Protein Rich Daal: உணவில் போதுமான புரதம் இல்லாததால் உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படலாம். எடை இழப்பு மற்றும் வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்திற்கு புரதம் அவசியம். புரதத்தை உட்கொள்வதன் மூலம் உடலை வலிமையாக்க முடியும். முட்டை மற்றும் சீஸ் போன்றவற்றில் மட்டுமே புரதம் இருப்பதாக சிலர் நம்புகிறார்கள், ஆனால் அது அப்படியல்ல, தினசரி பயன்படுத்தப்படும் சில பருப்பு வகைகள் உள்ளன, அவற்றில் அதிக புரதம் காணப்படுகிறது.
உணவு நிபுணர் டாக்டர் ரஞ்சனா சிங்கின் கூற்றுப்படி, பருப்பு வகைகளை உட்கொள்வதன் மூலம் பல உடல்நல அபாயங்களைக் குறைக்கலாம். ஒரு ஆய்வின்படி, பருப்பு வகைகள் போன்ற தாவர அடிப்படையிலான உணவுகளை அதிகம் உட்கொள்பவர்களுக்கு இதய நோய்கள் வரும் அபாயம் குறைவாகவே உள்ளதாக கூறப்படுகிறது. பருப்பு சுவையானது மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். பல வகையான பருப்பு வகைகள் உள்ளன, ஒவ்வொரு பருப்புக்கும் அதன் சொந்த நன்மைகள் உள்ளன. உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும் பருப்பில் உள்ளது என்பதுதான் சிறப்பு. அவற்றின் நன்மைகளைப் பற்றி கீழே அறிந்து கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | பாதாம் பருப்பை ஊற வைத்து சாப்பிடுவதா? வறுத்து சாப்பிடுவதா? எதில் நன்மைகள் அதிகம்?
புரதம் நிறைந்த பருப்பு வகைகள்
1. கருப்பு உளுத்து: அரை கப் உளுத்தம்பருப்பில் 12 கிராம் புரதம் உள்ளது. இந்த பருப்பு ஃபோலேட் மற்றும் துத்தநாகத்தின் சக்திவாய்ந்த மூலமாகும். அதனால்தான் தினமும் ஒரு கிண்ணம் உளுத்தம் பருப்பை உட்கொள்ள வேண்டும்.
2. பச்சை பயறு: பச்சை பயறில் 9 கிராம் புரதம் உள்ளது. பச்சை பயறு இரும்புச் சத்து வாய்ந்தது. பருப்பில் பொட்டாசியத்தின் அளவு அதிகமாக உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலம் பல நோய்களில் இருந்து நம்மை காத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது.
3. முழு மசூர் தால்: முழு மசூர் தாலின் அரை கோப்பையில் 9 கிராம் புரதம் உள்ளது, இது அரிசி மற்றும் ரொட்டியுடன் பரிமாறப்படுகிறது. இது கார்போஹைட்ரேட், ஃபைபர், இரும்பு மற்றும் ஃபோலேட் ஆகியவற்றின் சிறந்த மூலமாகும். புரதச் சத்து குறைபாட்டைச் சமாளிக்க, நீங்கள் அதை உட்கொள்ள வேண்டும்.
4. மசூர் தால் (சிவப்பு): சிவப்பு பயறு சிறு குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அரை கப் சிவப்பு பருப்பில் 9 கிராம் புரதம் உள்ளது. இந்த பருப்பில் சோடியம், பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம் மற்றும் வைட்டமின் சி ஆகியவை உள்ளது. உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கும், குறைந்த கொழுப்புள்ள உணவை உட்கொள்வோருக்கும் இந்த பருப்பு சரியானது.
(பொறுப்பு துறப்பு: இங்கு வழங்கப்பட்ட தகவல்கள் எந்த மருத்துவ ஆலோசனைக்கும் மாற்றாக இல்லை. பொதுவான விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகிறது.
மேலும் படிக்க | Health Tips: மன அழுத்தத்தை விரட்டும் 6 பழங்கள்.!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR