COVID Cases: இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரிப்பு

சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு, இந்தியாவில் கோவிட் தாக்கம் அதிகரித்துள்ளது. தற்போது 18,599 கோவிட் வழக்குகள் பதிவாகியிருப்ப்பதாக வெளியான செய்திகள் அதிர்ச்சியை எழுப்புகின்றன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 9, 2021, 08:01 AM IST
  • ஒரு மாதத்திற்குப் பிறகு, இந்தியாவில் கோவிட் தாக்கம் அதிகரித்துள்ளது
  • ஒரு நாளில் 18,599 கோவிட் வழக்குகள் பதிவாகியுள்ளது
  • மீண்டும் லாக்டவுன் வருமா என்ற அச்சமும் எழுகிறது
COVID Cases: இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரிப்பு title=

புதுடெல்லி: இந்தியாவில் புதிய கொரோனா வைரஸ் தொற்று வழக்குகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக 18,000 க்கு மேல் பதிவாகியுள்ளன. மொத்த கோவிட் -19 வழக்குகளின் எண்ணிக்கை 1,12,29,398 ஆக அதிகரித்துள்ளதாக திங்களன்று வெளியான மத்திய சுகாதார அமைச்சத்தின் தகவல்கள் கூறுகின்றன.

சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு, இந்தியாவில் கோவிட் தாக்கம் அதிகரித்துள்ளது. தற்போது ஒரே நாளில் 18,599 கோவிட் வழக்குகள் பதிவாகியிருப்பதாக வெளியான செய்திகள் அதிர்ச்சியை எழுப்புகின்றன.
 
கோவிட் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து ஆறாவது நாளாக அதிகரித்துள்ளது. இதனால் நாட்டில் COVID-19 பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் 1,88,747 ஆக அதிகரித்துள்ளது.  

Also Read | ஒரே பள்ளியில் 54 குழந்தைகள் கொரோனா வைரஸால் பாதிப்பு! பெற்றோர்கள் அதிர்ச்சி!

மீட்பு வீதம் மேலும் 96.91 சதவீதமாகக் குறைந்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு நாளில் மொத்தம் 18,599 பேருக்கு கொரோனா தாக்கம் இருப்பது அச்சத்தை அதிகரிக்கிறது. மேலும், நாட்டில் கோவிடால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,57,853 ஆக அதிகரித்துள்ளது, தினசரி 97 பேர் கொரோனாவால் இறப்பதாக தெரிகிறது.  

ஜனவரி 29 அன்று, 24 மணி நேர இடைவெளியில் 18,855 புதிய நோய்த்தொற்றுகள் பதிவான பிறகு, இரண்டு மாத இடைவெளிக்கு பிறகு, நோய்தொற்று எண்ணிக்கையில் மீண்டும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

கோவிட் நோயிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 1,08,82,798 ஆக உயர்ந்தது, அதே நேரத்தில் இறப்பு விகிதம் 1.41 சதவீதமாக உள்ளது.

Also Read | சீனாவின் கொரோனா சதியை உலகுக்கு காட்டிய Zhang Zhan-னின் உண்ணாவிரதம் சிறையில் தொடர்கிறது

இந்தியாவின் கோவிட் -19 எண்ணிக்கை ஆகஸ்ட் 7 ஆம் தேதி 20 லட்சத்தையும், ஆகஸ்ட் 23 அன்று 30 லட்சத்தையும், செப்டம்பர் 5 ஆம் தேதி 40 லட்சத்தையும், செப்டம்பர் 16 ஆம் தேதி 50 லட்சத்தையும் தாண்டியது. இது செப்டம்பர் 28 அன்று 60 லட்சத்தை கடந்தது, அக்டோபர் 11 அன்று 70 லட்சத்தை கடந்தது அக்டோபர் 29 அன்று 80 லட்சமும், நவம்பர் 20 ஆம் தேதி 90 லட்சமும், டிசம்பர் 19 அன்று ஒரு கோடியை தாண்டியது என்பது குறிப்பிடத்தகக்து.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News