பண்டிகைக் காலத்தில் உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் அவசியமானது. அதிலும் தீபாவளி போன்ற பண்டிகைக் காலத்தில் தின்பண்டங்கள் உங்களை சுற்றி நிறைந்திருக்குக்ம் வேளையில், நீங்கள் செய்யும் சில வேலைகள் மிகவும் ஆபத்தானதாக முடியும்.
இந்தியா பண்டிகைகளின் நாடு. நம் நாட்டில் ஒவ்வொரு மாதமும் ஏதோ ஒரு பண்டிகை வந்துக் கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு பண்டிகைக்கும் என பிரத்யேகமான சுவையான உணவு மற்றும் இனிப்புகள் உண்டு. பிள்ளையார் சதுர்த்தி என்றால் கொழுக்கட்டை, பொங்கல் என்றால் சர்க்கரைப் பொங்கல் என்பதுபோல, தீபாவளின் என்றால் விதவிதமான இனிப்பு பலகாரங்கள் என்பது நினைவுக்கு வரும்.
சுவையான உணவை அனுபவிக்கும் போது, மன அழுத்தத்தின் அளவும் அதிகரிக்கிறது என்பது தெரியுமா?. மனதின் கூடுதல் அழுத்தம் சில சமயங்களில் நமது இதய ஆரோக்கியத்தில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தலாம். இந்த பண்டிகைக் காலத்தில் உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க, மும்பையில் உள்ள ஏசியன் ஹார்ட் இன்ஸ்டிடியூட்டில் உள்ள இருதயநோய் நிபுணர் டாக்டர் அபிஜித் போர்ஸ், தீபாவளி சூழ்நிலையின் போது கவனத்தில் கொள்ள சில முக்கிய குறிப்புகளைக் கொடுக்கிறார்.
பண்டிகைக் காலங்களில் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள செய்ய வேண்டியவை
இதயத்திற்கு உகந்த உணவுகளைத் தேர்ந்தெடுங்கள்: சத்தான மற்றும் இதயத்திற்கு உகந்த உணவுகளைத் தேர்ந்தெடுங்கள். உங்கள் உணவில் காய்கறிகள், முழு தானியங்கள், மெலிந்த புரதங்கள் மற்றும் பழங்களைச் சேர்க்கவும். நிறைவுற்ற கொழுப்புகளுக்குப் பதிலாக ஆரோக்கியமான சமையல் எண்ணெய்களைப் பயன்படுத்துங்கள்.
மேலும் படிக்க | ஈஸியா உடல் எடை குறைக்கணுமா? அப்போ இந்த டிப்ஸ் ட்ரை பண்ணுங்க
நீர்ச்சத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவும்
தீபாவளியின் ஆடம்பரத்திற்கும் கொண்டாட்டத்திற்கும் மத்தியில், உடலை நீரேற்றமாக வைத்திருக்க மறக்காதீர்கள். குறைந்த அளவு இனிப்பு பானங்களை உட்கொள்ளுங்கள்.
அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்கவும்
தீபாவளி பண்டிகையின்போது, வழக்கத்தை விட நாம் அதிகமாக சாப்பிடுகிறோம், ஆனால் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க அளவுக்கு அதிகமான உணவை தவிர்ப்பது நல்லது. உங்களுக்கு பிடித்த இனிப்புகள் அல்லது சிற்றுண்டிகளை குறைந்த அளவில் எடுத்துக் கொள்ளுங்கள், இதனால் உடல் அதிகப்படியான கலோரிகளை உட்கொள்ளாது.
சுறுசுறுப்பாக இருங்கள்
பண்டிகைகளின் பிஸியான சூழ்நிலையிலும் நீங்கள் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். உங்கள் உடற்பயிற்சி வழக்கத்தை பண்டிகைக் கொண்டாட்டத்திற்காக விட்டுக் கொடுக்க வேண்டாம். ஒவ்வொரு முறையும் உணவு உண்டபின் அல்லது தின்பண்டங்களை எடுத்துக் கொண்ட பிறகு லேசான நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள்.
மன அழுத்தம் தேவையில்லை
பண்டிகை தயாரிப்புகளின் போது மன அழுத்த அளவுகள் அதிகரிக்கலாம். உங்கள் மனதை அமைதிப்படுத்தவும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் தியானம், சுவாசப் பயிற்சிகள் மற்றும் யோகாவை முயற்சிக்கவும். அமைதியான இடத்தில் அமர்ந்து உங்களுக்கு விருப்பமான பாடலையும் கேட்கலாம்.
பண்டிகைக் காலத்தில் என்ன செய்யக்கூடாது?
ஆரோக்கியத்தை கெடுக்கும் பழக்கங்களை தவிர்க்க வேண்டியது அவசியம். அதில் முதல் படியாக உப்பு உட்கொள்ளலைக் கட்டுப்படுத்துங்கள். அதிகப்படியான உப்பு உட்கொள்வது உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும், இது இதய நோய் அபாயத்தை அதிகரிக்கிறது. உப்பு நிறைந்த தின்பண்டங்களை தவிர்க்கவும். சோடியம் அளவு குறைவாக இருக்கும் பலகாரங்களைத் தேர்ந்தெடுக்கவும்.
மேலும் படிக்க | 7 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கினால் உங்கள் உடலில் என்ன நடக்கும்?
நோ மோர் ஸ்வீட்ஸ்
குறைந்த சர்க்கரை நிறைந்த உணவுகளை உண்ணுங்கள். இனிப்புகளில் பெரும்பாலும் சர்க்கரை அதிகமாக உள்ளது, இது எடை அதிகரிப்பு மற்றும் பிற இருதய பிரச்சனைகளுக்கு பங்களிக்கும். இனிப்புகளை குறைந்த அளவில் உட்கொள்ளுங்கள். தீபாவளி சமயத்தில் இனிப்புகள் மற்றும் தின்பண்டங்கள் அதிக அளவில் தயாரிக்கப்படுகின்றன. அவற்றை குறைந்த அளவிலேயே உட்கொள்ளுங்கள். இனிப்பு பொருட்கள் உடல் எடையை அதிகரிக்கச் செய்வதோடு இதயப் பிரச்சனைகளையும் உண்டாக்கும். நீங்கள் இனிப்புகளை உண்ணலாம், ஆனால் அதை குறைந்த அளவில் சாப்பிடலாம்.
எண்ணெய் பலகாரங்கள்
வறுத்த மற்றும் எண்ணெய் உணவுகளைத் தவிர்க்கவும்: வறுத்த தின்பண்டங்கள் தீபாவளி பாரம்பரியம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் அத்தகைய பொருட்கள் இதய ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். வறுத்த மற்றும் எண்ணெய் நிறைந்த உணவுகளை உட்கொள்வதை கட்டுப்படுத்துங்கள், ஏனெனில் அவை அதிக கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கலாம் மற்றும் இதய பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
உறக்கம்
இதயப் பிரச்சினைகள் உட்பட பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் தூக்கமின்மையைத் தவிர்க்கவும்.. ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் ஆரோக்கியமான இதயத்திற்கு ஒவ்வொரு இரவும் போதுமான தரமான தூக்கம் அவசியம் ஆகும்.
மேலும் படிக்க | இளநீர் முதல் காபி வரை...! இந்த உணவுகள் சாப்பிடுவதை உடனே நிறுத்துங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ