Employee Pension Scheme: பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO அனைத்து ஊழியர்களின் முக்கியமான ஓய்வூதிய நிதியாக இருக்கின்றது. பணியாளர்கள் மாதா மாதம் தங்கள் ஊதியத்தில் 12% -ஐ இபிஎஃப் கணக்கில் (EPF Account) பங்களிக்கிறார்கள். அதே அளவு தொகையை நிறுவனமும் இபிஎஃப் கணக்கில் பங்களிக்கின்றது. ஆனால், நிறுவனம் அளிக்கும் பங்களிப்பில் முழு தொகையும் இபிஎஃப் கணக்கில் செல்வதில்லை. இதில் 8.33% பணியாளர் ஓய்வூதியத் திட்டத்திற்கும் (EPS), மீதமுள்ள 3.67% இபிஎஃப் (EPF)கணக்கிலும் டெபாசிட் செய்யப்படுகிறது.
ஊழியர் ஓய்வூதியத் திட்டம் எப்போது தொடங்கப்பட்டது?
இபிஎஃப்ஓ உறுப்பினர்களுக்கு மிகப்பெரிய ஓய்வூதிய பலனை அளிக்கும் ஊழியர் ஓய்வூதியத் திட்டம் (EPS) 1995 இல் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் உள்ள ஊழியர்களுக்கு பணி ஓய்வுக்குப் பிறகு மாதாந்திர ஓய்வூதியத்தைப் பெற உதவுகிறது. இந்த திட்டம் ஓய்வூதிய பலன்களை நோக்கமாகக் கொண்டுள்ளது. EPF திட்டம் பணி ஓய்வு, ராஜினாமா அல்லது இறப்பு ஆகியவற்றின் மீதான தொகை குவிப்பு மற்றும் வட்டியையும் வழங்குகிறது. இபிஎஃப் கணக்கில் உள்ள தொகையை பொதுவாக பணி ஓய்வுக்கு பின்னர்தான் எடுப்பது வழக்கம். ஆனால், உயர் கல்வி, வீடு கட்டுதல் அல்லது வாங்குதல், திருமணம், நோய்களுக்கான சிகிச்சை என சில விசேஷ சந்தர்ப்பங்களில் பகுதியளவு தொகையை எடுக்கலாம்.
ஓய்வூதிய சம்பளம் மற்றும் ஓய்வூதிய சேவையின் காலத்தை கணக்கிடுவது எப்படி?
EPF விதிகளின் கீழ், நிறுவனம் மற்றும் பணியாளர்கள் இரு தரப்பும் இபிஎஃப் கணக்கிற்கு பங்களிக்கின்றனர். இபிஎஃப் தொகை (EPF Amount) ஊழியர்களின் மிகப்பெரிய நிதி பாதுகாப்பாக அமைகின்றது. இபிஎஃப் தொகை, ஊழியர்களின் ஓய்வூதியம், அவர்களது ஓய்வூதியம் பெறக்கூடிய சம்பளம் மற்றும் அவர்களது ஓய்வூதிய சேவை காலத்தை பொறுத்தது. இபிஎஃஸ் சூத்திரம் (EPS Formula) அல்லது இபிஎஃப் ஓய்வூதியக் கணக்கீட்டின் (EPF Pension Calcultion) படி மாதாந்திர ஓய்வூதியத் தொகையானது கணக்கிடப்படுகிறது.
ஓய்வூதியத்திற்கான சூத்திரம்:
உறுப்பினரின் மாதாந்திர ஓய்வூதியம் = ஓய்வூதியம் பெறக்கூடிய சம்பளம் X ஓய்வூதியம் பெறக்கூடிய சேவைகாலம் / 70
(Member’s monthly pension = Pensionable salary X Pensionable service / 70)
ஓய்வூதியம் பெறக்கூடிய சம்பளத்தை கணக்கிடுவது எப்படி?
- இதற்கான சூத்திரத்தின் அடிப்படையில், ஊழியர் ஓய்வூதியத் திட்டத்திலிருந்து (EPS) வெளியேறுவதற்கு முந்தைய 60 மாதங்களில் உறுப்பினர் பெற்ற மாதச் சம்பளத்தின் சராசரி ஓய்வூதியம் பெறக்கூடிய சம்பளமாக கருதப்படுகின்றது.
- உறுப்பினரின் பணிக்காலத்தின் கடைசி 60 மாதங்களில் பங்களிக்காத காலம் ஏதாவது இருந்தால், அந்த மாதத்தின் பங்களிப்பு இல்லாத நாட்கள் இதில் கருதப்படாது. மேலும் அந்த நாட்களுக்கான பலன் பணியாளருக்கு வழங்கப்படும்.
- ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம். ஒரு இபிஎஃப் உறுப்பினர் (EPF Member) மாதத்தின் 3 ஆம் தேதி வேலையில் சேர்கிறார் என வைத்துக்கொள்வோம். அந்த நிலையில், அவரது 28 நாட்களின் சம்பளம் ஒவ்வொரு நாளின் ஊதியத்தின்படி பிரிக்கப்படும். அதன் பின்னர் அந்த மாதத்தின் மொத்த சம்பளத்தை கணக்கிட, அது 30 ஆல் பெருக்கப்படும்.
- ஒரு ஊழியரின் ஊதியம் ரூ.15,000 ஆக இருந்தால், அந்த நபருக்கு 28 நாட்களுக்கு ரூ.14,000 சம்பளமாக இருக்கும். இரண்டு நாட்களுக்கு ரூ.500 குறைக்கப்படும். எனினும், EPS கணக்கீட்டிற்கு மாதாந்திர சம்பளம் அனைத்து 30 நாட்களுக்கும் பரிசீலிக்கப்படும். இது ரூ 15,000 ஆக இருக்கும். ஆகையால், அதிகபட்ச ஓய்வூதிய ஊதியம் ஒவ்வொரு மாதமும் ரூ.15,000 என்ற அளவில் கட்டுப்படுத்தப்படும்.
- இந்த சம்பளத்தில் 8.33 சதவீதம் ஊழியர்களின் இபிஎஸ் கணக்கில் செலுத்தப்படும். அதன் கணக்கீடு இதோ:
இபிஎஃஸ் பங்களிப்பு = ரூ. 15,000 x 8.33/100 = ரூ 1,250
ஓய்வூதிய சேவை காலத்தை கணக்கிடுவது எப்படி?
- ஊழியர்களின் அசல் சேவைக் காலம் அவர்களின் ஓய்வூதிய சேவை காலமாகக் கருதப்படுகிறது.
- ஒரு ஊழியரிம் சேவை காலம், வெவ்வேறு முதலாளிகள் / நிறுவனங்களின் கீழ் இருந்தால், இவை அனைத்தும் சேர்க்கப்பட்டு மொத்த ஓய்வூதிய சேவைக் காலம் கணக்கிடப்படும்.
- 20 வருட சேவையை முடித்தவுடன் ஊழியர்களுக்கு இரண்டு வருட போனஸும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
- 10 வருட சேவைக் காலத்தை முடிப்பதற்குள் உறுப்பினர் EPS கார்பஸை எடுத்து வேறு ஒரு நிறுவனத்தில் சேர்ந்தால், அந்த சூழ்நிலையில், அவர் EPS கணக்கில் பங்களிக்க மீண்டும் ஆரம்பத்திலிருந்து தொடங்க வேண்டும்.
- 6 மாத அடிப்படையில் ஓய்வூதிய சேவை காலம் கருதப்படுகிறது. அதாவது, இந்த திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச ஓய்வூதிய சேவை காலம் 6 மாதங்கள் ஆகும். சேவை காலம் 7 ஆண்டுகள் மற்றும் 2 மாதங்கள் என்றால், ஓய்வூதியம் பெறக்கூடிய சேவை காலம் 7 ஆண்டுகளாக இருக்கும். இருப்பினும், சேவை காலம் 7 ஆண்டுகள் மற்றும் 10 மாதங்கள் என்று இருந்தால், ஓய்வூதியம் பெறக்கூடிய சேவை காலம் 8 ஆண்டுகளாக எடுத்துக்கொள்ளப்படும்.
இபிஎஸ் உறுப்பினர்கள், தங்களது இபிஎஸ் ஓய்வூதியம் எவ்வாறு கணக்கிடப்படுகின்றது என்பதையும், இதற்கான ஓய்வூதிய கால அளவு எவ்வாறு கணக்கிடப்படுகின்றது என்பதையும் தெரிந்து வைத்துக்கொள்வது மிக அவசியமாகும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ