வீட்டில் கரப்பான் பூச்சியின் அட்டூழியமா: இதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளவும்

கரப்பான் பூச்சித் தொல்லையில் இருந்து விடுபட இந்த சில விஷயங்கள் மட்டுமே போதும்.. சுத்தமும், ஈரப்பதம் இல்லாமல் இருந்தால் கரப்பான் வராத விருந்தாளியாகிவிடுவார்

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 29, 2022, 03:15 PM IST
  • கரப்பான் தொல்லை இனி இல்லை
  • கரப்பான் பூச்சிக்கு எதிரியாக்கும் குட்டி டிப்ஸ்
  • போரிக் ஆசிட் கரப்பானுக்கு பரம எதிரி
வீட்டில் கரப்பான் பூச்சியின் அட்டூழியமா: இதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளவும் title=

உங்கள் சமையலறையில் உப்பு மற்றும் சர்க்கரை போன்றே, கரப்பான் பூச்சிகளும் ஒரு அங்கமாக உள்ளதா? தேவையில்லாத  இந்த பூச்சியை அடியோடு அகற்றுவதற்கான வழிமுறைகள் மிகவும் சுலபமானதே...

வீட்டில் கரப்பான் பூச்சிகள் இருந்தால், அவற்றை அகற்றுவது கடினம் என்று பலரும் நினைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் உண்மையில் அது ஒன்றும் அவ்வளவு கஷ்டமானதல்ல. முதலில். உங்கள் வீட்டில் எந்தெந்த இடத்தை சுத்தம் (Health)செய்தால் கரப்பான் பூச்சிகள் அடியோடு ஒழியும் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

கரப்பான் பூச்சிகள் எங்கே?
கரப்பான் பூச்சிகள் ஏன் நம் வீட்டை மீண்டும் மீண்டும் தாக்குகின்றன என்பது முதல் கேள்வி. இந்த கேள்விக்கான பதில் மிகவும் எளிமையானது, வீட்டில் அழுக்கும், ஈரப்பதமும் இருக்கும் இடங்களில் கரப்பான் பூச்சிகள் இருக்கும்.  எனவே இந்த இரண்டையும் சரி செய்தாலே கரப்பான் பூச்சித் தொல்லையில் பாதி முடிந்துவிடும். 

மேலும் படிக்க | கரப்பான் பூச்சிகளை விரட்டுவதற்கு சில எளிய வழி முறைகள்

கரப்பான் பூச்சிகளுக்கு சமையல் சோடா
பேக்கிங் சோடா கொண்டு கரப்பான் பூச்சிகளை கொல்லுங்கள். பேக்கிங் சோடா மற்றும் சர்க்கரை கலவையானது கரப்பான் பூச்சிகள் மற்றும் பிற பூச்சிகளைக் கொல்லும். சர்க்கரை இந்தப் பூச்சிகளை ஈர்க்கும் போது, ​​பேக்கிங் சோடா அவற்றைக் கொன்றுவிடும்.

போரிக் அமிலத்தைப் பயன்படுத்துங்கள்
நீங்கள் கரப்பான் பூச்சிகளை அகற்ற விரும்பினால் போரிக் அமிலம் சிறந்த ஒன்று.  போரிக் ஆசிட் பொடியை வீட்டின் மூலைகளிலும், தரையிலும் கரப்பான் பூச்சிகள் அதிகமாகத் சுற்றும் இடங்களில் தூவவும்.


 
கரப்பான் பூச்சிகள் போரிக் அமிலத்துடன் தொடர்பு கொண்டவுடன் இறந்துவிடும். இருப்பினும், போரிக் ஆசிட் ஈரமானால், கரப்பான் பூச்சியை கொல்லாது. அதோடு,  குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில் போரிக் ஆசிட் இருக்க வேண்டும்.  

புதினா தண்ணீர்

கரப்பான் பூச்சிகளுக்கு ஆபத்தானது புதினா தண்ணீர். இதனைப் பயன்படுத்தினால், வீட்டைச் சுற்றி கரப்பான் பூச்சிகள் வராது. உப்பு நீர் மற்றும் புதினா கலவையை ஒரு ஸ்ப்ரேயாக தயார் செய்து, கரப்பான் பூச்சிகள் அடிக்கடி காணப்படும் இடங்களில் தெளிக்கவும்.

இருப்பினும், இந்த வழியில் கரப்பான் பூச்சிகள் அடியோடு ஒழிந்துப்போவது கஷ்டம். 

மேலும் படிக்க | கரப்பான் பூச்சியிலிருந்து பீர் தயாரிக்கும் நாடு

வேம்பு கரப்பான் பூச்சிகளை விரட்டும்
கரப்பான் பூச்சிகள் மற்றும் பிற பூச்சிகளை விரட்ட வேம்பு மருந்தாக பயன்படுகிறது. கரப்பான் பூச்சிகளைக் கொல்ல வேப்ப எண்ணெய் மற்றும் வேப்பம் பொடி பயன்படுத்தப்படுகிறது.

தண்ணீரில் வேப்ப எண்ணெயைக் கலந்து, கரப்பான் பூச்சிகள் அதிகம் காணப்படும் இடங்களில் தெளிக்கவும். பொடியையும் கரப்பான் பூச்சிகள் அடிக்கடி காணப்படும் இடத்தில் தூவிவிடலாம். 

கரப்பான் பூச்சிகளை விரட்டும் மருந்துகள்
 எல்லா பிரச்சனைகளுக்கும் வீட்டு வைத்தியம் மூலமே தீர்வை எதிர்பார்க்கிறோம், அது கரப்பான் பூச்சியை விரட்டுவதிலும் பயன்படுகிரது. இவற்றைத் தவிர, கரப்பான் பூச்சிகளைக் கொல்லப் பயன்படும் லட்சுமண் ரேகா மற்றும் ஆசிட்கள் சந்தையில் கிடைக்கின்றன.

மேலும் படிக்க | சர்க்கரை நோயை குணப்படுத்த அதிகாலையில் இந்த இலையை சாப்பிடுங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News