இந்த அவசர காலத்தில், பெரும்பாலான மக்கள் இரத்த அழுத்த பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள். இதற்கு மிகப்பெரிய காரணம் பதற்றம், மன அழுத்தம் மற்றும் ஒழுங்கற்ற வாழ்க்கை முறை. இரத்த அழுத்தம் குறைவாக இருந்தாலும், அதிகமாக இருந்தாலும் அது இரண்டும் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.
இரத்தத்தின் சரியான அளவு மூளையை சென்றடையவில்லை என்றால், அது குறைந்த இரத்த அழுத்தம் ஆகும். இதனால் உடலில் ரத்த பற்றாக்குறை ஏற்படுகிறது. உயர் இரத்த அழுத்தம் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. இருப்பினும், உணவு மற்றும் வாழ்க்கை முறைகளில் சில மாற்றங்களைச் செய்வதன் மூலம் இயற்கையான முறையில் இரத்த அழுத்தத்தைக் குறைக்கலாம். இதை எப்படி செய்வது என இந்த பதிவில் காணலாம்.
உயர் இரத்த அழுத்தத்திற்கான காரணம்
இரத்தம் தொடர்ந்து அதிக அளவில் மூளையை அடையும் போது உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. இந்தியாவில், இந்த நோய் 7 பேரில் ஒருவருக்கு காணப்படுகிறது. பலர் இதை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.
ஆனால் இது இதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. உயர் இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகளுக்கு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது.
இரத்த அழுத்தம் குறைக்க எளிமையான வழிகள் இதோ
1- மது அருந்த வேண்டாம்:
மது அருந்துவதால், இரத்த அழுத்த அளவு திடீரென அதிகரித்து, எடையும் அதிகரிக்கத் தொடங்குகிறது. உயர் இரத்த அழுத்தத்திற்கான முக்கிய காரணங்களில் ஒன்று குடிப்பழக்கமாகும். நீங்கள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த விரும்பினால் மது அருந்துவதை நிறுத்த வேண்டும். இது உங்கள் உடலை நீண்ட நேரம் ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
2- உணவில் மெக்னீசியத்தைச் சேர்த்துக் கொள்ளுங்கள்:
இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த, மெக்னீசியம் நிறைந்த உணவைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். இது இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. கீரை, வாழைப்பழம், தயிர், பாதாம் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இது ரத்த அழுத்த பிரச்சனையை தீர்க்கும்.
3- பொட்டாசியம் நிறைந்த உணவுகளை உண்ணுங்கள்:
இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த, பொட்டாசியம் நிறைந்த உணவை உணவில் உட்கொள்ள வேண்டும். இதன் காரணமாக சோடியத்தின் தாக்கத்தில் மாற்றம் ஏற்பட்டு இரத்த அழுத்தம் குறையத் தொடங்குகிறது. பொட்டாசியத்திற்கு, நீங்கள் உருளைக்கிழங்கு, ஆரஞ்சு, திராட்சை, போன்றவற்றை உண்ணலாம்.
4- புகைபிடிக்காதீர்கள்:
புகைபிடிப்பதும் இரத்த அழுத்தம் அதிகரிக்க ஒரு முக்கிய காரணமாகும். இரத்த அழுத்தம் அதிகரிப்பதால் நீங்கள் சிரமப்பட்டால், உடனடியாக புகைபிடிப்பதை நிறுத்துங்கள். புகைபிடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல, ஏனெனில் சிகரெட்டில் பல வகையான இரசாயனங்கள் இருப்பதால் அவை நுரையீரலில் சிக்கி சுவாசிப்பதில் சிரமத்தை ஏற்படுத்துகின்றன. புகைபிடித்தல் மூச்சுத் திணறல் மற்றும் தாக்குதல்களின் அபாயத்தை அதிகரிக்கிறது.
5- உடற்பயிற்சி:
இரத்த அழுத்த நோய் பெரும்பாலும் அதிக எடை கொண்டவர்களுக்கு ஏற்படுகிறது. இரத்த அழுத்த பிரச்சனையை தவிர்க்க, தினமும் உடற்பயிற்சி செய்வது மிக அவசியமாகும். உடற்பயிற்சி செய்வதால் உடல் எடை குறைதல், ரத்த அழுத்த அளவு சரியாக இருப்பது மற்றும் ஆக்ஸிஜன் அதிக அளவில் உடலை சென்றடைவது போன்ற பல நன்மைகள் ஏற்படுகின்றன. ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த, படிக்கட்டுகளில் ஏறுவது, நடனமாடுவது, சைக்கிள் ஓட்டுவது, தினமும் நிறைய நடப்பது ஆகியவற்றை செய்வது நல்லது.
6- மட்டுப்படுத்தப்பட்ட உப்பை உண்ணுங்கள்:
உப்பில் சோடியம் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக இரத்தம் இன்னும் வேகமாக மூளையை அடையத் தொடங்குகிறது. அதிக உப்பு சாப்பிடுவதால் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. இரத்த அழுத்தம் அதிகமாக இருப்பவர்கள் உப்பை சிறிதளவு உட்கொள்ள வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | Brain Health: டிமென்ஷியா என்னும் மறதி நோயை தடுக்கும் நார் சத்து..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR