கோதுமை ஆரோக்கியத்திற்கு தீங்கு செய்யும்! அதிர்ச்சித் தகவல் உண்மையா?

ஆரோக்கியத்திற்கு நன்மைதரும் என்று சொல்லப்படும் உணவுகளாக இருந்தாலும், அவற்றிலும் சில தீமைகள் உள்ளன. இது கோதுமையின் கருப்புப் பக்கம்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 18, 2022, 09:49 AM IST
  • கோதுமை ஆரோக்கியத்திற்கு தீங்கு செய்யும்!
  • ரத்த அழுத்தத்திற்கும் கோதுமைக்கும் தொடர்பு
  • நீரிழிவுக்கும் கோதுமைக்கும் தொடர்பு உள்ளதா?
கோதுமை ஆரோக்கியத்திற்கு தீங்கு செய்யும்! அதிர்ச்சித் தகவல் உண்மையா? title=

கோதுமையில் பல்வேறு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இருந்தாலும், சத்துக்களின் அளவு அது வளர்ந்த மண் மற்றும் சூழ்நிலைகளை பொறுத்து மாறுகிறது.

உலகில் முதலில் பயிரிடப்பட்ட தாவரங்களில் ஒன்றான கோதுமை, உலகிலேயே அதிகம் பயன்படுத்தப்படும் தானியங்களுள் ஒன்று. பல்வேறு வித்தியாசமான இனங்களைக் கொண்ட கோதுமையில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் (Nutrition Benefits) உள்ளன.

செலினியம், மாங்கனீசு. என பல சத்துக்கள் இருந்தாலும், கோதுமையில் உள்ள பைடிக் அமிலம் காரணமாக கோதுமையிலுள்ள மாங்கானீசு சத்து குறைவாக உறிஞ்சப்படுகிறது என்பது குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒன்று. 

ALSO READ | வெள்ளை அரிசி Vs பழுப்பு அரிசி: எது சிறந்த தேர்வு; ஊட்டச்சத்து நிபுணர் கூறுவது என்ன
பாஸ்பரஸ், காப்பர், ஃபோலேட் ஃபோலிக் அமிலம் என பல சத்துக்கள் இருந்தாலும், முழு கோதுமையில் உள்ள பல சத்துக்களும் சுத்திகரிப்பு செய்யப்படும் போது நீக்கப்படுகின்றன.
முழு தானியமாக இருக்கும் கோதுமையுடன் ஒப்பிடும்போது கோதுமைமாவில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் குறைந்துவிடுகின்றன.

எனவே, ஊட்ட சத்துக்களால் செறிவூட்டப்பட்ட கோதுமைமாவே பொதுவாக விற்கப்படுகிறது என்பது, கோதுமைமாவு ஆரோக்கியமானது என்ற நம்பிக்கை உள்ளவர்களுக்கு கவலையளிக்கிறது.  

அரிசியுடன் ஒப்பிடும்போது கோதுமை செரிமாணம் ஆவதற்கு அதிக நேரம் எடுக்கும். சிலருக்கு கோதுமை செரிமாணம் ஆகாமல், வீக்கம், வயிறு உப்புசம், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

ALSO READ | Weight loss Yoga: தொப்பை குறைய ‘இந்த’ ஆசனம் செய்தால் போதும்

குளூட்டன் அலர்ஜி உள்ளவர்கள் கோதுமை மற்றும் கோதுமை பொருட்களை தவிர்க்க வேண்டும். கோதுமையினால் ஏற்படும் பக்கவிளைவுகள் பற்றிய புத்தகம் ஒன்று ஆச்சரியத்தைத் தருகிறது.

டேவிஸ் என்பவர் எழுதியுள்ள ‘Wheat Belly’ என்ற புத்தகத்தில், ‘நோய்களை உருவாக்குவதில் கோதுமையின் பங்கு முக்கியமானது’ என்று சொல்கிறார்.

நீரிழிவு, உடல் பருமன் மற்றும் இதய நோய்களுக்கு (Diseases caused by Wheat) கோதுமையும் ஒரு காரணம் என்று அவர் சொல்கிறார்.

ரத்த சர்க்கரை அளவை ஆச்சர்ப்படும் வகையில் அதிகரிக்கிறது என்றும், உண்மையில் 2 ஸ்லைஸ் கோதுமை பிரட், ஒரு சாக்லேட் பாருக்கு இணையானது என்றும் அவர் கூறுகிறார். 

ALSO READ | ராகியை நீங்கள் மிஸ் செய்தால் ஆரோக்கியம் உங்களுக்கு டாட்டா காட்டும்!

தன்னிடம் வந்த நீரிழிவு நோயாளிகளை கோதுமையைத் தவிர்க்கச் செய்து பரிசோதித்துப் பார்த்ததாக இந்த மருத்துவர் கூறுகிறார். 6 மாதங்களு க்குப் பிறகு அவர்களிடத்தில் ரத்த சர்க்கரை அளவு வெகுவாக குறைந்திருந்தது என்றும் அவர் கூறுகிறார். 

கோதுமை உணவைத் தவிர்த்ததால் மூட்டுவலி, கொலஸ்ட்ரால் போன்ற நோய்களில் இருந்தும் விடுபடலாம் என்று அவர் நம்புகிறார்.

மேலும், கிளையிஆடின், அமிலோபெக்டின் (Gliadin, Amylopectin) என உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பொருட்களும் கோதுமையில் இருக்கிறது என்றும் டேவிஸ் சொல்கிறார்.

ALSO READ | Weight loss Yoga: தொப்பை குறைய ‘இந்த’ ஆசனம் செய்தால் போதும்..!!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News