தமிழகத்தில் மழைக்காலம் ஆரம்பித்துவிட்டது. மழைக்காலத்தின் போது நம்மில் பலருக்கு சளி பிடிப்பது வழக்கம். இதற்கு பருவகால காய்ச்சல் என்று பெயர். பருவகால காய்ச்சல் என்றால் என்ன? இது போன்ற பருவகால காய்ச்சலில் இருந்து தப்பிப்பது எப்படி? இங்கே படிக்கலாம்.
பருவகால காய்ச்சல் என்றால் என்ன?
வெயில், மழை போனற் பருவ நிலைகள் மாறும் போது மனிதர்களுக்கு வகை வகையான நோய்கள் பரவுவது வழக்கம். வெயில் காலத்தின் போது சருமம் தொடர்பான பிரச்சனைகள் அதிகமாக பரவும் என்றும் மழைக்காலத்தின் போது சளி-இருமல் போன்ற நோய்கள் பரவும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த வகையான நோய்கள், வைட்டமின் குறைபாடு அதிகம் உள்ளவர்களுக்கும் உடலில் நோயெதிர்ப்பு சக்தி இல்லாதவர்களுக்கும் அதிகம் பரவும். எனவே, அதிலிருந்து தற்காத்ததுக்கொள்ள அரசு மக்களுக்கு வருடா வருடம் அறிவுரை வழங்கும். இது பொதுவாக ஒருவரிடமிருந்து இன்னாெருவரிடம் பரவும் தன்மை உடையது.
மேலும் படிக்க | நீரிழிவு நோயால் ஏற்படும் நரம்பியல் பிரச்சனைகளை தீர்க்க வழி
காய்ச்சலில் இருந்து தப்பிப்பதற்கான வழிமுறைகள்..
1. நல்ல தூக்கம்..
உடலில் வலுவான நோய் எதிர்ப்பு சக்தி இருக்க 8 மணி நேர தூக்கம் அவசியம். இதற்குப் பின்னால் உள்ள காரணம் என்னவென்றால், நீண்ட தூக்கத்தின் போது, உடல் சைட்டோகைன்கள் எனப்படும் வெளியிடுகிறது. ஒரு வகை புரதமாகும், இது நோயெதிர்ப்பு மண்டலத்தை ஒழுங்குபடுத்துகிறது, இதன் விளைவாக உடல் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. மேலும், நல்ல தூக்கத்தால் நமது மனநிலையும் மேம்படும், உடலுக்கு திடமான நோயெதிர்ப்பு சக்தியும் இதிலிருந்து கிடைக்கும்.
2. தினசரி உடற்பயிற்சி..
மழைக்காலம் மட்டுமன்றி, எல்லா காலங்களிலும் நம் உடலுக்கு உடற்பயிற்சி அவசியம். உங்கள் உடற்பயிற்சி வாரத்திற்கு மூன்று முறை நடப்பது போல் எளிமையானதாக இருந்தாலும், அது உங்களைப் ஃபிட்டாக வைத்திருக்க உதவுகிறது. வழக்கமான உடற்பயிற்சி நாள்பட்ட நோய்கள் மற்றும் உடலில் ஏற்படும் ப்ளோட்டிங் எனப்படும் வீக்கத்தை தடுக்கிறது. ஒரு வழக்கமான வொர்க்அவுட்டானது வாழ்க்கையில் மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது. நோயை எதிர்த்துப் போராடும் செல்கள், உடற்பயிற்சி செய்வதால் உருவாகிறதாம். மேலும் உடற்பயிற்சிகள் வெள்ளை இரத்த அணுக்களின் சுழற்சியை துரிதப்படுத்த உதவுகிறது. எனவே ஜலதோஷம் போன்ற நோய்களில் இருந்து உங்களை காப்பாற்றிக்கொள்ள உடற்பயிற்சி செய்து பாருங்கள்.
3. வைட்டமின் டி
வைட்டமின் D இன் குறைபாடு பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலத்தை ஏற்படுத்தும், இது ஜலதோஷத்தினால் நீங்கள் ஆட்கொள்ளப்பட வேண்டியிருக்கும். வைட்டமின் டியின் சிறந்த ஆதாரம் சூரிய ஒளி. இருப்பினும், உங்கள் உணவில் வைட்டமின் டி சேர்க்க, நீங்கள் பாலாடைக்கட்டி மற்றும் முட்டையின் மஞ்சள் கருவுடன் சால்மன் போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களை சாப்பிடலாம். அதுமட்டுமன்றி, வைட்டமின் நிறைந்த காய்கறி மற்றும் பழங்களையும் நீங்கள் அதிகமாக சாப்பிடலாம்.
4.ஆரோக்கியமாக சாப்படுங்கள்..
உங்கள் உணவில் வானவில்லின் அனைத்து வண்ணங்களும் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். உங்கள் உணவில் உள்ள அனைத்து பழங்கள் மற்றும் காய்கறிகளையும் சேர்த்து, ஒருவர் வெவ்வேறு வைட்டமின்களை போதுமான அளவில் உட்கொள்ள வேண்டும். பச்சைக் காய்கறிகளை சாப்பிடுவது எப்போதும் ஒரு ப்ளஸ் பாயிண்டாக கருதப்படுகிறது. கீரை, குடைமிளகாய் போன்றவை பச்சை காய்கறிகளின் சில வகைகள்.
5.சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்..
உங்கள் மனதை மட்டுமன்றி உடலையும் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். ஜலதோஷம் போன்ற வைரஸ் தொற்றுகள் மிகவும் வெளியில் இருந்துதான் உடலுக்குள் நுழையும். எனவே பருவகால நோய் தொற்று காலங்களில் நல்ல சுகாதாரத்தை பேணுவது அவசியம். உங்கள் கைகளை தொடர்ந்து கழுவவும், குறிப்பாக தினமும் குளியுங்கள். காய்ச்சல் உள்ளவர்களுடன் தொடர்பு கொள்வதை தவிர்க்கவும்.
6. மிளகு சேர்த்துக்கொள்ளுங்கள்..
தினமும் சமையலில் மிளகு சேர்த்துக்கொள்ளலாம். ஆம்லெட் போட்டு சாப்பிடும் போது, ரசம் வைக்கும் போது, தினமும் குழம்பு வைக்கும் போது என எப்போது என்ன சாப்பிட்டாலும் அதனுடன் மிளகு சேர்த்துக்கொள்ளுங்கள். அப்படி உங்களுக்கு சளி பாதிப்பு எற்படுவது போன்ற உணர்வு இருந்தால் யோசிக்காமல் இரண்டு மிளகை எடுத்து வாயில் போட்டுக்கொள்ளவும். மேலும், சுடுதண்ணீர் பருகவும்.
மேலும் படிக்க | இரும்புச்சத்து குறைபாடு மற்றும் தலசீமியா இடையே உள்ள வித்தியாசம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ