Lungs Detox Drink: இன்றைய துரிதகதியிலான வாழ்க்கை முறை மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக, பெரும்பாலானோருக்கு நுரையீரல் பிரச்சனை இருக்கிறது. புகை பிடிப்பவர்களை பற்றி சொல்லவே வேண்டாம். நுரையீரலில் மிகவும் பலவீனமாக ஆகிவிடுகிறது. இந்நிலையில் நுரையீரலில் சேரும் நச்சுக்களை நீக்கி, உள்ளிருந்து வலுவாக்கும் டீ டாக்ஸ் பானத்தை பற்றி அறிந்து கொள்ளலாம்.
புகை பிடிப்பவர்களுக்கு நுரையீரல் பலவீனமாக இருப்பதால், தொற்று ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. அது மட்டும் இல்லாமல் ஆஸ்துமா போன்ற நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நுரையீரல் பிரச்சனை அதிகம் இருக்கும். நுரையீரல் சார்ந்த பிரச்சினைகளை தவிர்க்கவும், சளி இருமல் போன்ற நோய்கள் அண்டாமல் இருக்கவும் நுரையீரலை அவ்வப்போது சுத்தம் செய்வது அவசியம். இந்த நச்சு நீக்கும் பானம் நுரையீரலை (Lungs Detox) மட்டுமல்லாது கல்லீரலையும் (Liver Detox) சுத்தப்படுத்தும் என்பது கூடுதல் சிறப்பு.
நுரையீரல் மற்றும் கல்லீரலில் சேரும் நச்சுக்களை நீக்கும் ஆற்றல் கொண்ட பானத்தை தயாரிக்கும் வழிமுறை
1. முதலில் ஒரு லிட்டர் சுத்தமான தண்ணீரை எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை கண்ணாடி பாட்டிலில் நிரப்ப வேண்டும். பிளாஸ்டிக் பாட்டில் உகந்தது அல்ல என்பதை நினைவில் கொள்ளவும்.
2. பின்னர் அதை மெல்லிய துண்டுகளாக வெட்டிய ஒரு எலுமிச்சையை சேர்க்க வேண்டும். வெட்டுவதற்கு முன்னால் நன்றாக சுத்தம் செய்வது அவசியம்.
மேலும் படிக்க | கல்லீரலை கவனமாய் பாதுகாக்க உதவும் அற்புதமான 5 உணவுகள்
3. பின்னர் அதில் மெல்லிய துண்டுகளாக வெட்டிய ஒரு பாகற்காயை சேர்க்க வேண்டும். இதனையும் வெட்டுவதற்கு முன்னாள் நன்றாக சுத்தம் செய்யவும்
4. இதனுடன் 10 15 புதினா இலைகளை நன்றாக சுத்தம் செய்து, அதனையும் துண்டாக நெருக்கி சேர்க்கவும்.
5. இதனுடன் ஒரு துண்டு இஞ்சியை நன்றாக தட்டி சேர்க்கவும்.
6. இரவில் தயாரித்த தண்ணீரை குளிர்சாதன பெட்டியில் வைத்து விடவும்.
7. காலையில் அதனை குளிர்சாதன பெட்டியில் இருந்து எடுத்து சாதாரண வெப்பநிலைக்கு வந்த பிறகு, அதில் பாதி தண்ணீரை குடிக்க வேண்டும்.
8. இந்த டீடாக்ஸ் பானத்தை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் என்பதோடு, இதை குடித்த பின் அரை மணி நேரத்திற்கு எதையும் சாப்பிடவோ குடிக்கவோ கூடாது என்பதை நினைவில் கொள்ளவும்.
9. ஒரு மாதத்திற்கு இதனை தொடர்ந்து அருந்தி வந்தால், நுரையீரலில் சேரும் நச்சுக்கள் நீங்கும் என்பதோடு, கல்லீரலும் சிறப்பாக டேட்டா செய்யப்பட்டு ஆரோக்கியமாக இருக்கும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | மறதி நோய் முதல் புற்றுநோய் வரை...வியக்க வைக்கும் மஞ்சள் மகிமை..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ