'பிக் பாஸ்' ஆர்பிஐ அதிரடி... வங்கிகளுக்கு கொடுக்கப்பட்ட '5 டாஸ்க்': புதிய விதிகளால் குஷியில் கஸ்டமர்ஸ்

RBI Update: இந்திய ரிசர்வ் வங்கி சிபில் ஸ்கோர் குறித்த முக்கியமான அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதன் கீழ் பல விதிகள் இடம்பெற்றுள்ளன.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 9, 2023, 02:35 PM IST
  • சிபில் ஸ்கோர் செக் செய்வது குறித்து வாடிக்கையாளருக்கு தகவல் அனுப்பப்படும்.
  • கோரிக்கையை நிராகரிப்பதற்கான காரணத்தைக் குறிப்பிடுவது அவசியம்.
  • வாடிக்கையாளர்களுக்கு இலவச முழு கடன் அறிக்கையை வழங்க வேண்டும்.
'பிக் பாஸ்' ஆர்பிஐ அதிரடி... வங்கிகளுக்கு கொடுக்கப்பட்ட '5 டாஸ்க்': புதிய விதிகளால் குஷியில் கஸ்டமர்ஸ் title=

RBI Update: இந்திய ரிசர்வ் வங்கி சமீப காலங்களில் வாடிக்கையாளர்களுக்கு சாதகமான பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. வங்கியில் பணம் போடும் வாடிக்கையாளர்களின் வசதி மற்றும் சேவைகளை மேம்படுத்த பல புதிய விதிகளையும் இயற்றி வருகிறது. இதுமட்டுமின்றி, வங்கிகளை தொடர்ந்து கண்காணித்து விதிமீறல் செய்யும் வங்கிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) சிபில் ஸ்கோர் குறித்த முக்கியமான அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதன் கீழ் பல விதிகள் இடம்பெற்றுள்ளன. கடன் மதிப்பெண்கள், அதாவது கிரெடிட் ஸ்கோர் குறித்து பல புகார்கள் வந்ததால் மத்திய வங்கி விதிகளை கடுமையாக்கியுள்ளது. மேலும், புகார்களின் எண்ணிக்கை மற்றும் தரவை மேம்படுத்தாததற்கான காரணத்தையும் கிரெடிட் பீரோ இணையதளத்தில் குறிப்பிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியும் பல விதிகளை வகுத்துள்ளது. புதிய விதிகள் 26 ஏப்ரல் 2024 முதல் அமலுக்கு வரும். ஏப்ரல் மாதமே இதுபோன்ற விதிகளை அமல்படுத்துவது குறித்து ரிசர்வ் வங்கி எச்சரித்திருந்தது. ஒவ்வொரு முறையும் வாடிக்கையாளரின் சிபில் ஸ்கோரை (CIBIL Score) வங்கிகள் சரிபார்க்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதன் கீழ் மொத்தம் ஐந்து விதிகளை ரிசர்வ் வங்கி உருவாக்கியுள்ளது. அவற்றை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

1. சிபில் ஸ்கோர் செக் செய்வது குறித்து வாடிக்கையாளருக்கு தகவல் அனுப்பப்படும்

ஒரு வங்கி அல்லது NBFC வாடிக்கையாளரின் கடன் அறிக்கையைப் பார்க்கும்போதெல்லாம், வாடிக்கையாளர்களுக்கு தகவல் அனுப்பப்பட வேண்டும் என்று அனைத்து கடன் தகவல் நிறுவனங்களுக்கும் மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளது. இந்த தகவலை அவர்கள் வாடிக்கியாளர்களுக்கு எஸ்எம்எஸ் அல்லது மின்னஞ்சல் மூலம் அனுப்பலாம். கிரெடிட் ஸ்கோர் தொடர்பான பல புகார்கள் வந்ததன் காரணமாக இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank Of India) இந்த முடிவை எடுத்துள்ளது.

2. கோரிக்கையை நிராகரிப்பதற்கான காரணத்தைக் குறிப்பிடுவது அவசியம்.

வாடிக்கையாளரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டால் அதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும் என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் தங்கள் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தைப் புரிந்துகொள்வதை இது எளிதாக்கும். நிராகரிப்பதற்கான காரணங்களின் பட்டியலைத் தயாரித்து அனைத்து கடன் நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கு அனுப்புவது அவசியம்.

மேலும் படிக்க | IRCTC Tatkal Booking: தட்கல் டிக்கெட்டை சட்டென்று புக் செய்ய... சில டிப்ஸ் இதோ!

3. வாடிக்கையாளர்களுக்கு இலவச முழு கடன் அறிக்கையை வழங்க வேண்டும்

இந்திய ரிசர்வ் வங்கி, கடன் நிறுவனங்கள் ஆண்டுக்கு ஒருமுறை முழுமையான கிரெடிட் ஸ்கோரை இலவசமாக வழங்க வேண்டும் என்று கூறியுள்ளது. இதற்காக, கடன் நிறுவனம் தனது இணையதளத்தில் ஒரு இணைப்பைக் காண்பிக்க வேண்டும், இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் இலவச முழுமையான கடன் அறிக்கையை எளிதாகக் காணலாம். வாடிக்கையாளர்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை தங்கள் முழுமையான கடன் வரலாறு மற்றும் கிரெடிட் ஸ்கோர் கிடைக்கும். 

4. டீஃபால்ட் புகாரளிக்கும் முன் வாடிக்கையாளருக்குத் தெரிவிக்கப்பட வேண்டும்

வாடிக்கையாளர் கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை என புகார் அளிக்கும் முன்னர் (டீஃபால்ட் ரிப்போர்ட்) அதை பற்றி வாடிக்கையாளருக்குத் தெரிவிக்க வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. எஸ்எம்எஸ் அல்லது மின்னஞ்சல் மூலம் கடன் வழங்கும் நிறுவனங்கள் முழுமையான தகவலை அனுப்ப வேண்டும். இது தவிர வங்கிகள் மற்றும் கடன் வழங்கும் நிறுவனங்களில் நோடல் அலுவலர்கள் இருக்க வேண்டும். நோடல் அதிகாரிகள் கிரெடிட் ஸ்கோர் பிரச்சனைகளை தீர்ப்பார்கள்.

5. புகார்களுக்கு 30 நாட்களுக்குள் தீர்வு காணவில்லை என்றால் ஒரு நாளைக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படும்.

கடன் தகவல் நிறுவனம் 30 நாட்களுக்குள் வாடிக்கையாளர் புகார்களை தீர்க்கவில்லை என்றால், ஒவ்வொரு நாளும் ரூ.100 அபராதம் செலுத்த வேண்டும். அதாவது, புகார் தீர்க்கப்படாமல் இருக்கும் காலம் எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அவ்வளவு அதிகமாக அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். கடன் வழங்கும் நிறுவனத்திற்கு 21 நாட்களும், கிரெடிட் பீரோவுக்கு 9 நாட்களும் கால அவகாசம் கிடைக்கும். 21 நாட்களுக்குள் கிரெடிட் பீரோவுக்கு தெரிவிக்கப்படாவிட்டால், வங்கி அபராதம் செலுத்தும். வங்கி தகவல் தெரிவித்து ஒன்பது நாட்களுக்குப் பிறகும் புகார் தீர்க்கப்படாவிட்டால், கிரெடிட் பீரோ அபராதத்தை செலுத்த வேண்டும்.

மேலும் படிக்க | பழைய ஓய்வூதியம் ஜாக்பாட் செய்தி: மாநில அரசு ஊழியர்களுக்கு மீண்டும் ஓபிஎஸ்.. வெளியான அறிவிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News