முடி உதிர்வதன் என்பது பெண்களுக்கான பிரச்சனை என நாம் அனைவரும் நினைக்கிறோம். ஆனால் ஆண்களுக்கும் இது பெரும் பிரச்சனை. தவறான உணவுப்பழக்கம், மனஅழுத்தம், தற்போதைய வாழ்க்கை முறையில், இளைஞர்களும் முடி உதிர்தல் பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். அதோடு இளம் வயதிலேயே வழுக்கை விழத் தொடங்கிறது. முடி உதிர்வதைத் தடுக்க ஆண்கள் பல்வேறு உணவு முறைகளையும், சிகிச்சையையும் மேற்கொள்கின்றனர். ஆனால் அதன் பிறகும் சிலருக்கு பலன் ஏதும் கிடைப்பதில்லை. எனினும், டென்ஷன் வேண்டாம். சில வீட்டு வைத்தியங்களை பின்பற்றுவதன் மூலம் முடி உதிர்தல் பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.
முடி உதிர்வதையும், வழுக்கையையும் தடுக்க கீழ்கண்ட எண்ணெய்கள் பெரிதும் உதவும்:
புதினா எண்ணெய் (Peppermint Oil)
புதினாவை கொண்டு தயாரிக்கப்படும் புதினா எண்ணெய் பெப்பர்மிண்ட் எண்ணெய் கூந்தலுக்கு பல நன்மைகளைத் தருகிறது. பெப்பர்மிண்ட் எண்ணெயில் வைட்டமின் ஏ, சி, கால்சியம், தாதுக்கள், மெக்னீஷியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. புதினா எண்ணெயை உச்சந்தலையில் தடவ இரத்த ஓட்டம் அதிகரித்து, முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது. இது தவிர, ஆண்கள் தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றையும் பயன்படுத்தலாம்.
வெங்காய சாறு
வெங்காய சாறு முடி வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ள வீட்டு வைத்தியம் என்பது அனைவரும் அறிந்ததே. வெங்காயச் சாற்றை முடியின் வேர்களில் தடவினால், நுண்ணறைகள் வலுவடையும். இது முடி உதிர்வதை நிறுத்துகிறது. அதுமட்டுமின்றி வெங்காயச் சாறு புதிய முடி வளரவும் உதவுகிறது. தொடர்ந்து பயன்படுத்தினால், வழுக்கை நீங்கும்.
மன அழுத்தத்தை குறைக்க வேண்டும்
ஆண்களின் முடி உதிர்வுக்கு மன அழுத்தமும் ஒரு காரணமாக இருக்கலாம். உங்கள் முடி உதிர்ந்தால், மன அழுத்தத்தை குறைக்க வேண்டும். டென்ஷன் கவலையை விட்டு ஒழியுங்கள். மன அழுத்தத்தைக் குறைக்க தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள். இதனுடன், நல்ல தூக்கமும் மன அழுத்தத்தைக் குறைக்க சிறந்த வழியாகும்.
மேலே கூறிய அனைத்தையும் பின்பற்றுவதோடு, ஆரோக்கியமான உணவு பழக்கமும் அவசியம்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | Liver Detox: கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்கும் மேஜிக் ட்ரிங்க்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ