2024 மார்ச் மாதத்திற்குள் விஸ்தாரா ஏர் இந்தியா நிறுவனங்கள் இணைகின்றன

Vistara and Air India consolidation: சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் லிமிடெட் (எஸ்ஐஏ) இன்று விஸ்தாரா-ஏர் இந்தியா இணைப்பை உறுதிப்படுத்தியது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 29, 2022, 05:13 PM IST
  • ஏர் இந்தியாவுடன் இணைகிறது விஸ்தாரா
  • அடுத்த நிதியாண்டிற்குள் இரு விமான நிறுவனங்களும் ஒன்றிணையும்
  • அதிகாரபூர்வமாக இணைப்பு உறுதி செய்யப்பட்டது
2024 மார்ச் மாதத்திற்குள் விஸ்தாரா ஏர் இந்தியா நிறுவனங்கள் இணைகின்றன  title=

நியூடெல்லி: சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் லிமிடெட் (எஸ்ஐஏ) இன்று விஸ்தாரா-ஏர் இந்தியா இணைப்பை உறுதிப்படுத்தியது. இந்தியாவின் தேசிய விமான நிறுவனத்தை வாங்கிய டாடா சன்ஸ் உடன் ,அதன் விஸ்டாரா முழு சேவை விமான நிறுவனத்தை இணைக்கிறது. இதற்கான கூட்டு முயற்சியை இணைக்கும் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஏர் இந்தியாவின் 25.1% உரிமையாளராக செயல்படுவதாக விஸ்தாரா தெரிவித்துள்ளது. டாடா குழுமம் தற்போது விஸ்தாராவில் 51 சதவீத பங்குகளை வைத்துள்ளது, மீதமுள்ள 49 சதவீத பங்குகள் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இடம் உள்ளது.

இந்த செய்தியை ஏ.என்.ஐ செய்தி முகமை உறுதிப்படுத்தி உள்ளது.

ஏர் இந்தியாவை வாங்கியுள்ள டாடா குழுமம், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து விஸ்தாரா என்ற விமான சேவை நிறுவனத்தை நடத்தி வந்த நிலையில், ஏர் இந்தியாவுடன், விஸ்தாராவை இணைப்பு குறித்து டாடா குழுமத்துடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இதற்கு முன்பே தெரிவித்திருந்தது. அது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது.

மேலும், இந்த இணைப்பு அடுத்த நிதியாண்டின் (2023-2024) இறுதிக்குள் முடிந்துவிடும் என்பதையும் இரு நிறுவனங்களும் உறுதி செய்துள்ளன. இது விமான சேவைத் துறையில் மிகவும் முக்கியமான அறிவிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | 9 மனைவிகள் பத்தலையாம்... 10வதும் வேணுமாம்! அடம்பிடிக்கும் பிரபலம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News