லித்தியம்: அடி தூள்..! சத்தீஸ்கரில் மிகப்பெரிய அளவிலான லித்தியம் படிமம் கண்டுபிடிப்பு

 Chhattisgarh Lithium: ஜம்மு காஷ்மீரைத் தொடர்ந்து சத்தீஸ்கர் மாநிலத்திலும் மிகப்பெரிய அளவிலான லித்தியம் படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் லித்தியம் இருப்பில் இந்தியாவின் அதிகரிக்கும் எதிர்பார்க்கப்படுகிறது.    

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 21, 2023, 03:51 PM IST
லித்தியம்: அடி தூள்..! சத்தீஸ்கரில் மிகப்பெரிய அளவிலான லித்தியம் படிமம் கண்டுபிடிப்பு title=

லித்தியம் அடுத்த கேம்சேஞ்சராக இருக்கப்போகிறது. மின்சார வாகனங்களுக்கு தேவையான லித்தியம் அயன்பேட்டரி தயாரிப்பின் மூலப் பொருளாக லித்தியம் இருப்பதால், உலக நாடுகள் அனைத்தும் இப்போது லித்தியம் புதைவடிவங்களின் இருப்பை கண்டறிய தீவிரம் காட்டி வருகின்றன. இந்தியாவில் ஏற்கனவே ஜம்மு காஷ்மீரில் மிகப்பெரிய அளவில் லித்தியம் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது சத்தீஸ்கரிலும் பெருமளவிலான லித்தியம் படிம இருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு இடத்தில் இடத்தில் மட்டுமல்லாது அம்மாநிலத்தின் பல பகுதிகளில் லித்தியம் படிமங்கள் இருப்பதாக ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

லித்தியம் இருப்பு உறுதி

கடந்த 5 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவில் இரண்டு இடங்களில் லித்தியம் இருப்பது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டிருக்கிறது. முதலாவது கோர்பாவின் கட்கோரா. அங்கு மங்குரு மலையைச் சுற்றி லித்தியத்தின் சான்றுகள் கிடைத்துள்ளன. இரண்டாவது இடம் சுக்மா. இங்கும் ஏராளமான லித்தியம் இருப்பதற்கான அறிகுறிகள் உள்ளன. இதனைத் தொடர்ந்து லித்தியம் தொகுதியை ஏலம் விடுவதற்கான முயற்சியில் மாநில அரசு ஈடுபட்டுள்ளது. இதற்கான முன்மொழிவை அரசு தயாரித்து, மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. லித்தியம் தொகுதியை ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில அரசுக்கு மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.

மேலும் படிக்க | இந்தியாவின் ’லித்தியம் புதையல்’ பேட்டரி துறையில் சீனாவை பின்னுக்கு தள்ளும்..! எப்படி?

லித்தியம் உபயோகம்

லித்தியம் முக்கியமாக மின் வாகனங்கள், மடிக்கணினிகள் மற்றும் மொபைல்களுக்கு பேட்டரிகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இந்த பேட்டரிகளில் 2 வகைகள் உள்ளன. முதல் லித்தியம் NCM மற்றும் இரண்டாவது LIFO 4. லித்தியம் NCM-ஐ உருவாக்க, லித்தியத்துடன் நிக்கல், கோபால்ட் மற்றும் மாங்கனீசும் தேவைப்படுகிறது. LiFO 4-க்கு லித்தியத்துடன் இரும்பு மற்றும் பாஸ்பேட் தேவைப்படுகிறது. இந்த கனிம கூறுகள் அனைத்தும் சத்தீஸ்கரில் ஏற்கனவே உள்ளன. அத்தகைய சூழ்நிலையில், சத்தீஸ்கரில் லித்தியம் அயன் பேட்டரிகள் தயாரிப்பது எளிதாகவும் சிக்கனமாகவும் இருக்கும். அங்கு லித்தியம் சுரங்கம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதால், அம்மாநில அரசும் இதனை துரிதப்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கரின் கேம்சேஞ்சர்

சிஏஐடியின் தேசிய துணைத் தலைவர் அமர் பர்வானி கூறுகையில், மாநிலத்தில் லித்தியம் இருப்புக்கள் சத்தீஸ்கருக்கு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். தற்போது சீனாவில் லித்தியம் இருப்பு அதிகமாக உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் லித்தியத்துக்கு இந்தியா சீனாவை நம்பியிருக்கிறது. சத்தீஸ்கர் மண்ணில் இருந்து லித்தியம் பிரித்தெடுக்கும் பணி தொடங்கினால், இந்த விஷயத்தில் நாடு தன்னிறைவு அடையும். அதுமட்டுமல்லாமல் லித்தியம் எதிர்காலத்தின் தேவை என்பதால் சத்தீஸ்கர் மாநிலத்தில் தொழில்களின் வளர்ச்சியிலும் இது பெரும் பங்கு வகிக்கும் என கூறியுள்ளார்.

சீனா ஆதிக்கம்

லித்தியம் இருப்பு மற்றும் அதனை பிரித்தெடுப்பதில் உலகளவில் சீனா மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அந்நாடு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே லித்தியம் தேவை குறித்து கணித்து அதற்கான அடிப்படை கட்டமைப்புகளை மேற்கொண்டது. அதன் விளைவாக உலகிலேயே லித்தியம் பிரித்தெடுப்பதில் 60 விழுக்காடு கட்டமைப்பு அந்நாட்டிடம் மட்டுமே இருக்கிறது. இதுமட்டுமல்லாது அடுத்தடுத்த பணிகளையும் உலகம் முழுவதும் சீனா விரிவுபடுத்திக் கொண்டிருக்கிறது. இந்தியாவை பொறுத்தவரை சீனாவுடன் போட்டியிடுவதற்கான கட்டமைப்புகளையும் முதலீடுகளையும் பெறுவதற்கு இன்னும் 10 ஆண்டுகளுக்கும் மேலாகும். 

மேலும் படிக்க | லித்தியம்: அசுர பலத்தோடு இருக்கும் சீனா...! இந்தியா இன்னும் சிந்திக்கனும்

மேலும் படிக்க | 7th Pay Commission: இந்த தேதியில் வருகிறது மாஸ் அறிவிப்பு, குஷியில் ஊழியர்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News