ரிடையர் ஆன பிறகு மாதா மாதம் அசத்தலான ஓய்வூதியம் அளிக்கும் 5 சிறந்த திட்டங்கள்

Retirement Planning: வயதான காலத்தில் உங்களுக்கான வழக்கமான வருமானத்திற்கான உறுதியான தீர்வாகக் கருதப்படும் 5 சிறப்பான திட்டங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 17, 2024, 08:59 AM IST
  • அடல் பென்ஷன் யோஜனா.
  • தேசிய ஓய்வூதிய அமைப்பு.
  • தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம்.
ரிடையர் ஆன பிறகு மாதா மாதம் அசத்தலான ஓய்வூதியம் அளிக்கும் 5 சிறந்த திட்டங்கள் title=

Retirement Planning: மனித வாழ்க்கைக்கு பணம் மிகவும் முக்கியமானது. ஒவ்வொரு வயதிலும் அது வரும் விதமும் அதற்கான தேவையும் மாறுபடலாம். ஆனால், அதன் அவசியம் என்றும் குறையாது. ஒரு குறிப்பிட்ட வயதை எட்டியவுடன், உதாரணமாக பணி ஓய்வுக்கு பிறகான காலத்தில் நம்மால் இள வயதில் உழைப்பது போல் உழைத்து பணம் ஈட்ட முடுயாது. அப்படிப்பட்ட காலங்களுக்கு முன்னரே திட்டமிட்டு பணம் சேர்ப்பது நல்லதாகும். முதுமையை நிம்மதியாக கழிக்க விரும்பினால், ஒரு மொத்த தொகையுடன் வழக்கமான வருமானத்திற்கான ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். மொத்தமாக இருக்கும் பெரிய தொகையானது முதுமைக்கான பாதுகாப்பை அளிக்கும். அதே நேரத்தில் மாத வருமானம் அன்றாட தேவைகளை எளிதாக பூர்த்தி செய்துகொள்ள உதவும்.

இப்படி திட்டமிட்டால் முதுமையில் யாரையும் சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்படாது. வயதான காலத்தில் உங்களுக்கான வழக்கமான வருமானத்திற்கான உறுதியான தீர்வாகக் கருதப்படும் 5 சிறப்பான திட்டங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம். 

அடல் பென்ஷன் யோஜனா (Atal Pension Yojana)

நீங்கள் வரி செலுத்துபவராக இல்லாவிட்டால், அடல் பென்ஷன் திட்டம் மூலம் வயதான காலத்தில் வழக்கமான வருமானத்திற்கு ஏற்பாடு செய்யலாம். இதில், 18 வயது முதல் 40 வயது வரை பதிவு செய்து கொள்ளலாம். இதில், 60 வயது நிறைவடையும் வரை, மாதந்தோறும் சிறு தொகையை செலுத்த வேண்டும். இத்திட்டத்தின் மூலம், 60 வயதுக்கு பின், 1000 ரூபாய் முதல், 5,000 ரூபாய் வரை, மாத ஓய்வூதிய பலன் வழங்கப்படுகிறது. வயதான காலத்தில் ஒருவர் பெற விரும்பும் ஓய்வூதியத்தின் அளவைப் பொறுத்து அவரது பங்களிப்பு தீர்மானிக்கப்படுகிறது.

தேசிய ஓய்வூதிய அமைப்பு (National Pension System)

தேசிய ஓய்வூதிய முறையும் மாதாந்திர ஓய்வூதியம் பெற ஒரு நல்ல வழியாக கருதப்படுகின்றது. 18 முதல் 70 வயது வரை உள்ள இந்திய குடிமகக்கள் யார் வேண்டுமானாலும் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் இது சந்தையுடன் இணைக்கப்பட்ட அரசாங்கத் திட்டம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற 60 வயது வரை முதலீடு செய்ய வேண்டும். இருப்பினும், கணக்கு வைத்திருப்பவருக்கு ஓய்வு பெறுவதற்கு முன் அவசர நிதி தேவைப்பட்டால், அவர் வைப்புத்தொகையிலிருந்து 60% தொகையை திரும்பப் பெறலாம். இருப்பினும், இதில் 40 சதவீதம் ஆனுவிட்டியாக பயன்படுத்தப்படுகிறது. இந்த வகையில் NPS உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. ஆனுவிட்டி தொகை அதிகமாக இருந்தால், ஓய்வூதியமும் அதிகமாக இருக்கும். 

சிஸ்டமேடிக் வித்ட்ராயல் திட்டம் (Systematic Withdrawal Plan)

சிஸ்டமேடிக் வித்ட்ராயல் திட்டம் என்பது ஒரு முதலீட்டுத் திட்டமாகும், இதன் கீழ் முதலீட்டாளர் ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்திலிருந்து மாதந்தோறும் ஒரு நிலையான தொகையைப் பெறுகிறார். இந்த திட்டத்தின் மூலம் நல்ல முதியோர் ஓய்வூதியம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு முதலில் நீங்கள் SIP அல்லது வேறு ஏதேனும் திட்டத்தின் மூலம் பெரும் நிதியை டெபாசிட் செய்ய வேண்டும். நீங்கள் SWP க்காக உங்கள் ஓய்வூதிய நிதியையும் பயன்படுத்தலாம். மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்களை விற்பதன் மூலம் நீங்கள் SWP தொகையைப் பெறலாம். நிதி தீர்ந்துவிட்டால், SWP நிறுத்தப்படும். மாதாந்திர, காலாண்டு மற்றும் ஆண்டுக்கு உங்களுக்கு எப்போது பணம் தேவை என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும். SWPஐ ஆக்டிவேட் செய்ய, AMC -இல் ஃபோலியோ எண், வித்ட்ரா செய்வதற்கான ஃப்ரீக்வன்சி, அதாவது நீங்கள் எந்த இடைவெளியில் பணத்தை எடுப்பீர்கள் என்ற விவரம், முதல் வித்ட்ராயல் தேதி, திரும்பப் பெறுவதற்கான அதிர்வெண், முதல் திரும்பப் பெற்ற தேதி, பணத்தைப் பெற வங்கிக் கணக்கு ஆகியவற்றைக் குறிப்பிடும் இன்ஸ்ட்ர்க்‌ஷன் ஸ்லிப்பை நிரப்ப வேண்டும்.

மேலும் படிக்க | ரயில்வே அமைச்சர் அதிரடி அறிவிப்பு! இனி ரயிலில் வெயிட்டிங் லிஸ்ட் கவலை இல்லை

இபிஎஃப்ஓ (EPFO)

நீங்கள் ஒவ்வொரு மாதமும் EPFO க்கு பங்களிக்கும் பணியாளராக இருந்தால், EPS (Employee Pension Scheme) வசதியைப் பற்றி அறிந்திருப்பீர்கள். தனியார் துறை ஊழியர்களின் ஓய்வுக்குப் பிறகு அவர்களின் சமூகப் பாதுகாப்பிற்காக EPFO இந்த ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துகிறது. நீங்கள் தொடர்ந்து 10 ஆண்டுகள் EPS க்கு பங்களித்திருந்தால், EPFO இலிருந்து ஓய்வூதியம் பெற உங்களுக்கு உரிமை உண்டு. இந்த ஓய்வூதியம் ஓய்வு பெறும் வயதில் அளிக்கப்படுகின்றது. இதன் தொகை பிஎஃப் உறுப்பினர்களின் பங்களிப்பை பொறுத்து இருக்கும். 

தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (Post Office Monthly Income Scheme)

போஸ்ட் ஆபிஸ் மாதாந்திர வருமானத் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் வருமானம் ஈட்டலாம். இந்த அரசாங்க உத்திரவாத டெபாசிட் திட்டத்தில் ஒற்றை மற்றும் கூட்டு கணக்கு இரண்டு வசதியும் உள்ளது. ஒற்றை கணக்கில் அதிகபட்சம் ரூ.9 லட்சமும், கூட்டுக் கணக்கில் அதிகபட்சமாக ரூ.15 லட்சமும் டெபாசிட் செய்யலாம். இந்த பணம் அதிகபட்சம் 5 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்யப்படுகிறது. இதில், உறுப்பினர்கள் வட்டியின் மூலம் பணம் ஈட்டுவார்கள். இதில் உறுப்பினர்களின் டெபாசிட் தொகை முற்றிலும் பாதுகாப்பாக இருக்கும். தற்போதைய 7.4% வட்டி விகிதத்தின்படி, கூட்டுக் கணக்கு மூலம் இந்தத் திட்டத்தில் ரூ.9,250 வரை சம்பாதிக்கலாம். 5 ஆண்டுகளுக்குப் பிறகும், நீங்கள் திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பினால், புதிய கணக்கையும் திறக்கலாம்.

மேலும் படிக்க | முழு நேர வேலை பார்ப்வர்களும் முதலாளி ஆகலாம்! ‘இதை’ செய்யுங்கள் போதும்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News