கூட்ட நெரிசல்கள் அதிகம் உள்ள இடங்களிலேயே திருட்டு நிகழ்வுகளும் அதிகம் நடக்கின்றன. கோவில் திருவிழா, விளையாட்டு மைதானம், அரங்கங்கள் போன்ற இடங்களில் கூட்டம் இருப்பதை காட்டிலும் அதிக நெரிசல் உள்ள பகுதி இரயில் நிலையம், விமான நிலையம் போன்ற பிரயாண நிலையங்கள் தான்.
ஏன் இங்கு திருடர்கள் இருக்கிறார்கள்?... ஏனெனில் இங்கு வரும் மக்கள் அதிக நேரங்களை அங்கு செலவிடுவதில்லை, அவசரத்தில் வரும் மக்கள் அவசர அவசரமாக தங்களது கைக்கடங்கா உடைமகளை கொண்டு பயணிக்கு முற்படுகின்றனர்.
இந்த அவசரம் தான் திருடர்களின் மூலதனம். அவர்கள் திருடர்கள் தான என யூகிப்பதற்குள் நம்மை ஏமாற்றி விடுவார்கள்... பெரும்பாலும் அவர்கள் பயண்படுத்தும் யுக்திகளை தான் கீழே தொகுத்துள்ளோம்,
- கவணச்சிதறல்: பிரயாணிகளின் கவணத்தினை சிதறடித்து அவர்கள் உடைமைகளை திருடதல். எடுத்துக்காட்டாக, விமர்சையாக ஏதேனும் ஒரு விஷயத்தினை கூறி அனைவரது கவனத்தையும் ஒரு நபர ஈர்க்க, அவரது நண்பர் குறிப்பிட பயணிகளிடம் உடமைகளை திருடுதல்.
- மொபைல்களை திருடுதல்: தற்போது வெயில் காலம் வேறு, ரயில்களில் பயணிப்பவர்கள் தங்களது பெட்டியிலும் வெயிலின் தாக்கத்தினை அனுபவித்து தான் ஆகவேண்டும், ஆகவே சற்று இலைப்பாற வாயில் பக்கம் சென்று காற்ற வாங்குவது வழக்கம். மறதியாக நமது மொபைல் போன்களை சார்ஜ் செய்து அங்கேயே விட்டு சென்றால் அவ்வளவு தான்.
- செல்ப்பி திருடர்கள்: சிலர் எங்கும் செல்ப்பி எடுக்கும் பழக்கம் கொண்டிருப்பர். நிலையத்தில் இருக்கும் சில நல்ல உள்ளங்கள் தானாக வந்து தான் புகைப்படம் எடுத்து தருவதாக கூறுவர். அவர்களிடன் போனை கொடுக்கலாமா?... கொடுக்கலாம், அதே நேரத்தில் உங்கள் பின்னால் வந்து செல்பவர்கள் மீதும் ஒரு கண் வைத்துக்கொள்ளளுங்கள்.
- ATM உதவியாளன்: பயணத்தின் போது தான் நமக்கு ATM போக வேண்டி வரும், ஆனால் அங்கு இருக்கும் கூட்டத்தில் எப்படி.... வரிசையில் முன் இருப்பவர்களின் உதவியை நாம் நாடலாம், அந்த உதவி ஆபத்தாக கூட முடியலாம். ஏனெனில் அவர்கள் அதிகமாக பணம் எடுத்தாலும் அந்த நேரத்தில் நம்மாள் கண்டறிய முடியாது.
இன்னும் பல வித்தைகளை கைதேர்ந்த விதத்தில் கையாண்டு வருகிறார்கள் நம் நண்பர்கள், அவர்களிடம் இருந்து சற்று ஜாக்கிரதேயாகவே இருங்கள்.