பொதுப்பிரிவில் நலிவடைந்தோருக்கு 10% இடஒதுக்கீடு பிப்., 1 முதல் அமல்....

அரசு வேலைவாய்ப்புகளில், பொதுப்பிரிவில் நலிவடைந்தோருக்கான பத்து சதவீத இட ஒதுக்கீடு பிப்ரவரி ஒன்றாம் தேதியில் இருந்து அமல்படுத்தப்பட இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 

Last Updated : Jan 21, 2019, 11:19 AM IST
பொதுப்பிரிவில் நலிவடைந்தோருக்கு 10% இடஒதுக்கீடு பிப்., 1 முதல் அமல்.... title=

அரசு வேலைவாய்ப்புகளில், பொதுப்பிரிவில் நலிவடைந்தோருக்கான பத்து சதவீத இட ஒதுக்கீடு பிப்ரவரி ஒன்றாம் தேதியில் இருந்து அமல்படுத்தப்பட இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 

பொதுப்பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட திருத்த மசோதா கடும் அமளி மற்றும் எதிர்ப்புக்கிடையே பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார். இதன் காரணமாக வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் இடஒதுக்கீட்டு சட்டத்தை அமல்படுத்துவதற்கான அரசாணையை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து காலியாக உள்ள அரசுப் பணிகள் மற்றும் சேவைகளில் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அரசு வேலைவாய்ப்புகளில், பொதுப்பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும்  மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

 

Trending News