SBI customers alert: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா முக்கிய எச்சரிக்கை

SBI bank update: எஸ்பிஐ வங்கியில் காசோலை கட்டணங்கள் போன்றவற்றில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 8, 2021, 02:26 PM IST
  • புதிய சேவை கட்டணங்கள் நடைமுறை
  • ஏடிஎம்மில் பணம் எடுக்கும் வாடிக்கையாளர்களிடமிருந்து ரூ.15 +GST
  • மூத்த குடிமக்கள் காசோலை புத்தகத்தில் புதிய சேவை கட்டணத்திலிருந்து விலக்கு
SBI customers alert: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா முக்கிய எச்சரிக்கை title=

ஜூலை 1 ஆம் தேதி முதல் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பு (BSBD) கணக்கு வைத்திருப்பவர்களுக்கு புதிய சேவை கட்டணங்கள் நடைமுறைக்கு வருகிறது. இந்த புதிய கட்டணங்கள் ஏடிஎம் திரும்பப் பெறுதல், காசோலை புத்தகம், பரிமாற்றம் மற்றும் பிற நிதி சாராத பரிவர்த்தனைகளுக்கு பொருந்தும். 

KYC ஆவணங்கள் மூலம் எந்தவொரு நபரும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (State Bank of India) அடிப்படை சேமிப்பு வங்கி கணக்கைத் தொடங்க முடியும். எஸ்பிஐ BSBD கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தேவையில்லை. இந்த கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ரூபே டெபிட் கார்டும் (Debit Card) வழங்கப்படுகிறது.

ALSO READ | SBI Good News: ஊழியர்களுக்கு கூடிய விரைவில் கிடைக்கும் கூடுதல் ஊதியம், விரைவில் அறிவிப்பு

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பு (BSBD) கணக்கு வைத்திருப்பவர்கள் வங்கிக்கிளை மற்றும் ஏடிஎம்கள் மூலம் 4 முறை இலவசமாக பணத்தை திரும்ப எடுக்கலாம். அதன்பிறகு சேவை கட்டணம் செலுத்த வேண்டும். ஏடிஎம்மில் பணம் எடுக்கும் வாடிக்கையாளர்களிடமிருந்து ரூ.15 +GST கட்டணமாக வசூலிக்கப்படும். 

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது Basic Savings Bank Deposit (BSBD) வாடிக்கையாளர்களுக்கு ஒரு நிதியாண்டில் 10 செக்கை இலவசமாக வழங்குகிறது. அதன் பிறகு, புக்கிற்கு ரூ.40 மற்றும் ஜி.எஸ்.டி வசூலிக்கப்படும். 25 லீப் செக் புக்கிற்கு ரூ .75 மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும். அவசரமாக செக்புக் தேவைப்படும் பட்சத்தில் ரூ .50 மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும். மூத்த குடிமக்கள் காசோலை புத்தகத்தில் புதிய சேவை கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள்.

இந்த மாத தொடக்கத்தில், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வீட்டுக் கடன் வட்டி விகிதங்களை 6.70% ஆக குறைத்தது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் 30 லட்சம் வரையிலான கடன்களுக்கு 6.70% வட்டியும், ரூ.30 லட்சம் முதல் ரூ.75 லட்சம் வரையிலான கடன்களுக்கு 6.95% வட்டியும் வசூலிக்கப்படுகிறது. ரூ.75 லட்சம் வரையிலான வீட்டு கடன்களுக்கு 7.05% வட்டி வசூலிக்கப்படுகிறது.

ALSO READ | SBI: பான் மற்றும் ஆதார் அட்டை இணைப்பு தொடர்பாக முக்கிய அறிவிப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News