வயிற்று பிரச்சனைகளை ஓட விரட்டும் புதினா சப்பாத்தி... செய்வது எப்படி!

சமையல் குறிப்புகள்: புதினா சாப்பிடுவது உங்கள் உடலில் உள்ள கபம் மற்றும் வாத தோஷத்தை குறைக்க உதவுகிறது. இது தவிர, புதினா உங்கள் வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கும் சிறந்த நிவாரணம் அளிக்கிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 5, 2023, 07:29 AM IST
  • உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கக் கூடிய புதினா.
  • உடலில் உள்ள கபம் மற்றும் வாத தோஷத்தை குறைக்க புதினா உதவுகிறது.
  • புதினா இலைகளை டீ போட்டு குடிக்கலாம்.
வயிற்று பிரச்சனைகளை ஓட விரட்டும் புதினா சப்பாத்தி... செய்வது எப்படி! title=

புதினா பராட்டா செய்வது எப்படி: புதினா என்பது மிளகுக்கீரை என்றும் அழைக்கப்படுகிறது. புதினா பொதுவாக சட்னி செய்து அதிகம் சாப்பிடுவார்கள். ஆனால் புதினா பராத்தா செய்து சாப்பிட்டது உண்டா? இல்லையென்றால், புதினா பராத்தா செய்வதற்கான சமையல் குறிப்பை இன்று நாங்கள் உங்களுக்குக் கொண்டு வந்துள்ளோம். புதினா சாப்பிடுவது உங்கள் உடலில் உள்ள கபம் மற்றும் வாத தோஷத்தை குறைக்க உதவுகிறது. இது தவிர, வயிற்றுப்போக்கு,  வாயு அல்லது அமிலத்தன்மை போன்ற உங்கள் வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கு புதினா நிவாரணம் அளிக்கிறது. அதே நேரத்தில், உங்கள் உடலில் உள்ள பலவீனமும் நீங்கும். வாயில் இருக்கும் துர்நாற்றத்தை போக்க இதை வாயில் போட்டு மெல்வதால் நல்ல புத்துணர்ச்சி கிடைக்கிறது.

அத்தகைய சூழ்நிலையில், இந்த சுவையான மற்றும் ஆரோக்கியமான சப்பாத்தியை நீங்கள் காலை உணவில் சாப்பிடலாம். எனவே புதினா பரோட்டா செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம்....

புதினா பராத்தா செய்ய தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு
புதினா இலைகள்
நறுக்கிய இஞ்சி
மிளகாய் தூள்
உலர்ந்த புதினா
மசாலா
வெண்ணெய்
நெய்
உப்பு ருசிக்கு ஏற்ப

மேலும் படிக்க | இரவில் தூக்கம் வராமல் கஷ்டப்படறீங்களா... சில எளிய தீர்வுகள்!

புதினா பராத்தா செய்வது எப்படி? 

1. புதினா பராத்தா செய்ய, முதலில் கோதுமை மாவை எடுத்துக் கொண்டு அதில் பொடியாக நறுக்கிய புதினா இலைகளை சேர்க்கவும்.

2. அதன் பிறகு துருவிய இஞ்சி, ஸ்பூன் எண்ணெய், நெய் மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும்.

3. பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மாவை பிசையவும். அதன் பிறகு, இந்த மாவை மூடி, சுமார் 15 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.

4. பின்னர் ஒரு பாத்திரத்தில் உலர் புதினா, சிவப்பு மிளகாய் தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து கலக்கி வைத்துக் கொள்ளவும்.

5. அதன் பிறகு, மாவை மீண்டும் ஒரு முறை பிசைந்து, நடுத்தர அளவிலான உருண்டைகளை உருவாக்கவும்.

4. பிறகு நீங்கள் மாவை உருட்டி உலர் புதினா உருண்டையை கொண்டு லேசாக அதில் ஒட்டிக் கொள்ளுமாறு உருட்டவும்

5. இதற்குப் பிறகு, பரோட்டாவை உருட்டி, சப்பாத்தி செய்யவும்.

6. அதன் பிறகு,பிறகு பரோட்டாவை சூடான தோசைக் கல்லில் அல்லது சப்பாத்திக் கல்லில் போட்டு இருபுறமும் நெய் தடவி சப்பாத்தி செய்யவும்.

7. இப்போது உங்களின் சுவையான புதினா சப்பாத்தி தயார்.
பின்னர் இந்த சப்பாத்தியை தயிர் அல்லது சட்னியுடன் சூடாக பரிமாறவும்.

உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கக் கூடிய புதினாவில் நிறைய மருத்துவ குணங்கள் இருப்பதால் இந்த புதினா இலைகளை டீ போட்டு குடிக்கலாம். இதன் மூலமும் நிறைய நன்மைகளை பெற முடியும். தலைவலி, ஜீரண சக்தி, வாய் ஆரோக்கியம் என்று நிறைய இடங்களில் பயன்படுகிறது. இந்த இலைகளிலிருந்து பெறப்படும் எண்ணெய்களும் நமக்கு உடம்பு வலிகளை நீக்க உதவுகின்றன.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS இதற்கு பொறுபேற்காது.)

மேலும் படிக்க | நீரிழிவு முதல் யூரிக் அமிலம் வரை... பார்லி நீர் செய்யும் மாயங்கள்! தயாரிப்பது எப்படி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News