கோவிட் தடுப்பூசி போட்டவர்களுக்கு FD-யில் கூடுதல் வட்டி: கலக்கும் Central Bank of India

கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலைக்கு மத்தியில், அதிகமான மக்களை கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி ஊக்கப்படுத்தும் வகையில், மத்திய வங்கி (செண்ட்ரல் பாங்க்) நிலையான வைப்புத் தொகை சார்ந்த ஒரு திட்டத்தை கொண்டு வந்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 13, 2021, 01:07 PM IST
  • கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு வங்கியில் சிறப்பு சலுகை.
  • கூடுதல் வட்டி அளிப்பதாக அறிவித்தது செண்ட்ரல் வங்கி.
  • தடுப்பூசி போட்டுக்கொள்வதை ஊக்கப்படுத்த இந்த திட்டத்தை அறிமுகம் செய்தது செண்ட்ரல் வங்கி.
கோவிட் தடுப்பூசி போட்டவர்களுக்கு FD-யில் கூடுதல் வட்டி: கலக்கும் Central Bank of India title=

புதுடெல்லி: கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலைக்கு மத்தியில், அதிகமான மக்களை கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி ஊக்கப்படுத்தும் வகையில், மத்திய வங்கி (செண்ட்ரல் பாங்க்) நிலையான வைப்புத் தொகை சார்ந்த ஒரு திட்டத்தை கொண்டு வந்துள்ளது. கோவாக்சின் அல்லது கோவிஷீல்ட் தடுப்பூசிகளை போட்டுக்கொண்டவர்கள் இந்த திட்டத்தின் நன்மைகளைப் பெற முடியும். 

செண்ட்ரல் பாங்க், தனது “Immune India Deposit Scheme” அதாவது, “நோயெதிர்ப்பு இந்தியா: வைப்புத் தொகை திட்டத்தை” அறிமுகப்படுத்தியுள்ளது. “தடுப்பூசி ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது, மத்திய வங்கி செல்வத்தைக் கொண்டுவருகிறது” என்ற பிரச்சாரத்துடன் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

"மக்கள் COVID 19-க்கான தடுப்பூசியை போட்டுக்கொள்வதை ஊக்குவிப்பதற்காக, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா 1111 நாட்களுக்கு,  " நோயெதிர்ப்பு இந்தியா வைப்புத் திட்டம்” என்ற சிறப்பு வைப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. இதில், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு, அவர்களுக்கு உரித்தான கார்ட் விகிதத்தை விட 25 புள்ளிகள் அதிமான வட்டி விகிதம் அளிக்கப்படும்” என்று செண்ட்ரல் பாங்க் ட்வீட் செய்துள்ளது. 

கோவிட் தடுப்பூசி (Vaccine) போட்டுக்கொண்டவர்களுக்கு செண்ட்ரல் பாங்கியின் FD விகிதம் 
“இம்யூன் இந்தியா டெபாசிட் திட்டத்தின்” கீழ், சென்ட்ரல் வங்கி நிலையான வைப்புத்தொகைக்கு 25 அடிப்படை புள்ளிகள் கூடுதல் வட்டி விகிதத்தை வழங்குகிறது. 

ALSO READ: பீதியைக் கிளப்பும் கோவிட் எண்ணிக்கை: 1.45 லட்சத்திற்கும் மேலானோர் புதிதாக பாதிப்பு

மூத்த குடிமக்களுக்கு மத்திய வங்கி 0.50 சதவீதம் கூடுதல் வட்டியையும் வழங்குகிறது.

“இம்யூன் இந்தியா டெபாசிட் திட்டத்திற்கான” கால அளவு 1111 நாட்களாகும்.

“இம்யூன் இந்தியா டெபாசிட் திட்டத்திற்கு” தகுதி பெற, நீங்கள் கோவிட் -19 தடுப்பூசி போடுக்கொண்டிருக்க வேண்டும். 

வைரஸுக்கு (Coronavirus) எதிராக தடுப்பூசி போட்டுக்கொண்டு, குறிப்பிட்ட காலத்திற்கு அறிவிக்கப்பட்டிருக்கும் அதன் கவர்ச்சிகரமான சலுகையை பெற இந்திய செண்ட்ரல் வங்கி குடிமக்களைக் கோரியுள்ளது. மூத்த குடிமக்களுக்கு அவர்களுக்கு பொருந்தும் வகையில் கூடுதல் வட்டியும் அளிக்கப்படும்.

ALSO READ: கவனம்! கொரோனா ஆட்டம், ஆபத்தில் இந்த 16 மாநிலங்கள்!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News