மழைக்காலத்தில் சளியில் இருந்து தப்பிக்கனுமா? கொஞ்சமா ‘இதை’ சாப்பிடுங்க போதும்!

மழைக்காலம் ஆரம்பித்தாலே பலருக்கு சளி, இருமல், காய்ச்சல் ஆகியவை ஏற்படலாம். இதை தடுக்க, நாம் உணவு பழக்கங்கள் சிலவற்றை மாற்ற வேண்டியிருக்கிறது.   

Written by - Yuvashree | Last Updated : Jun 26, 2024, 06:39 PM IST
  • மழைக்காலத்தில் சளி-இருமல்
  • இயற்கை வைத்தியங்கள்
  • எளிமையாக இருக்கும்
மழைக்காலத்தில் சளியில் இருந்து தப்பிக்கனுமா? கொஞ்சமா ‘இதை’ சாப்பிடுங்க போதும்! title=

நம் உடல் நிலை மாற்றங்கள், கால நிலை மாற்றங்களை பொருத்தும் அமையலாம். மழைக்காலம் வந்து விட்டது என்பதை வானிலை அறிக்கை தெரிவிப்பதற்கு முன்னர், நம் உடலே தெரிவித்து விடும். இது போல, கால நிலை மாற்றங்களின் போது நோய் தாக்காமல் இருக்க நாம் சில இயற்கை மூலிகைகளை எடுத்துக்கொள்ளலாம். அவை என்னென்ன தெரியுமா? 

துளசி:

துளசியை தூய மூலிகைகளுள் ஒன்று என்று கூறுவர். ஆயுர்வேத முறைப்படி, துளசியில் நோயெதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. இதில் இருக்கும் மூலிகை எண்ணெய்கள் பல்வேறு சித்த மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. இது குறித்து நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் துளசி சாப்பிடுபவர்கள், சாப்பிடாதவர்களை விட புத்துணர்ச்சியுடன் இருப்பதாகவும் இவர்களுக்கு நோயெதிர்ப்பு சக்தி அதிகரிப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது. எனவே, தண்ணீரில் 5 முதல் 10 நிமிடங்களுக்கு துளசியை கொதிக்க வைத்து குடிக்கலாம் எனக்கூறுகின்றனர், மருத்துவர்கள்.

மஞ்சள்:

மஞ்சளில், அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டி ஆக்சிடண்ட்ஸ் பண்புகள் இருக்கின்றன. இது குறித்து பேசும் மருத்துவர்கள், உள் காயங்கள் மற்றும் வெளி காயங்களின் மூலம் ஏற்படும் தொற்றுகளை தடுக்கும் பன்பு, மஞ்சளில் இருப்பதாகவும், நோய் தொற்றுகள் ஏற்படாமல் இது தடுக்கும் என்றும் தெரிவிக்கின்றனர். 

இஞ்சி:

அனைத்து இந்திய இல்லங்களின் சமையல்கட்டிலும் கண்டிப்பாக இருக்கும் உணவு பொருட்களுள் ஒன்று, இஞ்சி ஆகும். இது, உடலில் ரத்த நாளங்களை அதிகரிக்க செய்து வெள்ளை அணுக்களின் எண்ணிக்கைகளையும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இது, உடலில் நோய் ஏற்படுத்தும் பாக்டீரியாக்களையும் விரட்டியடிக்க உதவுமாம். எனவே, நமது உணவில் கண்டிப்பாக இஞ்சியை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறுகின்றனர் மருத்துவர்கள்.

வேப்பிலை:

இந்த பெயரை கேட்கும் போதே பலருக்கு கசப்பாகத்தான் இருக்கும். ஆனால், வேப்பிலைக்கு‘அற்புத இலை’ என்ற இன்னொரு பெயரும் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், இதில் நாம் நினைத்து பார்க்க முடியாத அற்புத சத்துகள் இருக்கின்றன. உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, நோய்க்கிருமிகளை எதிர்த்து போராடும் சக்தியையும் கொடுக்கிறது. வேப்பிலையை நாம் ஜூஸாக எடுத்துக்கொள்ளலாம் என்பது மருத்துவர்களின் பரிந்துரை.

மேலும் படிக்க | இருமல் நிற்கவே மாட்டேங்குதா? ‘இந்த’ வைத்தியம் செய்து பாருங்கள்!

அம்ருதவல்லி:

அம்ருதவல்லி இலையை கிலோய் என அழைக்கின்றனர். உடலை டீடாக்ஸ் செய்ய உதவும் இயற்கை மூலிகைகளுள் ஒன்று இது. இது குறித்து பேசும் ஆயுர்வேத மருத்துவர்கள், உடலை ஆற்றலுடன் வைத்திருக்கவும், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் செல்களின் பெருக்கத்திற்கும் இதை உட்கொள்ளலாம் என கூறுகின்ரனர். இதை பானமாக அல்லது உணவில் சேர்த்து சாப்பிடலாம் என கூறப்படுகிறது. இதனுடன் பால் அல்லது தண்ணீர் சேர்த்து ஜூஸ் செய்யலாம். 

அஸ்வகந்தா:

அஸ்வகந்தா இலையில் இருக்கும் பண்புகள், உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுவதோடு மன அழுத்தத்தையும் நீக்க உதவுமாம். நோயை கிருமிகளை எதிர்த்து போராடும் செல்களை இது அதிகரிக்குமாம். இதை ஸ்மூதி அல்லது பானமாக செய்து குடிக்கலாம் என கூறப்படுகிறது. இதனுடன் சூடான பால் அல்லது தண்ணீர் கலந்து குடிக்கலாம். அப்படி செய்தால் நல்ல ரிசல்ட் கிடிக்குமாம். 

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | அஸ்வகந்தா சிலருக்கு விஷமாகலாம்.. எச்சரிக்கை தேவை..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News