சிக்கனின் இந்த பாகம் மிகவும் ஆபத்தானதாம்... இனிமே சாப்பிடாதீங்க... இல்லையெனில்

Unhealthy Part Of Chicken: சிக்கன் ஆரோக்கியமான உணவாக இருந்தாலும் கோழியின் ஒரு பகுதி உள்ளது, இது ஆரோக்கியத்திற்கு ஆபத்துகளை ஏற்படுத்துகிறது. அவற்றை பற்றி இந்த கட்டுரையில் காண்போம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 31, 2024, 04:42 PM IST
  • கோழியின் தோலில் என்ன உள்ளது?
  • கோழியின் தோலை சாப்பிட்டால் என்ன ஆகலாம்?
  • கோழியின் தோலை ஒருபோதும் சாப்பிட வேண்டாம்:
சிக்கனின் இந்த பாகம் மிகவும் ஆபத்தானதாம்... இனிமே சாப்பிடாதீங்க... இல்லையெனில் title=

Unhealthy Part Of Chicken: சிக்கன் என்று சொன்னால் பலரின் வாயில் நீர் வடியும். கிறது. ஏனெனில் சிறுவர்கள் முதல் பெருயர்வார்கள் வரை அனைத்து வயதினருக்கும் சிக்கன் மிகவும் பிடித்த உணவாகும். அதேபோல் ஆரோக்கியமான உணவு என்று பலர் கருதும் உணவுகளில் சிக்கனும் ஒன்றாகும். ஏனெனில் இது மிகவும் சுவையாக இருப்பதுடன், இதில் புரத சத்தும் அதிகளவு நிறைந்துள்ளது. எனினும் கோழி இறைச்சி ஒரு ஆரோக்கியமான இறைச்சி என்றாலும், அதன் ஒரு பகுதி உடலுக்கு தீங்கு விளைவிக்கும். இதை சாப்பிடுவதால் உடல் நலத்தில் பக்க விளைவுகள் ஏற்படலாம். ஆம், நீங்கள் நினைப்பது சரிதான். நாங்கள் கோழி தோல் பற்றி தான் பேசுகிறோம். இப்போது இதைப் பற்றி விரிவாகத் தெரிந்துக்கொள்வோம்.

கோழியின் தோலில் என்ன உள்ளது?
கோழி தோலில் தீங்கு விளைவிக்கும் கொழுப்பு அதிகளவு உள்ளது. இதனால் நாம் எந்த ஒரு ஊட்டச்சத்தையும் பெறுவதில்லை. மேலும் நிபுணர்களின் கூற்றுப்படி, இதில் அதிக அளவு கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்பு உள்ளது. இதில் சத்தான பொருட்கள் எதுவும் இல்லை, எனவே இது கோழியின் மிகவும் பயனற்ற பகுதியாகும். இது குளோரின் எச்சங்களைக் கொண்டிருக்கலாம், அவை சிக்கனின் தோற்றத்தை புதியது போல வைத்திருக்கப் பயன்படுத்தப்படுகின்றன. இரண்டாவதாக, கோழியை கவர்ச்சிகரமானதாக காட்டுவதற்கு கடைக்காரர்கள் அதன் மீது ரசாயனங்களைத் தெளித்து விற்பனை செய்கின்றனர்.

மேலும் படிக்க | கண்களை பாதிக்கும் புற ஊதாக்கதிர்களில் இருந்து தப்பிக்க 8 வழிகள்..!

கோழியின் தோலை சாப்பிட்டால் என்ன ஆகலாம்?
கோழியின் தோலை உண்பதால் உடலில் தீங்கு விளைவிக்கும் கொழுப்பு சேரும் மற்றும் உங்களது உடல் எடை கூடலாம். மேலும், கோழியின் தோலை உண்பதால் உயர் ரத்த அழுத்தம், இதய நோய் போன்ற நோய்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது. USDA இன் ஆராய்ச்சியின் படி, தோலை நீக்கி சமைத்த ஒரு கப் கோழியில் 231 கலோரிகள் உள்ளன, அதே சமயம் தோல் நீக்காமல் சமைக்கப்பட்ட கப் கோழியில் 276 கலோரிகள் உள்ளன என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

கோழியின் தோலை ஒருபோதும் சாப்பிட வேண்டாம்:
சிலருக்கு கோழித் தோல் பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை. இது கறியின் சுவையை இரட்டிப்பாக்கும். எனினும் கோழியின் தோலைச் சாப்பிடாமல் இருப்பது நல்லது. இருப்பினும் ஆரோக்கியமான முறையில் சாப்பிட இரண்டு அல்லது மூன்று முறை கழுவி, உப்பு மற்றும் மஞ்சள் சேர்த்து சமைக்கலாம். ஆனால் கோழி தோலை அதிகம் சாப்பிட வேண்டாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதிகமாக சாப்பிடுவது உங்கள் உடலில் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | தினமும் ஓடினால் நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரை கட்டுக்குள் வருமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News