இன்னும் 15 நாட்களில் குரு அஸ்தமனம்: இந்த ராசிகளுக்கு அமர்க்களமான வாழ்க்கை, ராஜயோகம்

Jupiter Combust in Taurus: ஜோதிட கணக்கீடுகளின்படி, வரும் மே 1 ஆம் தேதி குரு ரிஷப ராசியில் பெயர்ச்சி அடைகிறார். இதன் பிறகு இரண்டு நாட்கள் கழித்து, மே 3ம் தேதி இரவு 10:08 மணிக்கு ரிஷப ராசியில் அஸ்தமனம் ஆகுகிறார் குரு பகவான்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 20, 2024, 06:40 PM IST
  • நல்ல நேரமாக இருக்கும், சிறந்த முடிவுகளைப் பெறுவீர்கள்.
  • சகோதர சகோதரிகளின் அன்பைப் பெறுவீர்கள்.
  • பொருளாதார நிலை முன்பை விட மேம்படும்.
இன்னும் 15 நாட்களில் குரு அஸ்தமனம்: இந்த ராசிகளுக்கு அமர்க்களமான வாழ்க்கை, ராஜயோகம் title=

Jupiter Combust in Taurus: ஜோதிடத்தில் கிரகங்களின் ராசி மாற்றம் மிகவும் முக்கியமானது. இது எல்லா ராசிக்காரர்களையும் பாதிக்கக்கூடும். அதிர்ஷ்டத்தையும் செல்வத்தையும் தரக்கூடிய குரு கூடிய விரைவில் தனது ராசியை மாற்றப் போகிறார். ஜோதிட கணக்கீடுகளின்படி, குரு பகவான் வரும் மே 1 ஆம் தேதி ரிஷப ராசியில் இடப் பெயர்ச்சி அடையப் போகிறார். அதன் பிறகு இரண்டு நாட்கள் கழித்து, மே 3 ஆம் தேதி இரவு 10:08 மணிக்கு ரிஷப ராசியில் குரு பகவான் அஸ்தமிக்க உள்ளார். குருவின் நிலையால் அனைத்து ராசிகளையும் பாதிக்கும். இருப்பினும், மூன்று ராசிக்காரர்களுக்கு இது மிகவும் மங்களகரமானது மற்றும் மகத்தான வெற்றியைத் தரக்கூடும். அவை எந்த மூன்று ராசிக்காரர்கள் என்பதை இந்த பதிவில் காண்போம்.

1. மேஷம் (Aries Zodiac Sign): மேஷ ராசிக்காரர்களுக்கு குரு அஸ்தமனம் மிகவும் சாதகமான பலனைத் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நேரம் சிறப்பாக இருக்கும். பணியிடத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். வணிகர்கள் புதிய ஒப்பந்தங்களைப் பெறலாம், இது பெரிய லாபத்தைத் தரும். பொருளாதார நிலை முன்பை விட மேம்படும். குடும்ப உறவுகள் வலுவாக இருக்கும். உங்கள் பெற்றோரின் ஆசியுடன் உங்கள் வேலையை சிறப்பாக தொடங்குவீர்கள், நீங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவீர்கள். பதவி உயர்வு மற்றும் இடமாற்றம் கிடைக்கலாம். அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். வீட்டிற்கு புதிய விருந்தினர் வருகை தரலாம். புதிய லாபகரமான வழிகள் மற்றும் திட்டங்கள் உருவாகும். புதிய தொழில் தொடங்கவும், வியாபாரத்தில் லாபம் ஈட்டவும் சிறந்த நேரம். பழைய முதலீடுகளால் லாபம் பெறுவீர்கள்.

மேலும் படிக்க | குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: மே 1 முதல் பண மழையில் நனனையப்போகும் ராசிகள் இவைதான்

2. கடகம் (Cancer Zodiac Sign): கடக ராசிக்காரர்கள் சில நல்ல செய்திகளைக் கிடைக்கலாம். உங்கள் வேலையில் வெற்றியைப் பெறுவீர்கள். நீண்ட நாட்களாக தடைகள் இருந்தால் அவற்றில் இருந்து விடுப்பீர்கள். எல்லாத் துறைகளிலும் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. காதல் வாழ்க்கை மேம்படும், தனிமையில் இருப்பவர்களுக்கு வாழ்க்கை துணை கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். திருமண வாழ்க்கையில் இனிமை இருக்கும், உங்கள் துணையின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருபவர்களுக்கு நல்ல நேரமாக இருக்கும், சிறந்த முடிவுகளைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகரிக்கலாம்.

3. துலாம் (Libra Zodiac Sign): துலாம் ராசிக்காரர்களுக்கு குரு அஸ்தமனத்தால் வாழ்க்கையில் பெரிய நேர்மறையான மாற்றங்களைக் காணலாம். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல நேரம், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு சாதகமாக பலன் கிடைக்கும். சிக்கிய பணத்தை திரும்பப் பெறுவீர்கள். புதிய வருமான ஆதாரங்களும் உருவாகி பொருளாதார நிலை மேம்படும். சகோதர சகோதரிகளின் அன்பைப் பெறுவீர்கள். குடும்பப் பொறுப்புகளை சுமுகமாக நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்திற்கு இந்த வருடம் சிறப்பாக இருக்கும். ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். காதல் திருமணம் செய்துக் கொள்ளலாம்.

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | இன்னும் 5 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகள் மீது கரன்சி மழை, சொகுசு வாழ்க்கை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News