வயிற்றில் இருந்த கத்தரிக்கோல் 18 ஆண்டுகளுக்கு பிறகு நீக்கம்

கடந்த 1998-ம் ஆண்டு நேர்ந்த விபத்தில் பேக் கான் பொது மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தபோது தவறுதாலாக அவரது வயிற்றில் கத்தரிக்கொலை வைத்துத் தைத்துவிட்டனர்.

Last Updated : Jan 4, 2017, 03:11 PM IST
வயிற்றில் இருந்த கத்தரிக்கோல் 18 ஆண்டுகளுக்கு பிறகு நீக்கம் title=

ஹனோய்: கடந்த 1998-ம் ஆண்டு நேர்ந்த விபத்தில் பேக் கான் பொது மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தபோது தவறுதாலாக அவரது வயிற்றில் கத்தரிக்கொலை வைத்துத் தைத்துவிட்டனர்.

இந்நிலையில் 18 ஆண்டுகளாக வயிற்றுவலியால் துடித்து வந்த நாட், மீண்டும் அதே மருத்துவமனையில் பரிசோதனைக்குச் சென்றுள்ளார். அப்போது அறுவை சிகிச்சைக்கு கத்திரிகோல் ஒன்று அவரது வயிற்றில் இருப்பது தெரிந்தது.

வியட்நாம் நாட்டில் 54 வயது மிக்க முதியவர் ஒருவர் கடந்த மாதம் சாலை விபத்தில் சிக்கி மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கு மருத்துவர்கள் எக்ஸ்-ரே எடுத்தனர். 

அந்த எக்ஸ்-ரே அவரது வயிற்றின் இடது புறத்தில் கூர்மையான ஆயுதம் இருப்பது கண்டறியப்பட்டது. மீண்டும் சோதனை செய்ததில் கத்திரிக்கோல் இருப்பது மருத்துவர்களுக்கு தெரியவந்தது. அந்த கத்திரிக்கோல் 15 செ.மீ நீளம் உடையது. 

இந்த நிலையில், வயிற்றில் இருந்த கத்திரிக்கோலை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுத்தனர்

Trending News