சிபிஎஸ்இ செயலர் அனுராக் திரிபாதி 2021ஆம் ஆண்டின் சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்புக்கான பொது தேர்வுகள் அட்டவணை குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றுநோயின் விளைவாக வகுப்புகள் பல நாட்களுக்கு வழக்கமான முறையில் நடக்காமல் இருந்ததால், ஜூலை மாதம், CBSE 2020-21 கல்வி அமர்வுக்கான பாடத்திட்டங்களை 30% குறைத்தது.
மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க நீதிமன்றம் சிபிஎஸ்இ வாரியம் மற்றும் டெல்லி அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
CBSE ஏற்கனவே 2021 ஆம் ஆண்டில் எதிர்பார்த்ததை விட முன்னரே 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்புத் தேர்வுகளை நடத்துவதற்கான செயல்முறையைத் தொடங்கியுள்ளது என்றும், மாணவர்களின் பட்டியல், தேர்வு படிவங்கள் (LOC) ஆகியவற்றை நிறைவு செய்துள்ளதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன.
விவசாயிகளின் குழந்தைகள் படிப்பதற்கான கல்விக் கடனைப் பெறுவார்கள், அதுவும் 4% வட்டிக்கு. உ.பி. கூட்டுறவு கிராம மேம்பாட்டு வங்கி இதை அறிவித்துள்ளது. குழந்தைகளின் கல்விக்காக விவசாயிகளுக்கு 4 சதவீத வட்டி வழங்கப்படும் என்று வங்கி தெரிவித்துள்ளது.
கல்லூரிக்கு வந்து வகுப்புகளில் கலந்து கொள்ள விரும்புவோர் பெற்றோரிடமிருந்து எழுத்துப்பூர்வ ஒப்புதல் பெற வேண்டும் என்று துணை முதல்வரும் உயர்கல்வி துறை அமைச்சருமான டாக்டர் அஸ்வத் நாராயண் கூறினார்
அஸ்ஸாமில், அரசு நடத்தும் அனைத்து மதரஸாக்களும் மூடப்பட்டு அவை அனைவரும் படிக்கும் அரசு பள்ளிகளாக மாற்றப்படும் என அஸ்ஸாம் கல்வி அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறினார்.
மாணவர்கள் இன்று எப்போது வேண்டுமானாலும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் answer keyஐ பெறலாம் என கூறப்படுகிறது. நீட் இறுதி தேர்வின் பதில்கள் மற்றும் ஸ்கோர் கார்டுகளை அதிகார பூர்வ வலைதளமான, ntaneet.nic.in என்ற வலைதளத்தில் காணலாம்.
JEE Advanced 2020 நுழைவுத் தேர்வில் 396க்கு 352 மதிப்பெண்கள் எடுத்து முதல் இடம் பிடித்த Chirag Falor IITயில் சேரவில்லை என்று சொல்லி அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.