தினமும் எலுமிச்சை தண்ணீர் குடித்தால் இத்தனை நன்மைகளா

கோடை காலத்தில் உடல்நிலை எப்போதும் நீரேற்றத்துடன் இருக்க வேண்டும். இதற்கு எலுமிச்சை முக்கியமானது. 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 5, 2022, 02:42 PM IST
  • தொப்பையை குறைக்க வழிகள்
  • ஆரோக்கிய குறிப்புகள்
  • நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும்
தினமும் எலுமிச்சை தண்ணீர் குடித்தால் இத்தனை நன்மைகளா title=

பொதுவாக கோடை காலத்தில் நம் உடல் கொதிப்பாக இருக்கும். இது போன்ற சூழ்னிலையில் நம் உடலை குளிர்விக்க வேண்டுயது கட்டாயம், இல்லையெனில் வெப்ப பக்கவாதம், உணவு விஷம் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்பை சந்திக்க நேரிடும். அதனால் கோடையில் உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பது மிகவும் முக்கியமானது. எலுமிச்சை உடலுக்கு வேண்டிய ஆற்றலை அளிக்கிறது. வைட்டமின் சி நிறைந்த இந்த பழம் மிகவும் எளிதில் கிடைக்க கூடியது. என்வே இது நம் உடலை புத்துணர்ச்சியுடனும், நீரேற்றமாகவும் இருக்க உதவுகிறது.

எலுமிச்சை சாற்றை தண்ணீரில் கலந்து குடிப்பது உடலுக்கு அதிசயங்களை செய்யலாம். எனவே கோடை காலத்தில் தினமும் எலுமிச்சை தண்ணீர் குடித்தால் என்னென்ன நன்மைகள் உண்டாகும் என்பதை விரிவாக காண்போம்.

மேலும் படிக்க | வெறும் வயிற்றில் கட்டாயம் சாப்பிடக்கூடாத 5 உணவுப் பொருட்கள்

நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும்: ஒரு கிலாஸ் எலுமிச்சை நீர் குடிப்பதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி வலுப்படும். இதில் இருக்கும் இயற்கையான ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நோய்த்தொற்றுகளை எதிர்த்து போராட செய்கின்றன. மேலும் கோடைகாலத்தில் ஜலதோஷம் வருவதை தடுக்க முடியும்.

ஆரோக்கியமான முடி: கோடைக்காலத்திலும் தலைமுடியை சேதப்படுத்தும். எலுமிச்சை பானம் சுரப்பிகளில் இருந்து எண்ணெய் உற்பத்தி மற்றும் சுரப்பு குறைக்கிறது. மேலும் முடி உதிர்வதை தடுக்கும் மயிர்க்கால்களை இறுக்குகிறது.

ஹைட்ரேட் செய்ய உதவுகிறது:  தினமும் எலுமிச்சை நீர் உங்கள் நீரேற்ற அளவை அதிகரிக்கும். உங்கள் பிஹெச் அளவை சமநிலைப்படுத்தும். எலுமிச்சையில் 90% அதிக நீர் உள்ளடக்கம் மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் உள்ளன. சூரிய ஒளியிலும் நீரேற்றமாக இருக்க எலுமிச்சை உதவும்.

எடை இழப்புக்கு உதவும்: எலுமிச்சை நீர் உடல் நச்சை நீக்கும் பானமும் கூட. இது கலோரிகளில் மிக குறைவு. தினசரி உணவில் சத்தான பானமாக இதையும் சேருங்கள். இது நார்ச்சத்து கொண்டது என்பதால் வயிற்றை திருப்திகரமாக வைத்திருக்கும். அத்துடன் உங்கள் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தும் இது ஆரோக்கியமான எடை இழப்பு இதுவே சரியான முறையாகும்.

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை பொதுவான தகவலுக்காக மட்டுமே. இதை எந்த வகையான பரிந்துரையாகவோ அல்லது சிகிச்சைக்கான மாற்றாகவோ எடுத்துக்கொள்ள முடியாது. எந்த வித பரிந்துரையையும் பின்பற்றும் முன் உங்கள் மருத்துவரைத் தொடர்பு கொள்ளவும். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | பிரசவத்தின்போது குழந்தைகளின் உடலில் இவ்வளவு ஆபத்தான மாற்றம் ஏற்படுகிறதா? 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News