Monsoon diet: மழைக்காலத்தில் கீரை மற்றும் காய்கறிகளை தவிர்க்க வேண்டுமா?

பச்சை காய்கறிகளையும், கீரைகளையும் சாப்பிட மழைக்காலத்தில் தவிர்க்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். திகைக்க வைக்கிறது காரணம்...தொடர்ந்து படியுங்கள்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 9, 2020, 02:07 PM IST
  • மழைக்காலத்தில் காய்கறிகளில் கிருமித்தொற்று அதிகமாக இருக்கும்
  • வழக்கமாக மண்ணின் கிருமிநாசினியாக செயல்படும் சூரிய ஒளி மழைகாலத்தில் குறைந்திருக்கும்
  • சதுப்பு நிலப்பகுதிகளில் வளரும் காய்கறிகளில் பாக்டீரியாக்கள், வைரஸ்கள், பூஞ்சைகள், பூச்சிகள் வளர சாதகமான நிலை மழைக்காலத்தில் ஏற்படும்
Monsoon diet: மழைக்காலத்தில் கீரை மற்றும் காய்கறிகளை தவிர்க்க வேண்டுமா? title=

புதுடெல்லி: கோடையின் கடுமையான வெப்பத்திலிருந்து மழை ஆசுவாசத்தைக் கொடுக்கிறது, ஆனால் பருவமழை நமது ஆரோக்கியத்திற்கு அவ்வளவு உகந்ததா? இல்லை என்பதே வருத்தமான பதில். மழைக்காலத்தில் குளிர், இருமல், காய்ச்சல், உணவு ஒவ்வாமை, காலரா போன்ற ஏராளமான உடல்நலப் பிரச்சனைகளின் அபாயம் அதிகரிக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். 
வானிலை மாறுவதால், மழைக்காலத்தில் நமது நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகி, தொற்றுநோய்கள் சுலபமாக பீடித்துக் கொள்ளும்.  நோய்கள் வராமல் தடுக்க, நாம் என்ன சாப்பிடுகிறோம், எதுபோன்ற பானங்களை குடிக்கிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். முடிந்த அளவு வெளியே சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.  எண்ணெய் அதிகமாக பயன்படுத்தப்படும் உணவை குறைத்துக் கொள்வதும் நல்லதே. 

Also Read | Health Tips: ஒரே வாரத்தில் உடல் எடையை குறைப்பது எப்படி? சில எளிய முறைகள்!!

இதைத்தவிர, மழைக்காலங்களில் நாம் கீரைகளையும், காய்கறிகளையும் தவிர்க்கலாம் என்பது உணவுத்துறை வல்லுநர்கள் பரிந்துரைக்கும் முக்கியமான உணவு விதிகளில் ஒன்றாக இருக்கிறது.  
கீரைகள் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் பொதிந்த பொக்கிஷம் என்றே சொல்லலாம். பச்சை காய்கறிகளும், கீரைகளும் நமது  ஒவ்வொரு வேளை உணவிலும் முக்கிய அங்கமாகின்றன. இப்படி சொல்லப்படும் நிலையில் மழைக்காலத்தில் கீரைகளை நாம் முற்றிலும் தவிர்க்க வேண்டுமா? 
மழைக்காலத்தில் கீரைகள் மற்றும் பச்சை காய்கறிகளில் அதிக அளவிலான கிருமிகள் இருக்கக்கூடும்  
கீரைகளும் காய்கறிகளும் பொதுவாக சதுப்பு நிலப்பகுதிகளில் வளர்கின்றன, அவை பல்வேறு வகையான பாக்டீரியாக்கள், வைரஸ்கள், பூஞ்சைகள், பூச்சிகள் மற்றும் பிற நோய்களை உருவாக்கும் உயிரினங்கள் வளர சாதகமான நிலையை உருவாக்குகின்றன. மற்ற பருவங்களில் சூரிய ஒளியானது, மண்ணின் கிருமிநாசினியாக செயல்படுகிறது. 

Also Read | காற்றின் மூலம் பரவும் கொரோனா... தொற்றிலிருந்து நம்மை பாதுகாப்பது எப்படி?

ஆனால் மழைக்காலங்களில், சூரிய ஒளி இல்லாததால் இலைகளில் கிருமிகள் தொற்றும் வாய்ப்புகள் அதிகம். இந்த நுண்ணிய உயிரினங்கள் கண்களுக்கு வெளிப்படையாகத் தெரியாததால், அவற்றை சாப்பிடுவதற்கு முன்னரோ அல்லது சமைப்பதற்கு முன்பு கீரைகளில் இருந்து முற்றிலுமாக சுத்தம் செய்துவிட முடியாது என்பது உண்மை தான். 
அதுமட்டுமல்ல, விளைநிலத்தில் இருந்து எப்படி அவை போக்குவரத்தில் கையாளப்படுகின்றன என்பதும் பாதுகாப்பாக சேமிக்கப்படுகின்றனவா என்பதையும் உறுதியாக சொல்லிவிட முடியாது.  எனவே, மழைக்காலத்தில் வெந்தயக் கீரை உட்பட பலவிதமான கீரைகளையும், ப்ரோக்கோலி, காலிஃபிளவர், முட்டைக்கோஸ் போன்ற இலையுள்ள காய்கறிகளியும் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்த காய்கறிகளில் இலைகள் நெருக்கமாக பிணைந்துள்ளதால் மாசுபடுவதற்கான அபாயமும் அதிகமாக உள்ளது. அதோடு, ஈரப்பதம், நீர்நிலைகள் மற்றும் சேறு என மழைக்காலத்தில் இருக்கும் பல்வேறு சூழ்நிலைகளும் இலை அதிகமுள்ள காய்கறி வகைகளில் அதிக அளவிலான கிருமிகள் இருப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.
கீரைகள் சாப்பிடுவதற்கு முன் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள்

Also Read | நீண்ட நேரம் சிறுநீர் கழிக்காமல் அடக்கி வைப்பதால் ஏற்படும் விளைவுகள்..!
இருப்பினும், மழைக்காலங்களில் கீரை வகைகளை நாம் முற்றிலும் தவிர்க்க வேண்டியதில்லை என்று சில வல்லுநர்கள் கருதுகின்றனர். அவற்றை சமைத்து சாப்பிடும்போது அதிக கவனமாக இருந்தால் போதும். உங்கள் சமையலில் பச்சை காய்கறிகளையும், கீரை வகைகளையும் சேர்ப்பதற்கு முன்பு நீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய சில அம்சங்கள்:
காய்கறிகள் எங்கிருந்து வந்துள்ளன என்பதையும், நீங்கள் யாரிடம் இருந்து அவற்றை வாங்குகிறீர்கள் என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
வெதுவெதுப்பான நீரில் சிறிது கல் உப்பு அல்லது வினிகரைச் சேர்த்து காய்கறிகளை கழுவவும். இது பாக்டீரியா மற்றும் காய்கறிகளின் மீது கூடு கட்டும் பூச்சிகளை சுத்தப்படுத்த உதவும்.
சமைப்பதற்கு முன் பூச்சிகள் மற்றும் புழுக்கள் இல்லாமல் காய்கறிகளை கவனமாக சுத்தம் செய்யவும்.

Also Read | வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்படுவதும் கொரோனாவின் அறிகுறியா?

நீங்கள் எந்த உணவையும் தயார் செய்வதற்கு முன்னதாக காய்கறிகளை வேகவைப்பது தொற்றைத் தவிர்க்க மற்றொரு நல்ல வழியாகும்.
ஏற்கனவே ஒரு கிருமியால் உலகமே அரண்டு போய் வீடுகளில் அடைந்து கிடக்கிறது.  இந்த நிலையில் மழைக்காலம் தொடங்கி விட்டது. உணவகங்களிலும், தெருவோரக் கடைகளிலும் கீரை வகைகளை சாப்பிடுவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஏனெனில் அங்கு சுகாதாரம் முழுமையாக பேணப்படுமா என்பது சந்தேகமாக இருக்கிறது.  வெளியிடங்களில் உணவுகளை தயாரிப்பதற்கு முன்பு காய்கறிகளை சரியாக சுத்தம் செய்திருக்கவில்லை என்று நினைத்தால், நீர்ச்சத்து அதிகம் உள்ள சுரைக்காய், பூசணி வகைகள், சர்க்கரை வள்ளிக்கிழங்கு போன்ற பருவகால காய்கறிகளை முதல் தேர்வாக கொள்ளலாம். இந்த காய்கறிகள் வயிற்றுக்கு நன்மை செய்வதோடு, எளிதில் செரிக்கக்கூடியவை.

 

Trending News