புரதம்: நம் மனித உடலுக்கு மிகவும் அத்தியாவசியமானது புரதச்சத்து. நம் உடல் உறுப்புகள், தசைகள், எலும்புகள் உற்பத்தியாக, குணமடைய, செல்கள் வளர, புதுப்பித்துக்கொள்ள புரதம் அவசியம். தேவையான அளவு புரதம் எடுத்துக் கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பு, எடை குறைப்பு மற்றும் இன்னும் பல்வேறு நன்மைகள் ஏற்படும்.
இறைச்சி, முட்டை, பால், மீன், சோயா என பல்வேறு உணவுகளில் இயற்கையாகவே புரதச்சத்து உள்ளது.
புரோட்டீன் பவுடர்:
பால், முட்டை அல்லது தாவர வகைகளில் இருந்து புரத சத்தை மட்டும் பிரித்து எடுப்பது தான் இந்த புரோட்டின் பவுடர்.
மொத்தம் 9 வகையான புரோட்டின் பவுடர் உள்ளன:
1. முட்டை புரோட்டீன் (Egg Protein)
2. வே புரோட்டீன் (Whey Protein)
3. பட்டாணி புரோட்டீன் (Pea Protein )
4. பிரவுன் அரிசி புரோட்டீன் (Brown Rice Protein)
5. சணல் விதைகள் புரோட்டீன் (Hemp Protein )
6. தாவர புரோட்டீன் (Plant Protein )
7. சோயா புரோட்டீன் (Soy Protein)
8. பாதாம் புரோட்டீன் (Almond Protein)
9. கேசீன் புரோட்டீன் (casein Protein)
விலங்கு வகையில் 2 வகையான பாலால் ஆன புரோட்டீன் பவுடர் தயாரிக்கப்படுகிறது:
வே புரோட்டீன் மற்றும் கேசின் புரோட்டீன்.
மேலும் படிக்க | உலக கிட்னி தினம்: சிறுநீரகத்தை பாதிக்கும் ‘5’ ஆபத்தான பழக்கங்கள்..!!
தாவர வகையின் பிரிவுகள்
- அரிசி, பட்டாணி, சோயா, பாதாம், சணல் விதை போன்றவற்றிலிருந்தும் புரோட்டீன் பவுடர் தயாரிக்கப்படுகிறது.
பொதுவாக ஒரு ஸ்கூப்பில் 20-30 கிராம் புரோட்டீன் இருக்கும். அவரவர் தேவைக்கு ஏற்றார் போல (பயிற்சியாளர், ஊட்டச்சத்து நிபுணர், மருத்துவர் பரிந்துரைக்கும் புரோட்டீன் அளவு) ஒவ்வொரு நாளும் எடுத்துக்கொள்ளலாம்.
யாரெல்லாம் எடுத்துக்கொள்ளலாம்?
1. உணவு மூலம் சரியான அளவு புரோட்டீன் எடுத்துக் கொள்ள முடியாதவர்கள் புரோட்டீன் பவுடர் எடுத்துக்கொள்ளலாம்.
2. உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள், ஆணழகன் போன்ற போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் புரோட்டீன் பவுடர் எடுத்துக்கொள்ளலாம்.
3. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் புரோட்டீன் பவுடர் எடுத்துக்கொள்ளலாம்.
பெரும்பாலும் உடற்பயிற்சி செய்து தசைகளின் வளர்ச்சி ஆதரிக்கவும், உடல் எடையை குறைக்கவும் புரோட்டீன் பவுடர் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
DRI (Dietary Reference Intake) அளவுப்படி ஒருவர் ஒரு நாளைக்கு உங்கள் உடல் எடையில் ஒரு கிலோவுக்கு 0.8 கிராம் புரோட்டீன் பவுடர் எடுத்துக்கொள்ளலாம்.
உதாரணமாக, 75 கிலோ எடையுள்ள நபர் - 75 கிலோ * 0.8கிராம்= 60 கிராம் புரோட்டீன் எடுத்துக் கொள்ளலாம். ஒருவேளை, நீங்கள் மசில் பிள்டிங் செய்பவராக இருந்தால், தசைகளின் வளர்ச்சியை ஆதரிக்க புரோட்டீன் அளவு ஒரு நாளைக்கு உங்கள் உடல் எடையில் ஒரு கிலோவுக்கு 1.4-2.0 கிராம் வரை மாறுபடும்.
Desclaimer - Protein Powder is a supplement, Its not a food replacement. Always Consult your Coach, Trainer or physician for Advise.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR