வெள்ளை அரிசி சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்குமா: நீங்கள் தினமும் வெள்ளை அரிசி சாப்பிடும் நபரா? அப்படியென்றால் இது உங்களுக்கான முக்கிய செய்தியாகும்.
உலகெங்கிலும் உள்ள மக்களின் உணவில் அரிசி மிக முக்கியமான ஒரு உணவாக உள்ளது. குறிப்பாக ஆசியாவின் பெரும்பாலான நாடுகளில் அரிசி அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் பெரும்பாலான மக்கள் அரிசி சாப்பிட விரும்புகிறார்கள். ஆனால் இந்நாட்களில், அரிசி சாப்பிடுவது குறித்து மக்களுக்கு சில அச்சங்கள் அதிகமாகி வருகின்றன.
வெள்ளை அரிசியை ஆசையுடன் சாப்பிடுபவர்கள், நீங்கள் உங்கள் ஆரோக்கியத்துடன் விளையாடுகிறீர்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். தினமும் வெள்ளை அரிசி சாப்பிடுவது உங்களுக்கு பல பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தும். இரத்த அழுத்தம் அதிகரிப்பது மட்டுமின்றி சர்க்கரை நோய், உடல் பருமன் போன்ற உடல் உபாதைகளும் ஏற்படலாம். வெள்ளை அரிசி சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் பிரச்சனைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
இதய ஆபத்து அதிகரிக்கும்
அரிசியில் உடலுக்குத் தேவையான சத்துக்கள் எதுவும் இல்லை. அதனால் நீங்கள் தினமும் சாதம் சாப்பிட்டால் கவனமாக இருங்கள். ஊடக அறிக்கைகளின்படி, அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்ரிஷனில் வெளியிடப்பட்ட ஜனவரி 2015 பகுப்பாய்வு, அதிக அரிசி சாப்பிடுவது மாரடைப்பு அபாயத்துடன் தொடர்புடையது என்பதைக் காட்டுகிறது. ஆகையால் வெள்ளை அரிசியை அதிகமாக உட்கொள்வதைக் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும். இல்லையேல் அதன் மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
மேலும் படிக்க | நட்ஸ் மற்றும் உலர் பழங்கள்: எப்போது சாப்பிட்டால் அதிகப்படியான பலன் கிடைக்கும்
மெட்டபாலிக் சிண்ட்ரோம் பிரச்சனை அதிகரிக்கலாம்
மெட்டபாலிக் சிண்ட்ரோம் பிரச்சனை வெள்ளை சாதம் சாப்பிடுவதாலும் ஏற்படும். எனவே மாதம் ஒருமுறை மட்டும் வெள்ளை அரிசியை சாப்பிட முயற்சி செய்யுங்கள். இதன் மூலம் மெட்டபாலிசம் பிரச்சனையை தவிர்க்கலாம்.
எடை அதிகரிக்கும் ஆபத்து
நீங்கள் உடல் பருமனால் பிரச்சனைக்கு ஆளாகி இருந்தால், வெள்ளை சாதம் சாப்பிடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். ஏனெனில் அது உடல் எடையை அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் உடனடியாக வெள்ளை அரிசியிலிருந்து விலகி இருக்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR