தடையிலிருந்து விலக்கு பெற்றது சாரிடான் மாத்திரை!

தடை விதிக்கப்பட்ட மருந்து பொருட்களின் பட்டியலிலிருந்து சாரிடான் மாத்திரைக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Updated: Feb 22, 2019, 05:00 PM IST
தடையிலிருந்து விலக்கு பெற்றது சாரிடான் மாத்திரை!

தடை விதிக்கப்பட்ட மருந்து பொருட்களின் பட்டியலிலிருந்து சாரிடான் மாத்திரைக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மனிதர்களுக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய மருந்துகள் என்ற பட்டியலில் சாரிடான் உள்ளிட்ட 328 மருந்துகள் இடம்பெற்று அதன் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு கடந்த ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து சாரிடான் தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், தடைக்கு இடைக்கால விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் விசாரணை முடிவில் கடந்த ஆண்டு சாரிடான் மாத்திரைக்கு தடை செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது தடை செய்யப்பட்ட மருந்து பொருட்களின் பட்டியலிலிருந்து சாரிடான் மாத்திரைக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.