தமிழகம் முழுவதும் வருகிற ஏப்ரல் 14-ம் தேதி நள்ளிரவு முதல் கடலில் மீன்பிடிக்க தடைகாலம் துவங்குகிறது.
இது தொடர்பாக பேசிய மீன்வளதுறை அதிகாரி:- இந்தாண்டின் மீன்பிடி தடை காலமானது வரும் 14-ந் தேதி நள்ளிரவு 12 மணியில் இருந்து அமலுக்கு வருகிறது. அன்றிலிருந்து மீன்பிடிக்க செல்ல மீனவர்களுக்கு அனுமதி இல்லை. மீன்பிடிக்க டோக்கன் வழங்கப்படமாட்டாது என்றும் கூறினார்.
முன்னதாக, ஆண்டு தோறும் ஏப்ரல் 15-ம் தேதி முதல் மே 29-ம் தேதி வரை மீன்பிடித் தடைகாலமாக வங்காள விரிகுடா கடல் பகுதியில் அரசு உத்தரவின் பேரில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மீன்களின் இனப்பெருக்கக் காலத்தை கணக்கில் கொண்டும், கடல் வளத்தைப் பாதுகாக்கும் நோக்கிலும், சென்னை முதல் கன்னியாகுமரி வரை தமிழக விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இந்த ஆண்டும் மீன்பிடித் தடைக்காலம் வருகிற 14-ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் தொடங்குகிறது.