கண்பார்வை கூர்மையாக.... உதவும் மேஜிக் டிரிங்க்... தயாரிக்கும் எளிய முறை..!!

Eye Health: இன்றைய காலக்கட்டத்தில், மோசமான வாழ்க்கை முறையினாலும், கணிணி, மொபைல் போன் போன்றவற்றில் நீண்ட நேரத்தை செலவிடுவதாலும், பலருக்கு கண்பார்வை குறைபாடு ஏற்படுகிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 29, 2024, 04:45 PM IST
  • சில இயற்கை வைத்தியங்களைப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
  • கண்பார்வையை மேம்படுத்த உதவும் வீட்டு வைத்தியம்.
  • பாலில் குறிப்பிட்ட மூன்று பொருட்களைக் கலந்து சாப்பிட்டால் உங்கள் கண்பார்வையை மேம்படுத்த முடியும்.
கண்பார்வை கூர்மையாக.... உதவும் மேஜிக் டிரிங்க்... தயாரிக்கும் எளிய முறை..!! title=

கண்பார்வை கூர்மையாக உதவும் பானம்: இன்றைய காலக்கட்டத்தில், மோசமான வாழ்க்கை முறையினாலும், கணிணி, மொபைல் போன் போன்றவற்றில் நீண்ட நேரத்தை செலவிடுவதாலும், பலருக்கு கண்பார்வை குறைபாடு ஏற்படுகிறது. கண் ஆரோக்கியம் தொடர்பான பொரச்சனைகள், கண் பார்வை  குறைபாடு ஆகியவை ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. அதிகப்படியான ஸ்க்ரீன் டைம், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் மாசுபாடு போன்ற பல காரணங்களால், கண் ஆரோக்கியம் மிக மோசமாக பாதிக்கப்படுகிறது. 

உங்கள் கண்கள் பலவீனமடைந்து கண்ணாடி அணிந்திருந்தால், சில இயற்கை வைத்தியங்களைப் (Home Remedies) பின்பற்றுவதன் மூலம் உங்கள் கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். பாலில் குறிப்பிட்ட மூன்று பொருட்களைக் கலந்து சாப்பிட்டால் உங்கள் கண்பார்வையை மேம்படுத்த முடியும். மேலும், இதன் மூலம் கண்புரை மற்றும் கிளௌகோமா போன்ற நோய்கள் வராமல் தடுக்கலாம்.

கண்பார்வையை மேம்படுத்த உதவும் வீட்டு வைத்தியம் (Home Made Drink To Sharpen Your Eye Sight)

1. பாதாம் (Almonds)

பாதாம் கண்களுக்கு மிகவும் சிறந்ததாக கருதப்படுகிறது. அவற்றில் கண் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் வைட்டமின் ஈ, ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன . தினமும் காலையில் ஒரு கிளாஸ் பாலில்  ஊற வைத்த 5-7 பாதாம் பருப்புகளை அரைத்து குடித்து வந்தால் கண்பார்வையை மேம்படுத்துவதோடு, கண் சோர்வையும் குறைக்கும்.

2. சோம்பு (Fennel Seeds)

சோம்பு என்னும் பெருஞ்சீரகத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் பார்வையை மேம்படுத்த உதவுகிறது. இதில் வைட்டமின் ஏ, சி மற்றும் மினரல்கள் இருப்பதால் கண்பார்வையை கூர்மையாக்கும். ஒரு ஸ்பூன் கோம்பை அரைத்து, பாலில் கலந்து இரவு தூங்கும் முன் குடித்து வந்தால் கண்பார்வை மேம்படும். ஆயுர்வேதத்தில் சோம்பிற்கு 'நேத்ரஜோதி' என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் கண் பார்வையை மேம்படுத்தும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றங்கள் இதில் உள்ளன.

மேலும் படிக்க | Diabetes Control: சுகர் லெவலை கட்டுக்குள் வைக்கும் சில ‘மேஜிக்’ மசாலாக்கள்..!! 

3. கற்கண்டு (Sugar Candy)
பாலில் கற்கண்டு கலந்து குடிப்பதால் கண் ஆரோக்கியம் மேம்படும். கற்கண்டில் உள்ள குளுக்கோஸ் கண்களுக்கு ஆற்றல் வழங்கி கண் சோர்வையும் நீக்குகிறது. ஒரு டம்ளர் பாலில் ஒரு ஸ்பூன் கற்கண்டு கலந்து குடித்தால் கண்பார்வை மேம்படும்.

கண்பார்வையை மேம்படுத்தும் பானத்தை  தயாரிக்கும் வழிமுறை

1. ஒரு கிளாஸ் பால் எடுத்து கொதிக்க வைக்கவும்.

2. ஊற வைத்த 5-7 பாதாம் பருப்புகளை அரைத்து பாலில் கலக்கவும்.

3. ஒரு ஸ்பூன் சோம்பு என்னும் பெருஞ்சீரகத்தை அரைத்து பாலில் சேர்க்கவும்.

4. ஒரு ஸ்பூன் கற்கண்டு சேர்த்து நன்கு கலக்கவும்.

5. இந்த பானத்தை  இரவில் தூங்கும் முன் குடிக்கவும்.

உங்கள் கண் பிரச்சனை தீவிரமாக இருந்தால், மருத்துவரிடம் தேவையான ஆலோசனையைப் பெறவும். ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடித்து, உங்கள் கண் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | கல்லீரல் பாதிப்பின் ஆரம்ப அறிகுறிகள் இவைதான்.. உஷார் மக்களே!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News