ரூ. 500, 100, 50... நோட்டுகள்: ரிசர்வ் வங்கி அளித்த முக்கிய அப்டேட், உடனே தெரிந்துகொள்ளுங்கள்

RBI Rules For Mutilated Notes: சிதைந்த அல்லது மிகவும் மோசமான நிலையில் உள்ள நோட்டுகள் உங்களிடம் இருந்தால், ஆர்பிஐ விதிகள் பற்றி தெரிந்துகொள்வது அவசியமாகும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 4, 2023, 04:25 PM IST
  • எந்த வகையான நோட்டுகள் சிதைக்கப்பட்ட நோட்டுகளாக கருதப்படுகின்றன?
  • பரிமாற்றத்தை யாரும் மறுக்க முடியாது.
  • வங்கிக் கணக்கு திறக்க வேண்டிய அவசியமில்லை.
ரூ. 500, 100, 50... நோட்டுகள்: ரிசர்வ் வங்கி அளித்த முக்கிய அப்டேட், உடனே தெரிந்துகொள்ளுங்கள்

RBI Rules For Mutilated Notes: ரிசர்வ் வங்கியிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, தங்களிடம் சிதைந்த ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்கள் கவலை கொள்ளத் தேவை இல்லை. இது தொடர்பான புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இது குறித்து இந்த பதிவில் காணலாம்.

Add Zee News as a Preferred Source

இந்தியாவில் காகித ரூபாய் நோட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆகையால் அவை அழுக்காவதும் சிதைந்து போவதும் மிகவும் பொதுவானது. பல முறை வங்கி ஏடிஎம்மில் பணம் எடுக்கச் செல்லும் போது, கிழிந்த நோட்டுகளையே பெற வேண்டிய நிலையும் ஏற்படுகின்றது. இப்போது அது தொடர்பான விதிகளை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. சிதைந்த அல்லது மிகவும் மோசமான நிலையில் உள்ள நோட்டுகள் உங்களிடம் இருந்தால், அவற்றை பற்றி தெரிந்துகொள்வது அவசியமாகும்.

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வங்கிக்கும் அழுக்கடைந்த, சிதைந்த மற்றும் சேதமடைந்த நோட்டுகளுக்கு பதிலாக புதிய நோட்டுகளுக்களை மாற்றுவதற்கான வசதியை வழங்க உத்தரவிட்டுள்ளது. ஆனால் அத்தகைய நோட்டுகளின் மதிப்பை தீர்மானிக்க விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த விதிகளைப் பற்றி இங்கே காணலாம். 

பரிமாற்றத்தை யாரும் மறுக்க முடியாது

ரிசர்வ் வங்கியிடம் (Reserva Bank of India) இருந்து பெறப்பட்ட தகவலின்படி, உங்களிடம் சிதைந்த அல்லது சேதமடைந்த நோட்டுகள் இருந்தால், பீதி அடையத் தேவையில்லை. ரிசர்வ் வங்கி அல்லது வேறு எந்த வங்கியும் அத்தகைய நோட்டுகளை ஏற்க மறுக்க முடியாது. ரிசர்வ் வங்கி (நோட் ரீஃபண்ட்) விதிகளின் கீழ், சிதைந்த அல்லது சேதமடைந்த நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம்.

ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவது நோட்டின் நிலையைப் பொறுத்தது. சிதைந்த நோட்டுகளை ரிசர்வ் வங்கி அலுவலகங்கள் அல்லது நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம். இருப்பினும், இந்த ரூபாய் நோட்டுக்களை வங்கிகள் மாற்றிக்கொள்வது முற்றிலும் நோட்டின் நிலையைப் பொறுத்தது.

வங்கிக் கணக்கு திறக்க வேண்டிய அவசியமில்லை

டிபிஎஸ் பேங் இந்தியா, நுகர்வோர் வங்கி குழுமத்தின் நிர்வாக இயக்குநரும் தலைவருமான பிரசாந்த் ஜோஷி, “அழுக்கடைந்த மற்றும் சிதைந்த நோட்டுகளை மாற்றும் வசதிக்காக ஒருவர் கணக்கு தொடங்க தேவையில்லை. அவர் தனது அருகிலுள்ள வங்கிக் கிளைகளுக்குச் சென்று இந்த வேலையை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். இந்த சேவையை அனைத்து வேலை நாட்களிலும் பயன்படுத்திக் கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார். 

எந்த வகையான நோட்டுகள் சிதைக்கப்பட்ட நோட்டுகளாக கருதப்படுகின்றன? 

தென்னிந்திய வங்கியின் பொது மேலாளரும், வங்கிச் செயல்பாட்டுக் குழுமத்தின் தலைவருமான கே சிவராமன், கரன்சி நோட்டின் ஒரு பகுதி காணாமல் போயிருந்தாலோ அல்லது ரூபாய் நோட்டு இரண்டு அல்லது அதற்கு மேலான துண்டுகளாக கிழிந்து இருந்தாலோ அது சிதைந்த நோட்டாக கருதப்படுகின்றது என்று கூறியுள்ளார்.

சிதைந்த நோட்டுகளின் மதிப்பு எவ்வளவு?

அழுக்கான மற்றும் சிதைந்த நோட்டுகளின் மதிப்பு ரிசர்வ் வங்கி மற்றும் பிற வங்கிகளின் சொந்த விதிகளின்படி தீர்மானிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நாம் பெறும் வங்கி நோட்டின் மதிப்பு நோட்டின் தரத்தைப் பொறுத்தது. வாடிக்கையாளர்கள் நோட்டின் மதிப்பை முழுமையாகவோ, பாதியாகவோ பெறலாம். நோட்டு குறைவாக சிதைந்திருந்தால், சரியான விலையைப் பெறலாம். அதே நேரத்தில், அது அதிக அளவில் சேதம் அடைந்திருந்தால், நீங்கள் பாதி விலையைப் பெறுவீர்கள். அல்லது எதுவுமே கிடைக்காமலும் போகலாம்.

மேலும் படிக்க | பெண்களுக்கான ஜாக்பாட் சேமிப்பு திட்டங்கள்... பணம் போட்டால் பம்பர் லாபம் காணலாம்

ரூ.50 -க்கு குறைவான மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளுக்கான விதி

ரிசர்வ் வங்கி விதிகளின்படி, 50 ரூபாய்க்கும் குறைவான மதிப்புள்ள நோட்டுகளுக்கென்று சில விதிகள் உள்ளன. உங்கள் நோட்டு 50 சதவிகிதம் அல்லது அதற்கும் குறைவாக சேதமடைந்திருந்தால், நீங்கள் முழு மதிப்பையும் பெறலாம். அதே சமயம் 50 சதவீதத்துக்கு மேல் நோட்டு சேதமடைந்திருந்தால் நீங்கள் மாற்றிய நோட்டுக்கு பதிலாக ஒரு ரூபாய் கூட கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது.

ரிசர்வ் வங்கியின் விதிகள் சொல்வது என்ன? 

ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவலின்படி, ரூ.2000 நோட்டின் நீளம் 16.6 செ.மீ., அகலம் 6.6 செ.மீ., பரப்பளவு 109.56 சதுர சென்டிமீட்டர் ஆகும். உங்கள் நோட்டின் அளவு 88 சதுர சென்டிமீட்டராக இருந்தால், உங்களுக்கு முழுத் தொகையும் கிடைக்கும். இது தவிர, உங்கள் நோட்டின் அளவு 44 சதுர சென்டிமீட்டராக இருந்தால் பாதித் தொகை மட்டுமே திருப்பித் தரப்படும்.

500 ரூபாய் நோட்டு தொடர்பான விதி என்ன?

ரூ.500 நோட்டின் நீளம் 15 செ.மீ., அகலம் 6.6 செ.மீ., பரப்பளவு 99 சதுர சென்டிமீட்டர் ஆகும். அந்த நிலையில், ரூ.500 நோட்டின் அளவு 80 சதுர சென்டிமீட்டராக இருந்தால், முழுத் தொகையும், 40 சதுர சென்டிமீட்டராக இருந்தால் பாதித் தொகையும் திருப்பித் தரப்படும்.

மேலும் படிக்க | Business Idea: லட்சங்களில் வருமானத்தை அள்ளித் தரும் காளான் வளர்ப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News