World Oral Health Day 2023: சில விஷயங்கள் மிகவும் எளிமையாகத் தோன்றினாலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உடலின் பல பகுதிகள் புறக்கணிக்கப்படுகின்றன அல்லது அதைக் கவனித்துக்கொள்ள தவறுகிறோம். வாய் பகுதியின் சுகாதாரமும் அவற்றில் ஒன்று.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20ஆம் தேதி, உலக வாய் சுகாதார தினமாக கொண்டாடப்படுகிறது. வாய் சுகாதாரத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்கும் பரப்புவதற்கும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. நமது வாய் என்பது நமது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்கும். இது பல நல்ல மற்றும் கெட்ட விஷயங்களுக்கு ஒரு வழியாகும்.
வாய் துர்நாற்றம் என்பது நல்ல வாய் ஆரோக்கியத்தின் நல்ல அறிகுறி அல்ல. கடுமையான சிக்கல்கள் செரிமானம் முதல் இதய ஆரோக்கியம் வரை உடலில் மேலும் சிக்கல்களுக்கு வழிவகுக்கும். உலக சுகாதார அமைப்பு (WHO) சேகரித்த தரவுகளின்படி, கிட்டத்தட்ட 3.5 கோடி மக்கள் வாய்வழி நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். பல் சிதைவு அல்லது பற்களில் சிகிச்சையளிக்கப்படாத வாய் பிரச்னை மிகவும் பொதுவான பிரச்னையாக உள்ளது.
மேலும் படிக்க | புற்று நோய் முதல் எடை இழப்பு வரை... தினம் ஒரு எலுமிச்சை செய்யும் மாயங்கள்!
"சர்க்கரை நுகர்வு, புகையிலை பயன்பாடு, ஆல்கஹால் பயன்பாடு மற்றும் மோசமான சுகாதாரம் உள்ளிட்ட பல தொற்றாத நோய்களுக்கு பொதுவான மாற்றியமைக்கக்கூடிய ஆபத்து காரணிகளால் வாய்வழி நோய்கள் ஏற்படுகின்றன" என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது?
எண்டோகார்டிடிஸ்: மோசமான வாய்வழி சுகாதாரம் காரணமாக சில நேரங்களில் இதயமும் ஆபத்தில் சிக்கும். எண்டோகார்டிடிஸ் இதய அறைகள் அல்லது ரத்த குழாய்களின் உட்பக்கம் உருவாகும் ஒரு தொற்று ஆகும். வாயில் இருந்து பாக்டீரியா நுழைவதால் இது ஏற்படலாம். இது இரத்த ஓட்டத்தில் பரவினால், அது கடுமையான தொற்றுநோய்க்கு வழிவகுக்கிறது.
நிமோனியா: மோசமான வாய்வழி சுகாதாரத்திற்கும் நிமோனியாவிற்கும் இடையே ஒரு வலுவான தொடர்பை உறுதிசெய்ய, இன்னும் அதிக ஆராய்ச்சி செய்ய வேண்டியுள்ளது. இருப்பினும், சில ஆய்வுகளின்படி, மோசமான சுகாதாரம் காரணமாக கெட்ட பாக்டீரியாக்கள் வாயில் இருந்து நுரையீரலுக்குள் நுழையும் போது, அது நிமோனியா மற்றும் சுவாச பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது.
கர்ப்பப் பிரச்சனைகள்: பற்களைச் சுற்றியுள்ள ஈறுகள் மற்றும் மென்மையான திசுக்களின் கடுமையான சிதைவு பீரியண்டோன்டிஸ்டுக்கு வழிவகுக்கிறது. பிறக்கும் போது குறைந்த எடை, அல்லது முன்கூட்டிய குழந்தை பிறப்பு போன்ற கர்ப்ப காலத்தில் இது மேலும் சிக்கலுக்கு வழிவகுக்கும்.
வாய்வழி ஆரோக்கியத்தை எவ்வாறு மேம்படுத்துவது?
- பல் துலக்குவது முக்கியம்: தினமும் இரண்டு முறை பல் துலக்குவது முக்கியம். மென்மையான முட்கள் கொண்ட பரஷ்ஷை பொதுவாக பயன்படுத்தவும்.
- துலக்கினால் அகற்ற முடியாத சிறிய உணவுத் துகள்களை அகற்ற பல் துலக்கிய பிறகு வாய் கொப்பளிக்கவும்.
- சர்க்கரை உணவு மற்றும் பானங்களை கட்டுப்படுத்துங்கள்.
- அதிகமாக புகைபிடித்தல் மற்றும் மது அருந்துவது பற்களின் நிறமாற்றத்திற்கு வழிவகுக்கிறது. எனவே அதை குறைக்கவும்.
-மூன்று முதல் நான்கு மாதங்களுக்குப் பிறகு பல் துலக்கும் பிரஷை மாற்றவும்.
- வழக்கமான பல் பரிசோதனைகளை மேற்கொள்ளுங்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ