கு 38% அகவிலைப்படியை வழங்கி வரும் நிலையில் ஏழாவது ஊதியக்குழுவின் மூலம் தனது ஒரு கோடிக்கும் அதிகமான ஊழியர்கள்  மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை (டிஏ) 42 சதவீதமாக உயர்த்தி வழங்கும் என்று ஊழியர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.  அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி மட்டுமின்றி ஓய்வூதியதரர்களுக்கான அகவிலை நிவாரணத்திலும் அரசு திருத்தங்களை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாழ்க்கைக்கு தேவையான செலவுகளை சமாளிக்கும் வகையில் பொதுத்துறை ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் தொகை தான் அகவிலைப்படி (டிஏ) ஆகும். அகவிலைப்படி போலவே அரசு ஓய்வூதியதாரர்கள் அலவன்ஸ்களுக்காக அகவிலை நிவாரணம் (டிஆர்) வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் தொழிலாளர் பணியகத்தால் வெளியிடப்படும் தொழில்துறை தொழிலாளர்களுக்கான (CPI-IW) மிக சமீபத்திய நுகர்வோர் விலைக் குறியீட்டைப் பயன்படுத்தி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி கணக்கிடப்படுகிறது.

மேலும் படிக்க | கிழிந்த ரூபாய் நோட்டுக்கள் உள்ளதா? இலவசமாக மாற்றி கொள்ளலாம்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News